இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் சிறப்பு நிலை பெற்றவர்களுக்கு ஆர்டர் - தொடக்க கல்வி இயக்குனர் அதிரடி உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, June 5, 2026

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் சிறப்பு நிலை பெற்றவர்களுக்கு ஆர்டர் - தொடக்க கல்வி இயக்குனர் அதிரடி உத்தரவு



இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் சிறப்பு நிலை பெற்றவர்களுக்கு ஆர்டர்

தொடக்க கல்வி இயக்குனர் அதிரடி உத்தரவு

The newspaper clipping announces a directive from the Director of Elementary Education for Tamil Nadu regarding immediate action for special grade teachers.

It specifically targets secondary and graduate teachers who have completed their special grade service requirement as of June 1, 2026.

District education officers are instructed to organize special camps to process and issue the necessary orders promptly.

The directive emphasizes that if complaints arise, district officers must personally inspect the process and ensure timely issuance of orders.

இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்க ளுக்கு சிறப்பு நிலை பெற்றவர்களுக்கு உடனடியாக முகாம் நடத்தி அதற்கான ஆணைகளை வழங்கு மாறு தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவிட் டுள்ளார். இது குறித்து தமிழ் நாடு தொடக்ககல்வி இயக்குனர் அனைத்து மாவட்டத்திற்கும் அனுப்பியுள்ள சுற் றறிக்கையில் கூறி யிருப்பதாவது;

பள் ளிக்கல்வித்துறையில் 2004, 2005, 2006ம் ஆண்டுகளில் தொகுப் பூதியத்தில் இளநிலை இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் நிய மிக்கப்பட்டு பின்னர் கடந்த 27.6.2006ன் படி காலமுறை ஊதியத் தில் பணிவரன்முறை செய்யப்பட்டனர்.

மேற்கண்டவாறு பணிவரன்முறை செய்யப் பெற்ற ஆசி ரியர்களுக்கு முறையே 1.6.2016ல் தேர்வு நிலை, 1.6.2026ல் சிறப்பு நிலை பெற் றுள்ள ஆசிரியர்களுக்கு உரிய ஆணை பெற நடவடிக்கை மேற் கொள்ளுமாறு கோரிக் கைகள் வரப்பெற்றுள் னது. ஆசிரியர் சங்கத்தி னர் கோரிக்கையினை பரிசீலனை செய்யும் வகையில் 1.6.2026ல் சிறப்பு நிலை பெற் றவர்களுக்கு சார்ந்த வட்டார கல்வி அலு வலகத்தில் சிறப்பு முகாம் நடத்தி, பணி புரிந்து வரும் ஆசிரி யர்கள் அனைவருக் கும் உரிய காலத்தில் ஆணை கிடைக்க நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட மாவட்ட கல்வி அலு வலர்கள் (தொடக்க கல்வி) உடனடி ஏற்பாடு செய்ய வேண்டும்.

இந்த சிறப்பு நிலை வழங்கும் நிகழ்வுக ளிலிருந்து புகார்கள் ஏதும் பெறப்பட்டால், தொடர்புடைய அலு வலர் மீது உரிய நடவ டிக்கை மேற்கொள்ளப் படும் என்றும், சிறப்பு நிலை வழங்கும் நிகழ் வினை மாவட்ட கல்வி அலுவலர் பார்வை யிட்டு துரிதமாக வழங் குவதற்கான அறிவுறை களை, வழிகாட்டு நெறி முறைகளை வழங்க உத்தரவிடப்படுகிறது.

இவ்வாறு தொடக்க கல்வி இயக்குநர் அந்த உத்தரவில் தெரிவித் துள்ளார்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.