மலை சுற்றுலாத் தளங்களில் கோடை கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாம்கள் - 895 மாணவர்கள் தேர்வு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, May 4, 2026

மலை சுற்றுலாத் தளங்களில் கோடை கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாம்கள் - 895 மாணவர்கள் தேர்வு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!



மலை சுற்றுலாத் தளங்களில் கோடை கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாம்கள் - 895 மாணவர்கள் தேர்வு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! Special Training Camps for Summer Festivities at Hill Tourist Destinations — 895 Students Selected — Proceedings of the Director of School Education!

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை 6. ந.க.எண் 022197/எம்2/இ2/2026 நாள் 27.04.2026

பொருள்

பள்ளிக் கல்வி பார்வை 1) 2) மாணவர்களின் தனித்திறன்களை மெருகேற்றுதல் - கோடைக்கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாம்கள் மலைசுற்றுலாத் தளங்களில் நடத்துதல் மாணவர்களின் பெயர் பட்டியல் பெறப்பட்டது மாணவர்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்று வருதல் பெற்றோர் மற்றும் மாணவர்களின் பாதுகாவலர்களிடமிருந்து விருப்பக் கடிதம் பெறுதல் சார்ந்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்குதல் சார்பு.

2022-2023ஆம் ஆண்டிற்கான அறிவிப்பு எண் 13, அரசாணை (நிலை) எண் 262, பள்ளிக் கல்வித் (பக5(1)) துறை, நாள் 09.12.2024.

3) அரசாணை (நிலை) எண் 83, பள்ளிக் கல்வித் (பக5(1)) துறை, நாள் 16.07.2025.

4) பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க. எண் 022197/எம்2/இ2/2026 நாள் 21.04.2026

5) சென்னை 6, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியிடமிருந்து பெறப்பட்ட பட்டியல். 2022-2023ஆம் தனித்திறன்களை ஆண்டிற்கான அறிவிப்பு எண்.13-இன்படி, மாணவர்களின் மெருகேற்றும் வகையிலும், கோடைவிடுமுறையைப் பயனுள்ள வகையில் செலவழித்திடவும், கோடைக்கொண்டாட்ட சிறப்புப் பயிற்சி முகாம்கள், மலை சுற்றுலாத் தலங்களில் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து நீலகிரி மாவட்டம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டம் (ஏலகிரி) ஆகிய இரு மாவட்டங்களில் இரண்டு பிரிவுகளாக 5 நாட்கள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள இச்சிறப்பு பயிற்சி முகாமிற்கு அரசு பள்ளிகளில் 2025-2026 ஆம் கல்வி ஆண்டில் 11ம்ஆம் வகுப்பு முடித்துள்ள மாணவர்களில் கல்வி. இலக்கியம் மற்றும் அறிவியல் போட்டிகளில் சிறந்து விளங்கும் மாணவர்களை தெரிவு செய்திடவும், சிறந்து விளங்கிய 895 மாணவர்களின் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. இவற்றில் நீலகிரி மாவட்ட முகாமிற்கு 690 மாணவிகளும், திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரியில் நடைபெறும் முகாமிற்கு 205 மாணவர்களும் ஆக மொத்தம் 895 மாணவ, மாணவியர்களின் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.

மேற்படி நடைபெறும் கோடைக்கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாமில் இணைப்பில் உள்ள அரசு பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்று பயிற்சி முகாமில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக சார்ந்த மாணவ / மாணவியர்களின் பெற்றோர் / பாதுகாவலர்களிடமிருந்து அதற்கான ஒப்புதல் கடிதத்தினை இரு நகல்களில் பெற்று கோப்பில் வைக்குமாறு சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இணைப்பில் உள்ளவாறு மாணவ, மாணவர் எண்ணிக்கை கோடைக்கொண்டாட்டம் நடத்திடுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு பிரித்து ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மேலும், கோடைக் கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவியர்கள் தங்களுக்குத் தேவையான உடைகள், போர்வைகள், மாணவர்களின் அடையாள அட்டை உள்ளிட்டவைகளை தவறாமல் கொண்டு வர வேண்டுமென மாணவ / மாணவியர்களுக்கு அறிவுறுத்துமாறு சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எனவே, மேற்படி நடைபெறும் கோடைக்கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவியர்கள் மற்றும் பாதுகாப்பிற்காக உடன் செல்லும் ஆசிரியர்கள் எவ்வித புகாருக்கும் இடமின்றி கோடைக்கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாமில் கலந்துகொள்வதற்கு தகுந்த அறிவுரைகளை வழங்கிடுமாறு வழங்கிடுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மாணவிகளை அழைத்துச் செல்லும்பொழுது கட்டாயம் 20 மாணவிகளுக்கு 1 பெண் ஆசிரியை அனுமதிக்கலாம்.

மாணவியருக்கான முகாம் நீலகிரி மாவட்டத்திலும், மாணவர்களுக்கான முகாம் திருப்பத்தூர் மாவட்டத்திலும் (ஏலகிரி) நடைபெறும் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது. சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களால் முகாம் நடைபெறும் நாள் மற்றும் இடம் பின்னர் தெரிவிக்கப்படும். இத்துடன் பயிலரங்கச் செயல்பாடுகள் மற்றும் பயிற்சி காலஅட்டவணை இணைத் அனுப்பப்படுகிறது.

இணைப்பு

1) பெற்றோரிடம் பெற வேண்டிய ஒப்புதல் கடிதம் 2) ஒதுக்கீடு செய்யப்படும் மாணவர்களின் பட்டியல்,

3) ஒதுக்கீடு செய்யப்படும் மாணவிகளின் பட்டியல்,

4) பயிலரங்கச் செயல்பாடுகள் மற்றும் பயிற்சி காலஅட்டவணை

CLICK HERE TO DOWNLOAD DSE - Kodai Kondattam PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.