பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்குப் கல்வியாளர்கள் சங்கமம் அமைப்பின் BUDGET கோரிக்கைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, April 9, 2022

பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்குப் கல்வியாளர்கள் சங்கமம் அமைப்பின் BUDGET கோரிக்கைகள்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்குப் *கல்வியாளர்கள் சங்கமம்* அமைப்பின் *BUDGET கோரிக்கைகள்*

📝ஆசிரியர்கள்

சாபமாகப் பார்க்கும் *EMIS ஒரு வரம் என்பதைப் புரிய வைக்க வேண்டும்.*

அதற்கேற்ப அதன் *தொழில்நுட்பங்களை மேம்படுத்த வேண்டும்.*

📝 ஆசிரியர் மற்றும் அலுவலர்களுக்கு *சிறப்பு குறைதீர் பிரிவு* அறிவிக்க வேண்டும்.

📝 *பள்ளிநாட்களில் பயிற்சி கூடாது* என்பதை அறிவிக்க வேண்டும்.

📝 *கோடை விடுமுறையில் மட்டுமே கலந்தாய்வு* நடைபெறும் என்பதை உறுதி செய்தல்

📝ஆசிரியர்களுக்குப் *பணிப்பாதுகாப்புச் சட்டம்* அறிவித்தல்

📝 அரசுப்பள்ளிகளுக்கு வழங்கப்படும் *விலையில்லாப் பொருட்களை சம்பந்தப்பட்ட CRC மையங்கள்* வழியே வழங்கிட வகை செய்தல்.

📝அரசுப்பள்ளிகளுக்கு.*ஒரே நிறம், ஒரே தரம்* என்னும் அடிப்படையில் *தொடக்க நடுநிலைப்பள்ளிகளுக்கு ஒரு நிறமும்*, *உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு ஒரு நிறமும்* அறிவித்து செயல்படுத்தல்

📝 *மகப்பேறுவிடுப்பு* இடங்களில் *பதிலி ஆசிரியர்களை* நியமித்தல் 📝 *மண்டல அளவில் இணை இயக்குநர்களை பணியிட மாற்றம்* செய்தல்

📝தமிழ்நாட்டிற்குள்ளேயே *இருவகையான ஊதியம்* பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கான *ஊதியப் பிரச்சினையைச் சரி செய்தல்*

📝தேர்வுமுறையில் *6 ம் வகுப்பு முதலே OMR sheet அறிமுகம்* செய்தல்

📝நடுநிலைப் பள்ளிகளுக்கு *ஒன்று*,

உயர்நிலைப்பள்ளிகளுக்கு *இரண்டு*,

மேல்நிலைப்பள்ளிகளுக்கு *மூன்று* என *SMART CLASS ROOM* வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

📝 ஒவ்வொரு *கல்வி மாவட்டத்திற்கும் ஒரு மாதிரிப்பள்ளியை* ஏற்படுத்த வேண்டும்

📝 *அரசுப்பள்ளிகள் அத்தனையிலும் தமிழ்வழிக்கல்வி* செயல்படுகிறது என்பதை உறுதி செய்ய வேண்டும்

📝 *தொடக்கப்பள்ளிகள்* அத்தனையும் *தாய்மொழியிலேயே செயல்பட சட்ட முன்வடிவைக்* கொண்டுவர வேண்டும். 📝 *BEO அலுவலங்களில்* போதிய *அமைச்சுப் பணியாளர்களை நியமித்தல்*

📝தொடக்கப் பள்ளிகளில் *வகுப்புக்கு அல்லது பாடத்திற்கு ஓர் ஆசிரியர்* என்பதை உறுதி செய்தல்

📝அனைத்துப் பள்ளிகளிலும் *நிரந்தரத் துப்புரவுப் பணியாளர்களை* நியமித்தல்

📝சமூகநலத்துறை மூலம் *LKG , UKG க்கு தனி ஆசிரியர்கள்*

📝 *20 ஆண்டுகளுக்கு மேலாகப்* எவ்விதப் பணிப்பாதுகாப்பும் இன்றிப் பணியாற்றும் *171 தொழிற்கல்வி ஆசிரியர்களின்* நியமனத்தை உறுதி செய்தல்

📝ஒவ்வொரு *கல்வி மாவட்டத்திற்கும் உளவியல் நிபுணர்கள் குழுவை* ஏற்படுத்துதல்

📝 *மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் முதன்மைக்கல்வி அலுவலர்களில்* *தனி வாகனம்* இல்லாமல் இருப்பவர்களுக்கு வாகனம் வழங்கிட வகை செய்ய வேண்டும்.

📝பள்ளிக்கல்வித்துறையின் *அனைத்து அரசாணைகளும் தமிழில் மட்டுமே* இருந்திட உத்தரவிட வேண்டும்

📝 பள்ளி மாணவர்களுக்குப் பாடநூல்கள் வழங்கும்பொழுது, *பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கும் தனிப் பாடநூல்கள்* வழங்கிட வகை செய்ய வேண்டும் 📝 அனைத்துப் பள்ளிகளிலும் *இணையதள வசதியுடன் கூடிய பிராட்பேண்ட்* சேவையை *BSNL நிறுவனம்* மூலம் வழங்கிட வேண்டும்

📝 அனைத்து நடுநிலைப்பள்ளிகளிலும் அறிவியல் ஆய்வகம் ஏற்படுத்திட வகை செய்ய வேண்டும்

📝LKG , UKG செயல்படும் பள்ளிகளில் *ஆயாக்களை நியமனம்* செய்ய வழிவகை செய்ய வேண்டும்

📝 *மாணவர் சேர்க்கையில் சாதனை* செய்யும் பள்ளிகளுக்குப் துறையின் சார்பில் *பாராட்டுக் கேடயமும், பள்ளி வளர்ச்சிக்கு ஊக்கத்தொகையும்* வழங்கிட வேண்டும்.

📝 *பாலியல் அத்துமீறல்களில்* ஈடுபடும் *ஆசிரியர்களை பணிநீக்கமும், கல்வித் தகுதி நீக்கமும்* செய்ய வகை செய்ய வேண்டும்.

📝 நடத்தைக் கோளாறுகளுக்கு ஆளாகும் மாணவர்களை **உளவியல் ஆலோசனைக்கு* அனுப்பிடவும் வகை செய்யும் அறிவிப்பு வேண்டும்

📝 *அரசு உதவிபெறும் பள்ளிகளில்* உள்ள *உபரிப் பணியிடங்களை அரசுப் பள்ளிகளுக்கு ஈர்த்துக்கொள்ள* வகை செய்ய வேண்டும்

📝 இனிவரும் காலங்களில் *ஆசிரியர் நியமனங்களில் தொகுப்பூதியம் என்பதே இருக்கக் கூடாது* என்னும் நிலை வேண்டும். ஒரே பணிக்கு இரு ஊதியம் என்பது மனச்சோர்வை அளிக்கும்.

📝 ஆண்டிற்கு நான்கு சீருடைகள் வழங்குவதற்குப் பதிலாக *தரமான இரண்டு சீருடைகள்* வழங்கிட வகை செய்ய வேண்டும். 📝 *TET தகுதித் தேர்வில்* முன்னரே தேர்ச்சி பெற்றவர்களுக்கு *பணிக்கான நேர்காணலில் கூடுதலாக 5 மதிப்பெண்களை* வழங்கிட வகை செய்ய வேண்டும்.

📝 அனைத்து நடுநிலைப்பள்ளிகளிலும் *ஒரு கணினி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்* நியமனம் செய்யப்பட வேண்டும்.

📝 *நான் முதல்வன்* திட்டத்தின் கீழ் பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் சிறப்புப் பயிற்சிகளை அளிக்க வேண்டும்

📝 *நம் பள்ளி* *நம் பெருமை* திட்டத்தின் கீழ் *அனைத்துப் பள்ளிகளிலும் முன்னாள் மாணவர்கள் அமைப்பை* ஏற்படுத்தி பள்ளியின் வளர்ச்சிக்கு உதவ வகை செய்தல்

📝 ஒவ்வொரு மேல்நிலைப் பள்ளிக்கும் *தனி நூலகர்களை நியமனம்* செய்தல் மூலம் மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தல் மேற்கண்ட கோரிக்கைகளில் *நிதிசாராத திட்டங்களும் அதிகம்* உண்டு

அவற்றைத் தாங்கள் பரிசீலனை செய்யும்படி கல்வியாளர்கள் சங்கமம் அமைப்பின் சார்பில் கேட்டுக் கொள்கின்றேன்

சிகரம்சதிஷ்குமார்

நிறுவனர்

கல்வியாளர்கள் சங்கமம்

1 comment:

  1. அனைத்து கோரிக்கைகளும் மிக தேவை . மிக சிறப்பான கோரிக்கைகள் . நன்றி

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.