ஓய்வூதிய கோரிக்கையை நிறைவேற்றியதாக திமுக செய்யும் பிரச்சாரம் பொய்யானது! பழைய ஓய்வூதிய திட்ட மீட்பு இயக்கம் குற்றச்சாட்டு!(பத்திரிகை செய்தி) DMK's Campaign Claiming to Have Fulfilled Pension Demands Is False! — Old Pension Scheme Restoration Movement Alleges (Press Release)
ஓய்வூதிய கோரிக்கையை நிறைவேற்றியதாக தி.மு.க., செய்யும் பிரசாரம் பொய்யானது பழைய ஓய்வூதிய திட்ட மீட்பு இயக்கம் குற்றச்சாட்டு
மதுரை, ஏப். 22-
'தமிழகத்தில் அரசு ஊழியர்களின் 22 ஆண்டுகால ஓய்வூ திய கோரிக்கை நிறை வேற்றப்பட்டுள்ளது என தி.மு.க., செய்யும் பிரசாரம் பொய்யா னது, என, தமிழ்நாடு பழைய ஓய்வூதிய திட்ட மீட்பு இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.
மதுரையில் இயக்க மாநில ஒருங்கிணைப் பாளர் நந்தகோபால் கூறியதாவது:
தமிழ 4 2016, 2021 சட்டசபை தேர்தல்க ளின் போது தி.மு.க., தேர்தல் அறிக்கையில் பங்களிப்பு ஓய்வூதி யத்தை (சி.பி.எஸ்.,) ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப் படும் என வாக்குறுதி அளித்தது. ஆனால் அதற்கு மாறாக அரசு ஊழியர் கள், ஆசிரியர்களுக்கு துரோகம் இழைக் கும் வகையில் குழு அமைத்து 5 ஆண் டுகளாக திட்டமிட்டு தாமதம் செய்து ஆட்சி முடியும் நிலையில் தமிழ்நாடு உறுதியளிக் கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை (டேப்ஸ்) 2026 ஜன., 1 முதல் நடைமுறைப்படுத்து தமிழகத்தில் 2016, 2021 சட்டசபை தேர்தல்களின் போது தி.மு.க., தேர்தல் அறிக்கையில் பங்களிப்பு ஓய்வூதியத்தை (சி.பி.எஸ்.,) ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறை படுத்தப்படும் என வாக்குறுதி அளித்தது.
வதாக அரசாணை வெளியிட்டது. இந்த 'டேப்ஸ்' திட்டம், பழைய ஓய்வூதிய திட்டத் திற்கு நிகரானது என பொய் பிரசாரம் செய்யப்படுகிறது. இதற்காக ஜாக்டோ ஜியோ மாநில நிர்வா கிகள் பலரை தி.மு.க.. விலைக்கு வாங்கி விட்டது.
டேப்ஸ் திட்டம் அமலில் உள்ளதால் 1.1.2026 க்கு முன் 22 ஆண்டுகளில் சி.பி.எஸ்., திட்டத் தில் ஓய்வு பெற்ற 50 ஆயிரம் அரசு ஊழி யர்கள், பணியின் போது மரணமடைந்த 8 ஆயிரம் அரசு ஊழியர்களின் குடும் பங்களுக்கு 'டேப்ஸ்' திட்டம் மூலம் துளியும் பயனில்லை. இதை சாதனை திட்டம் என தி.மு.க., சொல்லிக் கொள்வது வேடிக்கையானது. புதிய 'டேப்ஸ்' திட் டம் மூலம் 22 ஆண்டு களில் ஓய்வு பெற்று மாத ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் இன்றி முதுமையில் வறுமையில் உள்ள வர்களுக்கு கடந்த 4 மாதங்களில் ஒருமுறை கூட ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. இவர்களுக்கு கருணை ஊதியம் வழங்கப்படு வதாக அவமானப் படுத்துகிறது.
டேப்ஸ் அரசாணை யில் எத்தனை ஆண்டு கள் பணியாற்றினால் 50 சதவீதம் ஓய்வூதி யம், குறைந்தபட்ச ஓய்வூதியம் எவ்வளவு என்ற அடிப்படை விவரங்கள் இல்லை. இதற்கான ஓய்வூ திய புதிய விதிகளை வெளியிடுவதில் அரசு தாமதம் செய்து, தற் போது தேர்தல் என்ற வுடன் அத்திட்டத்தை சொல்லி ஓட்டுக் கேட் பது கண்டிக்கத்தக்கது. பழைய ஓய்வூதிய திட்டத்தை ஆதரிக்கும் கட்சிகளுக்கு ஆதரவு அளிப்போம் என்றார்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.