தமிழக முதல்வர் மாண்புமிகு சி.ஜோசப் விஜய் அவர்களுக்கு ஆசிரியர் கூட்டணி வாழ்த்து கடிதம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, May 11, 2026

தமிழக முதல்வர் மாண்புமிகு சி.ஜோசப் விஜய் அவர்களுக்கு ஆசிரியர் கூட்டணி வாழ்த்து கடிதம்



தமிழக முதல்வர் மாண்புமிகு சி.ஜோசப் விஜய் அவர்களுக்கு ஆசிரியர் கூட்டணி வாழ்த்து கடிதம்

பதிவு எண்.60/2009

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

மாநில அமைப்பு

வாழ்த்துச் செய்தி தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வாழ்த்துக்கள்!

மூலம் தமிழ்நாடு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்களின் பேராதரவுடன் தமிழக வெற்றிக்கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளதன் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மாண்புமிகு. ச.ஜோசப் விஜய் அவர்களுக்கும், அவரது அமைச்சரவை சகாக்களுக்கும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

தமிழக வெற்றிக்கழகம் தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள பொதுமக்கள் நலன் சார்ந்த, சமூக நலன் சார்ந்த, ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் நலன் சார்ந்த அனைத்து வாக்குறுதிகளையும் முனைப்புடன் நிறைவேற்றித் தர வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு கேட்டுக்கொள்கிறது.


தமிழ்நாட்டின் தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிகளைக் களைந்திட த.வெ.க அரசு விரைந்து முன் வருமென தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு நம்பிக்கை கொள்கிறது. வாழ்த்துக்களுடன்

(ச.மயில்)

பொதுச்செயலாளர்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

This document is a congratulatory letter from the Tamil Nadu Primary School Teachers' Federation.

Subject: It congratulates Mr. S. Joseph Vijay on assuming office as the new Chief Minister of Tamil Nadu following the legislative assembly elections.

Requests: The federation urges the new government to fulfill electoral promises regarding the welfare of teachers and government employees.

Concerns: It specifically requests the swift resolution of long-standing grievances for primary school teachers.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.