தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜாக்) : 03.11.2026
03.11.2026 அன்று சென்னையில் நடைபெற்ற டிட்டோஜாக் மாநிலப் பொதுக்குழுக் கூட்ட முடிவுகள்
தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு டிட்டோஜாக் பேரமைப்பின் மாநிலப் பொதுக்குழு கூட்டம் 03.11.2026 செவ்வாய் அன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி முடிய சென்னை தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழக ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் திரு.அ.வின்சென்ட் பால்ராஜ் இக்கூட்டத்திற்கு தலைமை ஏற்றார்.
சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் ஆசிரியர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 50 என நிர்ணயம் செய்திடக் கோருதல் +
பணிக்காலத்தின் அடிப்படையில் ஆண்டுக்கு ஒரு மதிப்பெண் என்ற அடிப்படையில் வெயிட்டெஜ் மதிப்பெண்கள் வழங்கக் கோருதல்
தொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கு குறிப்பாக பெண் ஆசிரியர்களுக்கு கடும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ள அரசாணை 243-ஐ இரத்து செய்தல்.
TAPS திட்டத்திற்கான முழுமையான அரசாணை வெளியிட்டு நடைமுறைப்படுத்திடக் கோருதல்
+ பங்களிப்பு இல்லாத பழைய ஓய்வூதியத் திட்டம் தேர்தல் வாக்குறுதியின்படி அமல்படுத்திடக் கோருதல்
+ உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் மீண்டும் வழங்கிட வேண்டுதல் +
இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு களைந்து மத்திய அரசுக்கு இணையான ஊதியம் 01.01.2006 முதல் வழங்க வேண்டுதல்
இடைநிலை ஆசிரியர் Pay Cell முடிந்து 2 ஆண்டுகளாக ஆண்டு ஊதிய உயர்வு கூட இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள நிலையினைக் கருத்தில் கொண்டு கூடுதலாக 5 Cell நீட்டித்து ஆணை வழங்க வேண்டுதல்
ரூ.5400 தர ஊதிய பாதிப்பு களைதல் மற்றும் ரூ.5400 தர ஊதிய வழக்கின் தீர்ப்பினை எதிர்த்து செய்யப்பட்டுள்ள மேல் முறையீட்டினை திரும்பப் பெற்று தனி நீதிபதியின் தீர்ப்பினை அமல்படுத்த வேண்டுதல்
பி.லிட். பி.எட் / பி.காம். பி.எட் / எம்.காம் பி.எட் / பி.ஏ.எக்கனாமிக்ஸ் பி.எட். பாடப்பிரிவுகளில் பட்டம் பெற்று உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் பெற்றவர்களுக்கு இருநீதிபதிகள் அமர்வு வழங்கியுள்ள தீர்ப்பினை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்வதைக் கைவிட்டு, தொடர்ந்து ஊக்க ஊதியம் வழங்கிட வேண்டுதல்
10.03.2020க்கு முன்னர் உயர்கல்வி முடித்து ஊக்க ஊதிய உயர்வு வழங்காமல் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் உரிய ஊக்க ஊதிய உயர்வு வழங்க கோருதல்
2004 முதல் 2006 முடிய தொகுப்பூதிய காலம் காலமுறையில் பணிக்காலமாக ஆணை வேண்டல்
* NHIS திட்டத்தின் கீழ் முழுமையான கட்டணமில்லா சிகிச்சை அளிக்க ஆணை வழங்குதல்
ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அனைத்தையும் தகுதி பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு காலமுறை ஊதியத்தில் நியமனம் செய்திட வேண்டுதல்
மாண்புமிகு.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தேர்தல் கால வாக்குறுதியின்படி பகுதி நேர ஆசிரியர்கள் அனைவரையும் பணி நிரந்தரப்படுத்திட கோருதல்
மாண்புமிகு.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் அறிவிப்பின்படி ஆசிரியர்களின் குறைகளைத் தீர்த்திடும் வகையில் குறைதீர் குழுவினை அமைத்து விரைந்து தீர்வுகாண வேண்டுதல்
மாண்புமிகு.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சட்டப்பேரவையில் அறிவித்தபடி 17.07.2025, 18.07.2025 உள்ளிட்ட தேதிகளில் அறவழியில் போராடிய ஆசிரியர்கள் மீதான காவல்துறை வழக்குகளைத் திரும்பப் பெறுதல்
காலை உணவுத் திட்டம் மேற்பார்வை பணிகளில் இருந்து ஆசிரியர்களை விடுவித்தல், சொத்து மதிப்பு பதிவேற்றம் என்ற பெயரில் எவ்வித வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடாமல் ஆசிரியர்கள் மத்தியில் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தி அரசின் மீதான அதிருப்தியினை ஏற்படுத்தும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டுதல்
* கல்வித்துறையில் தணிக்கை என்ற பெயரில் ஊழல் செய்து வரும் அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துதல்
ஆகிய கோரிக்கைகள் தொடர்பாக பொதுக்குழு உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்தனர்.
ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 20.08.2026 அன்று வட்டார அளவிலான ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம். தொடர்ந்து மாண்புமிகு.நிதியமைச்சர், மாண்புமிகு.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், மதிப்புமிகு.நிதித்துறை முதன்மைச் செயலாளர், மதிப்புமிகு.பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் ஆகியோரை சந்தித்து கோரிக்கைகள் குறித்து பேசிட நேரம் ஒதுக்கீடு செய்திட விண்ணப்பம் அளித்தோம். எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலையில் இன்று கூடிய டிட்டோஜாக் மாநிலப் பொதுக்குழு அரசு அழைத்துப் பேசி நமது கோரிக்கைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி கீழ்க்கண்ட போராட்ட நடவடிக்கைகளை ஒருமனதாக முடிவெடுத்து அறிவிக்கிறது.
7. இது தொடர்பாக மேலும் ஒரு நியாயமான கருத்தை தங்களின் மேலான பார்வைக்கு சமர்ப்பிக்கின்றோம். ஆசிரியர்கள் தொடர்ந்து பல ஆண்டுகள் பணிபுரிந்து வந்தால் அவர்களின் கற்பிக்கும் திறனும் தகுதியும், அதிகரித்துக் கொண்டே செல்லும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை என்பதை தாங்களும் அறிவீர்கள்.
ஆகவே TET தேர்வு எழுதிய மற்றும் எழுதும் மேற்கூறிய ஒவ்வொரு ஆசிரியரின் பணிக்காலத்தையும் கணக்கில் கொண்டு ஓராண்டு பணிக்கு ஒரு மதிப்பெண் என்ற முறையில் மதிப்பெண்களை கணக்கிட்டு அதையும் அவர்கள் எழுதிய, எழுதும் எழுத்துத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களுடன் சேர்த்து தேர்ச்சியை அறிவிக்க வேண்டுகிறோம்.
8. இதைப்போன்றே, மேற்கூறிய ஆசிரியர்கள் தேவைக்கு மேலான உயர்கல்வித் தகுதி பெற்றிருந்தால் அவையும் அவரது கற்பித்தல் தகுதியை உயர்த்தும் என்ற அடிப்படையில், அதற்கும் ஒரு ஐந்து மதிப்பெண்கள் வழங்கி TET தேர்வு எழுதும் பணியில் இருக்கும் ஆசிரியர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றிட வழிவகை காணுமாறு தங்களை மிகவும் கனிவுடன் வேண்டுகிறோம்.
9. TET தேர்வு எழுதும் பட்டதாரி ஆசிரியர்கள் - அவர்கள் பயின்ற பாடங்களில் இருந்து மட்டுமே 75 மதிப்பெண்களுக்குரிய கேள்விகள் - TET வினாத்தாள்களில் இடம் பெறத் தக்க வகையில் வினாத்தாள்களை சீரமைக்க வேண்டுகிறோம்.
10. எங்களுடைய இந்த நியாயமான, மிகச்சரியான இந்த ஆலோசனைகளை இம்மாதம் 12-ஆம் தேதி (12.10.2026) அறிவித்த TET தேர்வு முடிவுகளுக்கும் உட்படுத்தி அதன் அடிப்படையில் மீண்டும் ஒரு திருத்தி அமைக்கப்பட்ட TET தேர்வு முடிவுகள் என்று அறிவிக்க வேண்டுகிறோம்.




No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.