பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை எப்போது? : அமைச்சர் பதில் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, March 29, 2022

பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை எப்போது? : அமைச்சர் பதில்

பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை எப்போது என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு உயர்படிப்பு பட்டயம், பட்ட படிப்பு படிக்க செல்லும் போது, மாத மாதம் ரூ.1000 அவர்களது கணக்கில் செலுத்தப்படும் என்றார்.

இதையும் படிக்க | நடப்பாண்டு 18,000 வகுப்பறைகள் கட்ட திட்டம்: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

கொரோனா கால கட்டத்தில் தாமதமாக தான் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. மே 5ம் தேதி முதல் 28ம் தேதி வரை தேர்வுகள் நடக்கிறது. அது முடிந்த பிறகு பாடதிட்டங்கள் முழுமையாக முடிக்கப்பட வேண்டும். எனவே கோடை விடுமுறை அளிப்பது தொடர்பாக துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த பின்னர் தான் சொல்ல முடியும் என தெரிவித்தார். கடந்த மாதம் சேலத்தில் நடந்த மண்டல ஆய்வின் போது மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் கையேடுகள் அறிமுகப்படுத்தியுள்ளோம். பொருளாதார ரீதியாக பின்தங்கிய 44 பகுதிகளில் சுமார் 2.25 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 1100 ஆசிரியர்களுக்கு, எவ்வாறு பயிற்றுவிக்க வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகள் மனரீதியாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கும் வகையில் முதற்கட்டமாக மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயிற்சி கையெடுகள் வழங்கப்பட்டுள்ளது’ என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.