ஒரு மாணவருக்கு 2 ஆசிரியர்கள்; இப்படியும் நகராட்சிப்பள்ளி! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, April 26, 2022

ஒரு மாணவருக்கு 2 ஆசிரியர்கள்; இப்படியும் நகராட்சிப்பள்ளி!

In Udumalai, it is surprising that there is a municipal primary school with only two teachers for one student.

For that student in fourth grade, two teachers are on duty. If the student takes a vacation, there is a strange situation of going to school on holiday.

The children there were also studying in this school. The enrollment in this school was low as they were given alternative space for the expansion of the bus stand. Steps are being taken to increase the number of students, they said. ஒரு மாணவருக்கு 2 ஆசிரியர்கள்

உடுமலையில், ஒரே ஒரு மாணவருக்காக, இரு ஆசிரியர்களுடன் நகராட்சி துவக்கப்பள்ளி செயல்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர் மாவட்டம், உடுமலை நகரில், பழநி பாதை நகராட்சி துவக்கப்பள்ளி ஒரே ஒரு மாணவனுக்காக செயல்படுகிறது.

நான்காம் வகுப்பு படிக்கும் அந்த மாணவனுக்காக, இரண்டு ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். அந்த மாணவன் விடுமுறை எடுத்தால், பள்ளிக்கே விடுமுறை என்ற விசித்திர நிலை உள்ளது.

கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

உடுமலை நகரின், வி.பி.புரத்தில், வருவாய் துறைக்கு சொந்தமான ஓடைப்புறம்போக்கு நிலத்தில் அதிக மக்கள் குடியிருந்தனர்.

அங்கிருந்த குழந்தைகளே இப்பள்ளியில் படித்தும் வந்தனர்.பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கத்திற்காக, அவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டதால், இப்பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்தது. மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.