பணம் வசூலித்ததாக புகார் - பள்ளியில் டி.இ.இ.ஓ., விசாரணை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, July 16, 2026

பணம் வசூலித்ததாக புகார் - பள்ளியில் டி.இ.இ.ஓ., விசாரணை



பணம் வசூலித்ததாக புகார் பள்ளியில் டி.இ.இ.ஓ., விசாரணை

அன்னுார், ஜூலை 17-

அரசு பள்ளி மாணவர்க ளிடம் சீருடைக்கு பணம் வசூலித்ததாக தெரிவிக் கப்பட்ட புகார் குறித்து, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் விசாரணை நடத் தினார்.

அன்னுார் ஊராட்சி ஒன்றிய தெற்கு துவக்கப் பள்ளியில், 120 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளியில், தனியார் பள்ளியை போல் உயர்ரக சீருடை அணிய வேண்டும் என வலியுறுத்தி மாணவ, மாணவியரிடம் தலா, 4,500 ரூபாய் வசூலித்ததாக புகார் எழுந்தது.

இதுகுறித்து, அன் னுார் ஒன்றிய நுகர்வோர் பாதுகாப்பு சங்கத் தலைவர் சென்னியப்பன், முதன்மை கல்வி அலுவலருக்கு புகார் மனு அனுப்பினார்.

இதுகுறித்து விசாரிக்க, முதன்மை கல்வி அலுவ லர் உத்தரவு பிறப்பித்தார். மாவட்ட தொடக்கக் கல்வி அன்னூர் தெற்கு துவக்க பள்ளியில், சீருடைக்கு பணம் வசூலித்ததாக எழுந்த புகார் குறித்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் விசாரித்தார். விசாரித்தனர். அலுவலர் ரவிச்சந்திரன், நேற்று தெற்கு துவக்க பள் ளிக்கு வந்து, பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் வட் டார கல்வி அலுவலர் இரு தய மரிய ஜோசப்பிடமும் அப்போது முன்னாள் மாணவர்கள் சிலர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலரி டம், 'சீருடைக்கு பணம் கேட்பதாக சில பெற் றோர் எங்களிடம் புகார் தெரிவித்தனர்.

எனினும் ஆசிரியர்களுக்கு பயந்து வெளிப்படையாக சொல்ல தயங்குகின்றனர். கட்டாய வசூல் நடந்தது உண்மை' என்றனர்.

மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ரவிச்சந் திரன், "இதுகுறித்து விசா ரித்து நடவடிக்கை எடுக்கப் படும். பள்ளி வளர்ச்சிக்கு, முன்னாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஒத்து ழைப்புதர வேண்டும், " என கேட்டுக் கொண்டார்.

The District Elementary Education Officer is investigating a complaint regarding illegal collection of funds for school uniforms at a government school in Annur.

Parents reported that the school compelled students to buy expensive uniforms similar to private schools, collecting ₹4,500 per student.

The investigation was initiated following a complaint sent to the Chief Educational Officer by the president of the Annur Union Consumer Protection Association.

District Elementary Education Officer Ravichandran assured that action will be taken based on the inquiry findings and urged parents and alumni to cooperate with school development.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.