கல்வி நிலையங்கள்,வழிபாட்டுத்தளங்கள் அருகே உள்ள 717 மதுபானக்கடைகளை மூட முதல்வர் ஜேசப் விஜய் உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, May 11, 2026

கல்வி நிலையங்கள்,வழிபாட்டுத்தளங்கள் அருகே உள்ள 717 மதுபானக்கடைகளை மூட முதல்வர் ஜேசப் விஜய் உத்தரவு

கல்வி நிலையங்கள்,வழிபாட்டுத்தளங்கள் அருகே உள்ள 717 மதுபானக்கடைகளை மூட முதல்வர் ஜேசப் விஜய் உத்தரவு

செய்தி வெளியீடு எண்: 007

क्रो: 12.05.2026

செய்தி வெளியீடு

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச. ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் 4,765 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் தற்போது நடத்தப்பட்டு வருகிறது. அதில், வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள கடைகளை ஆய்வு செய்து கண்டறியுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களால் உத்தரவிடப்பட்டது.

மேற்படி ஆணைக்கிணங்க இந்த மூன்று இனங்களில் 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டது. பொதுமக்கள் நலனைக் கருத்தில்கொண்டு வழிபாட்டுத்தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் என மொத்தம் 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை அடுத்த இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச. ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9


a press release dated May 12, 2026, announcing an order from the Chief Minister of Tamil Nadu to close 717 retail liquor shops.

Closure Order: The 717 shops located within 500 meters of places of worship, educational institutions, and bus stands must be closed within two weeks.

Targeted Shops: These closures consist of 276 shops near places of worship, 186 shops near educational institutions, and 255 shops near bus stands.

Total Shops: The order aims to reduce the total number of retail liquor shops currently operated by the Tamil Nadu State Marketing Corporation from 4,765.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.