சம வேலைக்கு சம ஊதியக் கோரிக்கை தொடர்பான கூட்டம் - நாளை (10.03.2026) சென்னையில் நடைபெறுகிறது - மூவர் குழு அறிக்கை விரைவில் வெளியாகும் என்று கடந்த மாதம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தெரிவித்த நிலையில் மீண்டும் பேச்சுவார்த்தை! Consultation meeting tomorrow (10.03.2026) regarding the demand for equal pay for equal work - Proceedings of the Director of Elementary Education
சம வேலைக்கு சம ஊதியக் கோரிக்கை தொடர்பாக நாளை (10.03.2026) கருத்து கேட்பு கூட்டம் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
நாளை சம வேலைக்கு சம ஊதிய கருத்து கேட்பு கூட்டம்
தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப்பணி சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை குறித்து குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டது இக்கோரிக்கை சார்பாக அழைக்கப்படாத பிற சங்கங்களுக்கான ஐந்தாவது கூட்டம் 10.03.2026 அன்று பிற்பகல் 2.30 மணியளவில் நடைபெற உள்ளது - தகவல் தெரிவித்தல் - சார்ந்து
தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6.
ந.க.எண்.35372/இ1/2022, நாள். 03.2026
பொருள்:
தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப்பணி சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை குறித்து குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டது இக்கோரிக்கை சார்பாக அழைக்கப்படாத பிற சங்கங்களுக்கான ஐந்தாவது கூட்டம் 10.03.2026 அன்று பிற்பகல் 2.30 மணியளவில் நடைபெற உள்ளது - தகவல் தெரிவித்தல் - சார்ந்து. பார்வை:
1. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 01.01.2023 நாளிட்ட செய்தி வெளியீடு.
2. அரசாணை (நிலை) எண்.25 பள்ளிக் கல்வி (தொ.க.3(1)) துறை நாள்.30.01.2023.
3. அரசாணை (நிலை) எண்.229 பள்ளிக் கல்வித் (.6.3(1)) . 06.12.2023.
4. नर्क का5 .730/.5.3(1)/2023-3, 5, 6, 8, 11 01.06.2023, 18.10.2023, 30.10.2023, 08.12.2023, 08.01.2025, 18.06.2025, 04.09.2025 06.03.2026 سرم.
5. சென்னை-600 006, தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள். ந.க.எண்.35372/81/2022. .23.01.2025, 03.03.2023, 06.06.2023, 26.10.2023, 01.11.2023, 19.09.2024, 20.05.2025, 20.06.2025, 23.06.2025, 21.08.2025 மற்றும் 08.09.2025.
தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 01.06.2009-க்கு பின் இடைநிலை ஆசிரியர் பணியில் நியமனம் பெற்றவர்கள் 01.06.2009-க்கு முன் இடைநிலை ஆசிரியர் பணியில் நியமனம் பெற்றவர்களுக்கு இணையான ஊதியம் கோரும் கோரிக்கைகளை ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரை செய்ய பார்வை 3-ல் காணும் அரசாணையில் அமைக்கப்பட்ட குழுவின்படி ஐந்தாவது கூட்டம் 10.03.2026 அன்று கூட்டம் நடத்துவது சார்ந்து பார்வை 4-ல் காணுமாறு அரசுக் கடிதம் பெறப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், சம வேலைக்கு சம ஊதியம் குறித்த கோரிக்கை சார்பாக பார்வை 3-ல் காணும் அரசாணையின்படி குழுவின் தலைவர் பள்ளிக் கல்வித் துறை செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் பார்வை 4-ல் காணும் 06.03.2026 நாளிட்ட அரசுக் கடிதத்தின்படி 10.03.2026 அன்று பிற்பகல் 02.30 மணியளவில் கீழ்க்காணும் அட்டவணையின்படி நடைபெறவுள்ள கருத்து கேட்பு கூட்டத்திற்கு பத்து சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்r அழைக்கப்படுகிறார்கள். மேலும் இக்கூட்டத்தில் ஒரு சங்கத்திற்கு ஒரு பிரதிநிதி வீதம் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.