குரூப் 4 தேர்வு - முதல் நாளில் விண்ணப்பித்தோர் எண்ணிக்கை! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, March 31, 2022

குரூப் 4 தேர்வு - முதல் நாளில் விண்ணப்பித்தோர் எண்ணிக்கை!

குரூப் 4 பதவியில் 7382 காலி பணி இடங்களுக்கான தேர்வு: ஆன்லைனில் விண்ணப்பித்தல் தொடங்கியது.! முதல் நாளில் 15 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 பதவியில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர்(விஏஓ) 274 பதவிகள், ஜூனியர் அசிஸ்டெண்ட் 3593(பிணையமற்றது), ஜூனியர் அசிஸ்டெண்ட் 88(பிணையம்), தட்டச்சர் 2108, சுருக்கெழுத்து தட்டச்சர்(கிரேடு 3) 1024, ஸ்டோர் கீப்பர் 1 என 7138 இடங்களும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஆகியவற்றின் கீழ் வரும் ஜூனியர் அசிஸ்டெண்ட், பில் கலெக்டர், சுருக்கெழுத்து தட்டச்சர் பதவியில் 163 இடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் குரூப் 4 பதவியில் 7,301 இடங்கள் போட்டி தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. மேலும் 81 இடங்கள் விளையாட்டு வீரர்களுக்கான இடங்களும் நிரப்பப்பட உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி நேற்று அறிவித்தது. அறிவிப்பு வெளியானது முதல் ஆன்லைனில்(www.tnpsc.gov.in, www.tnpscexams.in) விண்ணப்பித்தல் பணி தொடங்கியது. ‘இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க 10ம் வகுப்பு தேர்ச்சி கல்வி தகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், முதல் நாளான நேற்று நிறைய பேர் போட்டி போட்டு விண்ணப்பித்தனர். நேற்று ஒரு நாள் மட்டும் சுமார் 15 ஆயிரம் பேர் வரை விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இன்று காலையும் நிறைய பேர் விண்ணப்பித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.