Based on the provided newspaper article regarding the Special Teachers' Eligibility Test in Tamil Nadu:
Teacher Dissatisfaction: Teachers are shocked and disappointed because the questions were significantly harder than expected and not based on the proper curriculum.
Requests for Reduction: There is a demand for the government to reduce the passing marks to 35% for teachers currently in service to ensure they can remain in their positions.
F
Examination Issues: The test, which took place over two days with over 200,000 total participants across both papers, included questions unrelated to the teachers' subjects and deemed too complex for their current curriculum.
Hostel Warden Challenges: Hostel wardens also expressed difficulties, as they manage administrative, food, and student responsibility duties similar to teachers but face similar challenges with the difficult test format.
வழக்கமான டெட்டை விட கடினமான வினாக்கள்
சிறப்பு தகுதித்தேர்வு எழுதிய
ஆசிரியர்கள் கடும் அதிர்ச்சி
தேர்ச்சி மதிப்பெண்ணை குறைக்க வலியுறுத்தல்
முறையான பாடத்திட்டம் இல்லாததால் அதிருப்தி -
Questions tougher than the standard TET; teachers who took the special eligibility test left shocked; demands raised to lower the qualifying marks; dissatisfaction expressed over the lack of a proper syllabus.
விடுதி காப்பாளர்கள் வேதனை
இதனிடையே, பள்ளி வகுப்பறையில் தொடர்ந்து கற்பித்து வரும் ஆசிரியர்களுக்கே, இத்தேர்வு சவாலாக இருந்த நிலை யில், ஆதிதிராவிடர் நலத்துறை, பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கள்ளர் சீரமைப்புத் துறைகளின் மாணவர் விடுதிகளில் பணியாற்றும் காப்பாளர்கள் இன்னும் அதிக சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். அவர்கள் பெரும்பாலும் மாணவர் பாதுகாப்பு, விடுதி நிர்வாகம், உணவு, சுகாதாரம், நலத்திட்டங்கள் மற்றும் நிர்வாகப் பொறுப்புகளை மையமாகக் கொண்டிருப்பதால், சிறப்பு தகுதித்தேர்வு கடினமாக ஒன்றாகியுள்ளது. பள்ளியில் கற்பிக்கும் ஆசிரியர்களை போல,-தொடர்ச்சியான கற்பித்தல் மற்றும் கல்வியியல் மறுபயிற்சி வாய்ப்புகள் குறைவாக உள்ளது. எனவே, இந்த நடைமுறை வேறுபாட்டை கருத்தில் கொண்டு, எதிர்கால சிறப்புத் தேர்வுக ளின் வடிவமைப்பை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என, தமிழ்நாடு ஆசிரியர் காப்பாளர் உரிமை பாதுகாப்பு சங்க மாநில தலைவர் சுதாகர் வலியுறுத்தியுள்ளார்.
சேலம், ஜூலை 6: நாடு முழுவதும் பள்ளி ஆசி ரியர்களுக்கான தகுதித் தேர்வை கட்டாயமாக்கி, உச்சநீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக் கான தகுதித்தேர்வு கடந்த இரு தினங்களாக நடந்தது. கடந்த 4ம் தேதி நடந்த இடைநிலை ஆசி ரியர்களுக்கான தாள் I தேர்வை மாநிலம் முழுவ தும் 61,000 பேர் எழுதினர். தொடர்ந்து நேற்று நடந்த பட்டதாரி ஆசிரியர்களுக் கான தாள் II தேர்வை, 1.67 லட்சம் பேர் எழுதினர். இதில், வழக்கமாக புதிய தேர்வர்களுக்கு நடத்தப்ப டும் தகுதிதேர்வை விட, மிக கடினமாக வினாக்கள் கேட்கப்பட்டதால், ஆசிரி யர்கள் கடும் அதிர்ச்சிய டைந்துள்ளனர். எனவே, தேர்வு மதிப்பெண்ணை குறைக்க வேண்டும் என
கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து ஆசிரியர்
கள் கூறியதாவது:
தமிழகத்தில் தற்போது அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிக ளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதித்தேர்வு என அறி வித்து 2 நாட்களாகதேர்வு நடத்தப்பட்டது. ஆனால், புதியவர்களுக்கான தேர்வு போல, முற்றிலும் யாரும் தேர்வாக கூடாது என்ற எண்ணத்தில் வினாக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், இடைநிலை ஆசி ரியர்களுக்கான தாள் I தேர்வு, மிக, மிக கடின மாக, ஆசிரியர்கள் பயிற் றுவிக்கும் வகுப்புகளுக்கு
சம்பந்தமே இல்லாத வகை யில் அமைந்து விட்டது. அடுத்து பட்டதாரி ஆசி ரியர்களுக்கான தாள் II தேர்வில், தமிழ், ஆங்கிலம், உளவியல் அனைவருக்கும் பொதுவானது. அறிவியல் பிரிவு ஆசிரியர்களுக்கு கணிதம் மற்றும் அறிவிய லும், பிற ஆசிரியர்களுக்கு சமூக அறிவியலும் விருப்ப பாடமாக இருந்தது.
இதில், அறிவியல் பாடத்தை பொறுத்தவரை அனைத்து பகுதிகளில் இருந்தும் பரவலாக கேள் விகள் கேட்காமல், குறிப் பிட்ட பிரிவில் இருந்து மட்டும் அதிக வினாக்கள் வந்தது. இதனால் பிற பிரிவு ஆசிரியர்கள் தடுமாறினர். சமூக அறிவியல் பிரிவை பொறுத்தவரை ஆண்டுகள் தொடர்பான கேள்விகள் அதிக எண்ணிக்கையில், மிகவும் குழப்பமடையச் செய்யும் வகையில் இடம் பெற்றிருந்தன. உளவியல் பிரிவில் மொத்தமுள்ள
30 வினாக்களில், கூற்று சரியா? தவறா?
என குழப் பம் ஏறபடுத்தும் வகையில் 25க்கும் மேற்பட்ட வினாக் கள் இடம்பெற்றிருந்தன. இதனால், சிறப்பு தகுதித் தேர்வு எழுதிய இடை நிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கடும் அதிருப் தியடைந்துள்ளனர்.
இதற்கு முறையான பாடத்திட்டம், வினாத் தாள் வடிவமைப்பு, மாதிரி வினாத்தாள் வழங்காதது. தான் காரணம். பொது வான தலைப்புகள் மட்டும் வழங்கப்படுவதால், அவை 6வது, 10வது, 12ம் வகுப்பு நிலையா அல்லது கல்லூரி நிலையா என தெரியாமல் ஆசிரியர்கள் படிக்க வேண் டியுள்ளது. எனவே, பணி புரியும் ஆசிரியர்களின் நலன்கருதி, தேர்ச்சிக்கான மதிப்பெண்ணை 40 சதவீத் மாக குறைத்து, அறிவிப்பு வெளியிட வேண்டும். இவ் வாறு ஆசிரியர்கள் தெரி வித்தனர்.
Sunday, July 5, 2026
New
வழக்கமான டெட்டை விட கடினமான வினாக்கள் - சிறப்பு தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் கடும் அதிர்ச்சி - தேர்ச்சி மதிப்பெண்ணை குறைக்க வலியுறுத்தல் - முறையான பாடத்திட்டம் இல்லாததால் அதிருப்தி
TET தேர்ச்சி
Tags
Special TET,
STET,
STET Official Notification,
TET,
TET 2026,
TET EXAM,
TET Paper I,
TET தேர்ச்சி
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.