பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு: "குழந்தைத் திருமணமில்லா இந்தியா" - அனைத்துப் பள்ளிகளிலும் நாளை காலை இறைவணக்கக் கூட்டத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஏற்க வேண்டிய உறுதிமொழி!
Child Marriage Free India Pledge Tamil Text 27.11.2026: குழந்தைத் திருமணத்தைத் தடுக்கப் பள்ளிகளில் நாளை சிறப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி - முழு வாசகம் பதிவிறக்கம்!
நாளை (27.11.2026) அனைத்துப் பள்ளிகளிலும் காலை இறைவணக்கக் கூட்டத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஏற்க வேண்டிய 'குழந்தைத் திருமணத்திற்கு எதிரான உறுதிமொழி' (#குழந்தைதிருமணமில்லாஇந்தியா) முழு வாசகம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது
நாளை (27.11.2026 - வெள்ளிக்கிழமை) அனைத்துப் பள்ளிகளிலும் நடைபெறும் காலை இறைவணக்கக் கூட்டத்தில் (Morning Assembly) மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் "குழந்தைத் திருமணத்திற்கு எதிரான உறுதிமொழி" ஏற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி இறைவணக்கக் கூட்டத்தில் வாசிக்கப்பட வேண்டிய முழு உறுதிமொழி வாசகம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
குழந்தைத் திருமணத்திற்கு எதிரான உறுதிமொழி (27.11.2026):
“குழந்தைத் திருமணம் என்பது சமூகத்திற்குக் கேடு விளைவிக்கும் ஒரு தீய செயலாகும். இது பெண் குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சியைத் தடுத்து, அவர்களின் கனவுகளை நோக்கிச் செல்வதற்குத் தடையாகவும் உள்ளது.
எனவே, நான்
- குழந்தைத் திருமணத்தைத் தடுப்பதற்குத் தேவையான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வேன் என உறுதியளிக்கிறேன்.
- என் குடும்பம், சுற்றுப்புறம் மற்றும் சமூகத்தில் குழந்தைத் திருமணம் நடைபெறாதபடி உறுதி செய்வேன்.
- குழந்தைத் திருமணம் நடத்துவதற்கான முயற்சி மேற்கொள்வதாகத் தெரியவந்தால் உடனடியாகப் பஞ்சாயத்து மற்றும் அரசு அதிகாரிகளிடம் புகார் அளிப்பேன்.
- குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு மற்றும் அவர்களின் வளமான எதிர்காலத்திற்காக நான் என்றும் போராடுவேன்.
- குழந்தைத் திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் முயற்சிக்கு நான் உறுதுணையாக இருப்பேன் என உறுதியளிக்கிறேன்.”
#குழந்தைதிருமணமில்லாஇந்தியா
பள்ளிகளுக்கான அறிவுறுத்தல்:
அனைத்து வகைப் பள்ளிகளிலும் 27.11.2026 அன்று காலை இறைவணக்கக் கூட்டத்தின் போது மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் மேற்கண்ட உறுதிமொழியை ஒருமனதாக எடுத்துக்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கைகள், அரசாணைகள் (G.O.), மாணவர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் ஆசிரியர் நலன் சார்ந்த அனைத்து உடனுக்குடனான செய்திகளையும் உடனே பெற தொடர்ந்து நமது இணையதளத்தைப் பின்தொடருங்கள்!


No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.