தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS) – அரசாணை விளக்கமும் தெளிவும் - AIFETO Tamil Nadu Assured Pension Scheme (TAPS) – Government Order: Explanation and Clarification – AIFETO
*தமிழக ஆசிரியர் கூட்டணி, அரசு அறிந்தேற்பு எண்:- 36/2001.*
*தமிழ்நாடு அரசு நிதித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS) – அரசாணை எண்:-111/நாள் 16.06.2026 விளக்கமும் தெளிவும்:-*
*பழைய ஓய்வூதியத் திட்டம் பற்றி இந்த அரசாணையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.*
*CPSதிட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள் பணி நிறைவு பெற்றவர்கள் முழுத் தொகையும் பெற வேண்டும் என்றால் CPS திட்ட நடைமுறைகளின் படி உடன் பெற்றுக் கொள்ளலாம்.*
*01.04.2004 க்குப் பிறகு முறையான ஊதியத்தில் பணி நியமனம் பெற்றுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் CPS திட்டத்தில் இருப்பவர்கள், 01.01.2026 பிறகு பணி நிறைவு பெற்றவர்களுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும்.*
*வயது முதிர்வினால் ஓய்வு பெறுபவர்களுக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிக்காலம் இருக்க வேண்டும்.*
*CPS திட்டத்தில் இருப்பவர்கள் TAPS திட்டத்திற்கு விருப்பம் தெரிவிப்பவர்களுக்கு அவர்கள் பணி நிறைவு பெற்றவர்களாக இருந்தால் அவர்கள் பெற்றுள்ள கடைசி ஊதியத்தில் 30% பென்சன் தொகையாக பெற்றுக் கொள்ளலாம்.* *1.1.2026 க்குப் பிறகு பணி நிறைவு பெற்றவர்கள் இரண்டு மாதத்திற்குள் விருப்பக் கடிதத்தினை TAPS திட்டத்திற்கு கொடுத்து விட வேண்டும்.*
*இரண்டு வருடங்களுக்குப் பின்னர் பணி நிறைவு பெறுவதாக இருந்தாலும் கூட அப்போது விருப்பம் தெரிவிக்கலாம்.*
*TAPS ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக எவ்வித விதிகளும் இன்னும் வகுக்கப்படாததால் விதிகள் வகுக்கப்படும் காலம் வரை அவர்கள் ஓய்வூதியம் இல்லாமல் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்பு இருப்பதால் இடைக்கால மாதாந்திர பென்ஷன் தொகையினை தருகிறார்கள.*
*ஒருவர் கடைசியாக பெற்ற ஊதியத்தில் 30% சதவீதம் அல்லது ரூபாய் 10,000 இதில் எது அதிகமோ அந்தத் தொகை அகவிலைப்படி 60% சதவீதத்துடன் சேர்த்து வழங்கப்படும்.*
*உதாரணமாக 31.03.2026 இல் பணி நிறைவு பெற்ற ஒருவர் கடைசியாக பெற்ற ஊதியம் 60,000 எனில் 18000 ரூபாய் பென்ஷன் அதற்குரிய அகவிலைப்படி 10,800 சேர்த்து 28,500 ரூபாய் தோராயமாக பெறலாம்.*
*விதிகள் வகுக்கப்பட்ட பிறகு TAPS திட்டத்தின் உள்ள ஓய்வூதிய பலன்கள் முழுவதும் ஒரே தேதியில் பெற்றுக்கொள்ளலாம்.*
*முந்தைய ஆட்சியாளர்கள் காலத்தில் ஆசிரியர், அரசு ஊழியர்களுக்காக கொண்டுவரப்பட்ட TAPS திட்டத்தில் விதிகளை வகுக்காமல் சென்று விட்டார்கள். அப்போதே நாம் அதிருப்தியினை வெளியிட்டு இருந்தோம்.*
*மாண்புமிகு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் அமைந்துள்ள தவெக அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தினை பரிசீலிக்கும் என்ற நம்பிக்கையில் உறுதியாக இருந்தோம்!. முந்தைய அரசு செய்த திட்டங்களை புதிய நிதி ஆதாரத்துடன் செயல்படுத்தி வருவது போல் தான் இந்த அரசாணையும் வெளிவந்துள்ளது.* *மீண்டும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் TAPS திட்டத்திற்கு விதிகள் வகுக்கின்ற போது பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் பரிசீலிக்கப்படும் என்று அளித்த வாக்குறுதியினை நிறைவேற்றுவீர்கள்!.. என்று ஒட்டுமொத்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சமுதாயம் நம்பிக்கையுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.*
*தமிழ்நாட்டில் 6 1/4 லட்சம் பேர் புதிய ஓய்வூதியத் திட்டத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். என்பதை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கனிவான பார்வைக்கு கொண்டு வருகிறோம்.*
(18.06.2026 )நடைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு ச.ஜோசப் விஜய் அவர்கள் அரசின் முதல் சட்டமன்ற கூட்டத் தொடர் ஆளுநர் உரையில்...*
*ஆங்கிலம், தமிழ் என தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை மட்டுமே. இந்த அரசு இருமொழிக் கொள்கையை மட்டுமே தொடர்ந்து பின்பற்றும். தேசியக் கல்விக் கொள்கையினை கடுமையாக எதிர்க்கிறது.*
*மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தினால்தான் கல்வி நிதி விடுவிக்கப்படும் என்பதை ஒன்றிய அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும். தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய கல்வி நிதியினை உடனடியாக விடுவிக்க வேண்டும்.*
*தவெக அரசில் எவ்வித ஊழலுக்கும் இடமளிக்காமல் வெளிப்படைத் தன்மையுடன் ஊழற்ற அரசாக நடத்திக் காட்டுவோம்!. என்று ஆளுநர் உரையில் இடம் பெற்றதை, தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியதை எல்லாம் வரவேற்கிறோம்!.. பாராட்டுகின்றோம்!.. பெருமிதம் கொள்கிறோம்!..*
*2022 முதல் நடைபெற்ற சட்டப்பேரவையில் ஆளுநர் உரையில் அரசின் கொள்கை முடிவினை படிக்காமல் தவிர்த்து விட்டு தான் அப்போதைய ஆளுநர் படித்தார். பிரச்சனை எழுந்தது. வெளிநடப்பு செய்தார். ஆனால் தற்போதைய ஆளுநர் மேதகு ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள் தவெக அரசின் சட்டமன்ற கொள்கைக் குறிப்பினை, மத்திய அரசினை வலியுறுத்தியுள்ள, விமர்சித்துள்ள வரிகளையும் அடி பிறழாமல் படித்துள்ளார்.. என்பது மேதகு ஆளுநர் அவர்களின் நற்பண்பினை வெளிப்படுத்தியது... என்பதையெல்லாம் எண்ணி பெருமிதம் கொள்கிறோம்!..* *தமிழ்நாட்டின் நிதிநிலைமை பற்றி முழுவதுமான வெள்ளை அறிக்கையினை வெளியிட்டு இருக்கிறார்கள். மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சட்டமன்றத்தில் தெரிவித்தவாறு ஆசிரியர் காலிப் பணியிடங்கள் உடன் நிரப்பப்பட வேண்டும். ஆசிரியர்கள் கலந்தாய்வு பொது மாறுதலில் ஊழலற்ற தவெக அரசு என்ற இலட்சிய அடையாள முகவரியினை உறுதிப்படுத்தக் கூடிய வகையில் எவ்வித ஊழலுக்கும் இடமளிக்காமல் வெளிப்படைத் தன்மையுடன் நடத்திட வேண்டும்.*
*முந்தைய ஆட்சியாளர்களால் கைவிடப்பட்ட பிரதான கோரிக்கைகளை எல்லாம் மீண்டும் பரிசீலனை செய்திட வேண்டுமாறு தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பின் சார்பில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை பெரிதும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்..*
*ஊழலற்ற வெளிப்படையான தங்கள் அரசின் செயல்பாடுகளை வரவேற்று பாராட்டும் இயக்கப் பொறுப்பாளர்கள்..*
*வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் ,All India Federation of Elementary Teachers’ Organisations (AIFETO) அலைபேசி : 9444212060 மின்னஞ்சல் :annamalaiaifeto@gmail.com.*
*அ.எழிலரசன் மாநிலத் தலைவர்,*
*அ.வின்சென்ட் பால்ராஜ், பொதுச் செயலாளர்,*
*ஆ.இராஜசேகர்,மாநிலப் பொருளாளர்,*
*கு.ரமாராணி,மாநில மகளிரணிச் செயலாளர்.*
*தமிழக ஆசிரியர் கூட்டணி, ஆர்வலர் மாளிகை, 52, நல்லதம்பி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை - 600005.தொலைபேசி: 044 - 4351 8540, மின்னஞ்சல்: taktaktak2014@gmail.com.*
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.