2,774 ஆசிரியர்களை நியமிக்க, பள்ளிக்கல்வி துறை உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, March 25, 2022

2,774 ஆசிரியர்களை நியமிக்க, பள்ளிக்கல்வி துறை உத்தரவு

அரசு மேல்நிலை பள்ளிகளில், 2,774 முதுநிலை ஆசிரியர்களை தற்காலிகமாக நியமிக்க, பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளிகளில், முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள், ஆயிரக்கணக்கில் காலியாக உள்ளன.இதனால், நடப்பு கல்வி ஆண்டில், பொது தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு, பாடம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால், அரசு பள்ளி மாணவர்கள், உயர்கல்விக்கு செல்வதில் சிக்கல் ஏற்படும் என்பதால், கல்வி ஆண்டின் துவக்கத்திலேயே, தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, ஆசிரியர் சங்கங்கள் மற்றும் கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.ஆனால், பள்ளிக்கல்வி அதிகாரிகள் அலட்சியமாக இருந்து விட்டனர். இந்நிலையில், பொதுத்தேர்வு நெருங்கும் நிலையில், மாணவர்களின் கல்வி மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளதை தாமதமாக அறிந்த, பள்ளிக்கல்வி துறை, தற்காலிகமாக முதுநிலை ஆசிரியர்களை நியமிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

இதன்படி, மாநிலம் முழுதும் 2,774 முதுநிலை ஆசிரியர்களை, தேவைப்படும் இடங்களில், தேவைப்படும் பாடங்களுக்கு, ஐந்து மாதங்களுக்கு மட்டும், தற்காலிக ஆசிரியர்களாக நியமித்துக் கொள்ள, பள்ளிக்கல்வி துறையின் மேல்நிலை பள்ளி இணை இயக்குனர் ராமசாமி உத்தரவிட்டுள்ளார்.பொது தேர்வு நெருங்கும் நிலையில், இது தாமதமான முடிவு என்று, பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.