உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் காலிப்பணியிட விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, May 11, 2026

உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் காலிப்பணியிட விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் காலிப்பணியிட விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

சென்னை-6, தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 5.5.6.007722/41/81/2026 . ||.05.2026

பொருள்- தமிழ்நாடு பள்ளிக் கல்விப்பணி அரசு /நகராட்சி காலியாக உள்ள அரசு உயர்நிலைபள்ளிகளில் உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்கள் சார்ந்த விவரம் கோருதல் - சாரபு.

பார்வை-

1. தமிழ்நாடு அரசு பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம் 2016

2. அரசாணை(நிலை)எண்.151 பள்ளிக்கல்வி(பக1(1)) फ्रानं.09.09.2022

3. இவ்வியக்கக செயல்முறைகள் 5...76090/41/81/2025 फ्रान. 10.12.2025

பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அரசு/நகராட்சி உயர்நிலைப்பள்ளிகளில் 01.12.2025 நிலவரப்படி காலியாக உள்ள அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் காலிப்பணியிட விவரங்களை பார்வை 3-ல் காண் இவ்வியக்கக செயல்முறைகளின் மூலம் கோரப்பட்டது. தற்சமயம், தற்போதுள்ள நிலவரப்படி அரசு உயர்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமையாசிரியர் காலிப்பணியிட விவரத்தினை (31.05.2026-ல் ஓய்வு பெறும் தலைமையாசிரியர்களின் பணியிடத்தினையும் சேர்த்து) இணைப்பில் குறிப்பிட்டுள்ள படிவத்தில் (படிவம்1 மற்றும் 2) பூர்த்தி செய்து SOFT COPY-யினை c1tndse@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு அதன் கையொப்பமிட்ட பிரதியினை 15/05/2026 இவ்வியக்கத்திற்கு அனுப்பிவைத்திட வேண்டும்.

மேலும், ஒவ்வொரு மாதமும் பிரதி 5ஆம் தேதிக்குள் தங்களது மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் காலிப்பணியிட விவரத்தினை தவறாமல் இவ்வியக்ககத்திற்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு-

படிவம் 1 & 2

பள்ளிக்கல்வி இயக்குநர். இயக்குநர்.

பெறுநர்

அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள்



Purpose: To collect detailed information on vacant Headmaster positions in Government and Municipal High Schools.

Action Required: District Chief Educational Officers must fill out the attached forms (Proforma 1 & 2) and send a soft copy to the email address ctndse@gmail.com.

Deadline: The signed soft copy of the data must be submitted by May 15, 2026.

Scope: This includes current vacancies as of December 1, 2025, and positions expected to become vacant due to retirements up to May 31, 2026.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.