அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு 2% Dearness Allowance Hike for Government Employees and Teachers
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி 58 சதவீதத்தில் இருந்து 60% ஆக உயர்த்தி முதலமைச்சர் விஜய் அறிவிப்பு; 2026 ஜனவரி முன்தேதியிட்டு இது வழங்கப்படும்
கடைசியாக கடந்தாண்டு நவம்பரில் 55% ஆக இருந்த அகவிலைப்படி 3% உயர்த்தி 58% ஆக வழங்கப்பட்ட நிலையில், தற்போது 2% மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
செய்தி வெளியீடு எண்: 019
14.05.2026
செய்தி வெளியீடு
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 58 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 01.01.2026 முதல் 60 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான அரசு, மக்கள் நலனை முன்னிறுத்தி மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை வகுத்து செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள உறுதிமொழி அளித்துள்ளது. இந்தத் திட்டங்களை வடிவமைப்பதிலும், அவற்றை முழுவீச்சில் நடைமுறைப்படுத்துவதிலும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் முக்கியப் பங்கு வகித்து வருகின்றனர். அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு 01.01.2026 முதல் 58 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 60 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களும் அதனால் பயன்பெறும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதனைக் கனிவுடன் பரிசீலித்து, 01.01.2026 முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க ஆணையிட்டுள்ளார்கள்.
இதனால் 58 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 2 சதவீதம் உயர்ந்து 01.01.2026 முதல் 60 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 இலட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஆண்டொன்றுக்கு அரசுக்கு 1,230 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்.
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9
அரசின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள:
This news release from the Tamil Nadu government confirms a hike in the Dearness Allowance (DA) for state government employees and teachers.
DA Increase: The DA has been raised by 2%, increasing from 58% to 60%.
Effective Date: This increased allowance is effective from January 1, 2026.
Announcing Authority: The announcement was made by the Chief Minister of Tamil Nadu, Thiru. S. Joseph Vijay
Based on the text in the image, here are the key details regarding the government announcement:
Beneficiaries: Approximately 16 lakh (1.6 million) government employees, teachers, pensioners, and family pensioners will benefit.
Dearness Allowance (DA) Increase: The Dearness Allowance has been increased by 2%, rising from 58% to 60%.
Effective Date: The increase is effective from January 1, 2026.
Financial Impact: This hike will result in an additional annual expenditure of ₹1,230 crore for the government.


No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.