Revised +2 Provisional Certificate download Instructions... - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, May 11, 2026

Revised +2 Provisional Certificate download Instructions...



Revised +2 Provisional Certificate download Instructions...

முன்பு மாணவர்களும் தனியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றிருந்தது - தற்போது தனித் தேர்வர்கள் மட்டுமே தனியாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் - பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியின் மூலம் மட்டுமே பெற முடியும்!

பொருள்:

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6 -2025-2028 கல்வியாண்டிற்கான மேல்நிலை பொதுத் தேர்வு மதிப்பெண் பட்டியலை (Statement of Marks) மாணவர்களுக்கு விநியோகித்தல் தொடர்பாக

பார்வை

இவ்வலுவலக செய்திக் குறிப்பு, நாள்.08.06.2026 -

08.05.2026 அன்று முடிவுகள் மேல்நிலை பொதுத் தேர்வுக்கான வெளியிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 13.08.2026 அன்று காலை 11.00 மணி முதல் www.deetn.gov.in என்ற இணையதள முகவரியிலிருந்து அனைத்து மேல்நிலை பள்ளித் தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளிகளுக்கென வழங்கப்பட்ட USER ID PASSWORD கொண்டு தங்கள் பள்ளி மாணவர்களுக்கு உரிய மதிப்பெண் பட்டியலை Statement of Marks) பதிவிறக்கம் செய்து, அச்சான்றிதழ்களில் உள்ள விவரங்களைச் சரிபார்த்து தலைமையாசிரியரின் கையொப்பம் மற்றும் பள்ளி முத்திரையிட்டு முதலே மாணவர்களுக்கு வழங்கலாம்.

13.05.2020 தனித்தேர்வர்கள் தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து www.dgetn.gov.inuamen (Statement of Marks) தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கூடுதல் அறிவுரைகள்.

1 பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்யப்படும் மதிப்பெண் பட்டியல்களை (Statement of Marks) சரிபார்த்து. அவற்றில் மாணவர் பெயர், பிறந்த தேதி தலைப்பெழுத்து புகைப்படம், பயிற்று மொழி ஆகியவற்றில் ஏதேனும் பிழைகள் இருப்பின், தலைமையாசிரியரே அத்திருத்தத்தை மேற்கொண்டு தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். அவற்றை சான்றொப்பமிட்டு மாணவர்களுக்கு அணித்திட வேண்டும். 2. தற்காலிக மதிப்பெண் பட்டியலில் திருத்தங்கள் செய்து வழங்கப்பட்ட மாணவர்களுக்கு பிழைகளற்ற மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சழுத்தம் செய்து வழங்க எதுவாக அத்திருத்தங்களை பின்னர் இவ்வியக்கத்தால் அறிவிக்கப்படும் நாளன்று ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும்

3. தேர்வர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கும் போது மாற்றுச் சான்றிதழில் பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு மதிப்பெண் சான்றிதழ் வரிசை எண்ணை எழுதும் கலத்தில் Refer Original Certificate என்று குறிப்பிட்டு தேர்வர்களுக்கு வழங்குமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

4. அசல்மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சழுத்தம் செய்து பெறப்பட்ட பின்னர். சம்பந்தப்பட்ட தேர்வருக்கான பள்ளியின் வசமுள்ள மாற்றுச் சான்றிதழ் பதிவேட்டின் Counter Foil சம்பந்தப்பட்ட தேர்வரது பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு மதிப்பெண் சான்றிதழின் வரிசை எண்ணை பதிவு செய்து கொள்ள வேண்டும். மேற்படி Counter Foil மேற்கொள்ளப்படும் பதிவுகள் நிரந்தரமாக பின்வரும் காலத்தில் சரிபார்த்தலுக்காகப் பயன்படுத்தக்கூடிய வகையில் பராமரிக்கப்பட வேண்டும்.

மேற்காண் அறிவுரைகளை இணை இயக்குநர் (கல்வி) புதுச்சேரி மற்றும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்களது ஆளுகைக்குட்பட்ட சார்த்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD DGE - Revised Provisional Certificate - PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.