2026-2027 ஆம் கல்வி ஆண்டு - கற்றல் கற்பித்தல் பணிகள் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் - சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, May 14, 2026

2026-2027 ஆம் கல்வி ஆண்டு - கற்றல் கற்பித்தல் பணிகள் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் - சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!



2026-2027 ஆம் கல்வி ஆண்டு - கற்றல் கற்பித்தல் பணிகள் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் - சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! Proceedings of the Director of Elementary Education regarding the preparatory measures to be undertaken for teaching-learning activities during the 2026-2027 academic year.

This document is a Tamil Nadu government notification regarding school admissions and preparations for the upcoming academic year.

Admission Start Date: Admissions for the 2026-27 academic year in government primary and middle schools are scheduled to begin on March 1, 2026.

Preparatory Measures: District Educational Officers are instructed to ensure that free welfare materials—specifically textbooks, notebooks, and uniforms—are received and distributed to schools in a timely manner.

Additional Enrollment Target: Schools are encouraged to increase enrollment, with the government planning to honor schools that successfully add at least 50 students compared to the previous academic year.

2026-2027 ஆம் கல்வி ஆண்டு - கற்றல் கற்பித்தல் பணிகள் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் - விலையில்லா நலத்திட்ட பொருட்களை பெற்று பள்ளிகளுக்கு அனுப்புதல் , அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பார்வை (1)யில் காணும் செயல்முறைகளில் அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2026-27ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைப் பணிகளை தொடங்குதல் குறித்த விரிவான அறிவுரைகள் வழங்கப்பட்டது.

பார்வை (2)யில் காணும் பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் கடிதத்தில் 2026-27ஆம் கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா நலத்திட்டப் பொருட்களில் பாடப் புத்தகம், நோட்டுப் புத்தகம் மற்றும் சீருடைகள் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. (நகல் இணைக்கப்பட்டு உள்ளது) அதன்படி ஒவ்வொரு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலரும் (தொடக்கக் கல்வி) தங்களது நிர்வாக எல்லைக்குட்பட்ட பள்ளிகளுக்கான நலத்திட்டப் பொருட்களை பெற்று தொடர் நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் 2026-27ஆம் கல்வியாண்டு தொடங்கும் முன்னர் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி), வட்டாரக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டிய விவரங்கள் பின்வருமாறு தெரிவிக்கப்படுகின்றது. 👇👇👇👇

CLICK HERE TO DOWNLOAD DEE - School reopen preparedness PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.