தேர்தல் அன்று பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ஏப்.24ல் விடுமுறை அளிக்க உத்தரவிட ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல் - Teachers' Association Urges Issuance of Orders Granting Leave on April 24th to Teachers on Election Duty
தேர்தல் அன்று பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ஏப்.24ல் விடுமுறை அளிக்க உத்தரவிட வேண்டும்
தேர்தல் ஆணையத்திற்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்
துாத்துக்குடி, ஏப்.18-வரும் 23ம் தேதி தேர் தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு பணி முடிய நள்ளிரவு வரை சில இடங்களில் ஆகிவி டுகிறது. மறுநாள் அவர்க ளால் மீண்டும் பள்ளிக்கு செல்வது சிரமமாகும்.
இதனால் வரும் 24ம் தேதி ஆசிரியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு வலியு றுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ் நாடு முதுநிலை பட் டதாரி ஆசிரியர் கழக மாநில துணைத்தலை வர் முஜிபுர் இந்திய தேர்தல் ஆணைய தமி ழக அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிற்கு அனுப் பியுள்ள மனுவில் கூறி யிருப்பதாவது;
தேர்தல் நாளான 23.4.2026 அன்று அதி காலை முதல் இரவு நேரம் வரை தொடர்ந்து பணியாற்ற வேண்டிய தமிழ்நாட்டில் வரும் 23ம் தேதி நடக்கும் தமிழ்நாடு சட்டசபை தேர்தல் பணிகளில் பள் ளிக் கல்வித்துறையை சேர்ந்த ஆசிரியர்கள் பெருமளவில் ஈடுபடுத் தப்படுகின்றனர்.
தேர்தல் நாளுக்கு அடுத்த நாளான 24.4.2026 வெள்ளிக்கி முமை பள்ளி ஆசிரியர் களுக்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. The text discusses a request by a teacher's association to the Election Commission for a holiday on April 24, 2026.
Teachers assigned to election duty on April 23, 2026, often work late into the night or early next morning.
The association argues that returning to work immediately on April 24 is difficult and demanding.
They requested the holiday to ensure the physical and mental well-being of the teachers involved.
The memorandum was submitted to the Tamil Nadu Election Official, Archana Patnaik, by the state vice-president of the Tamil Nadu Senior Graduate Teachers Association.
சூழல் உருவாகிறது. இத்தேர்தல் பணி மிக வும் பொறுப்பும் கவன மும் உடைய பணியா கும்.
இப்பணிகளை நிறை வேற்ற உடல் மற்றும் மன உழைப்பும் அதிகம் தேவைப்படுகிறது.
குறிப்பாக ஓட்டுப் பதிவு நிறைவடைந்த பின்பு ஒட்டுப்பெட்டி ஒப்படைக்கும் பணிகள் இரவு நேரம் வரை, நள்ளிரவு வரை நீடிப்பதால், அடுத்த நாள் உடனடியாக பள் களை ளிக்கு வருவது ஆசிரியர் களுக்கு கடினமான சூழ் நிலையை ஏற்படுத்தும். பல ஆசிரியர்கள் தன் இருப்பிட முகவரியிலி ருந்து வெகு தொலைவில் உள்ள சட்டசபை தொகு திகளுக்கு பணியமர்த்தப் பட்டுள்ளனர் என்பதும், பல ஆசிரியர்கள் ஒட்டுச் சாவடி மையத்திலிருந்து 24.4.2026 அன்று அதிகா லையே தன் இருப்பிடத் திற்குச் சென்று சேர்வர் என்பதும் இங்கு குறிப் பிடத்தக்கது.
எனவே, ஆசிரியர்க ளின் உடல் நலனையும், மன நலனையும் கருத் தில் கொண்டு 23.4.2026 அன்று தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஆசி ரியர்களுக்கும். அதற்கு மறுநாள் 24.4.2026 (வெள்ளிக்கிழமை) அன்று விடுப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணைத் தலைவர் முஜிபுர் அந்த மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.