தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் - செய்தி வெளியீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, February 9, 2022

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் - செய்தி வெளியீடு

செய்தி வெளியீடு

செய்தி வெளியீடு : 33/2022

நாள்: 08.02.2022

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் மது விற்க தடை

அனைத்து மாவட்டங்களுக்கு உட்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத் தேர்தல் 19.02.2022 அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளதால், வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் 17.02.2022 காலை 10 மணி முதல் 19.02.2022 நள்ளிரவு 12 மணி வரையிலும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 22.02.2022 அன்று வாக்கு எண்ணுகை நடைபெறும் பகுதிகளிலும், மேற்படி பகுதிகளுக்கு அருகில் 5 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளிலும் மதுக்கூடம் மற்றும் மதுபானக்கடைகள் மூடியிருக்க, உரிய ஆணைகள் வெளியிட அரசை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டதன்படி, மேற்படி நாட்களில் தேர்தல் நடைபெறும் பகுதிகளிலும், வாக்கு எண்ணுகை நடைபெறும் பகுதிகளிலும், அப்பகுதிக்கு அருகில் 5 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளிலும், பீர், ஒமின் மற்றும் இந்திய தயாரிப்பு மதுபானங்கள் விற்பனை செய்யும் மதுபானக்கடைகள் மற்றும் மதுக்கூடம் மூடுவதற்கு அரசாணை எண்.16, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, நாள் 04.02.2022-ல் அரசு உத்திரவிட்டுள்ளது.

எனவே, வாக்குப்பதிவு நாளில் தேர்தல் நடைபெறும் பகுதிகளிலும், வாக்கு எண்ணுகை நாளில் வாக்குகள் எண்ணப்படும் பகுதிகளிலும், அப்பகுதிகளுக்கு அருகில் 5 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளிலும், பீர், ஒமின் மற்றும் இந்திய தயாரிப்பு மதுபானங்கள் விற்பனை செய்வதோ அல்லது மதுக்கூடம் திறப்பதோ அல்லது அதனை இப்பகுதிகளில் எடுத்துச் செல்வதோ தடை செய்யப்பட்டுள்ளது என்றும் மீறுபவர்கள் மீது உரிய சட்டம் மற்றும் விதிகளின்படி நடவடிக்கை எடுக்க காவல் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.