100% மதிப்பெண் பெறும் தேர்வர்களின் விடைத்தாட்களை முகாம் அலுவலர் ஆய்வு செய்து கையொப்பமிட அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!
மார்ச் 2026 மேல்நிலை இரண்டாமாண்டு மற்றும் முதலாமாண்டு (Arrear) பொதுத்தேர்வுகளின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி தொடர்பாக அனைத்து முகாம் அலுவலர்களுக்கும் 14.03.2026 அன்று நடைபெற்ற மண்டல / முகாம் அலுவலர்களுக்கான கூட்டத்தில் மதிப்பீட்டுப் பணி தொடர்பான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றி மதிப்பீட்டு பணியினை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேற்காண் மண்டல / முகாம் அலுவலர்களுக்கான கூட்டத்தில் அனைத்து முகாம் அலுவலர்களுக்கும் மதிப்பீட்டு பணியின்போது முழு மதிப்பெண்கள் (Centum) பெறும் தேர்வர்களின் விடைத்தாட்களை கவனமாக கூர்ந்தாய்வு செய்து கையொப்பமிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. எனவே, அனைத்து முகாம் அலுவலர்கள் தங்களது User Id மற்றும் Password -ஐ យ Valuation Camp Report -> Evaluation Centre Report -> Centum Mark στ வழியில் முழு மதிப்பெண்கள் பெற்ற தேர்வர்களது பட்டியலை பதிவிறக்கம் செய்து முகாம் அலுவலர்கள் மேற்காண் பொருள் சார்ந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
This official letter from the Director of Government Examinations in Chennai instructs all camp officers regarding the evaluation process for the March 2026 public examinations. It emphasizes the need for a thorough review of answer scripts that receive perfect scores.
Camp officers must carefully review and sign off on all answer scripts achieving full marks (Centum).
Officers are required to download the list of students who achieved full marks using their login credentials through the specified portal path: Valuation Camp Report -> Evaluation Centre Report -> Centum Mark.
This directive follows instructions given during the regional camp officers' meeting held on March 14, 2026.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.