தேர்தல் பயிற்சி வகுப்பில் 150 பேர் 'ஆப்சென்ட்' - அதிகாரிகள் மத்தியில் அதிருப்தி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, March 31, 2026

தேர்தல் பயிற்சி வகுப்பில் 150 பேர் 'ஆப்சென்ட்' - அதிகாரிகள் மத்தியில் அதிருப்தி

தேர்தல் பயிற்சி வகுப்பில் 150 பேர் 'ஆப்சென்ட்' - அதிகாரிகள் மத்தியில் அதிருப்தி

The provided text highlights a news report concerning absenteeism during election training sessions in Thiruvadanai. Officials have expressed dissatisfaction regarding the high number of employees who failed to attend the scheduled training for upcoming assembly election duties.

150 government employees were absent from a training session for the Thiruvadanai constituency election duties despite receiving formal notices. Only 1,281 out of 1,431 invited staff attended the training, which covered voting machine handling and election procedures.

Authorities plan to issue show-cause notices to the absentees and recommend disciplinary action if they cannot provide a valid reason. The next training session is scheduled to take place on April 11.

திருவாடானை, மார்ச் 30-திருவாடானை தொகுதி தேர்தல் பணிகளுக்காக நடத்தப்பட்ட பயிற்சி வகுப்பில் உத்தரவையும் மீறி 150 பேர் கலந்து கொள்ளாதது அதிகாரிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தேர்தல் பணி களை தொய்வின்றி முடிப் பதற்கான ஆயத்த பணி களில் தேர்தல் ஆணையம் தீவிரமாக இறங்கியுள்ளது. திருவாடானை தொகு திக்கு உட்பட்ட ஓட்டுச்சா வடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு திருவா டானை அருகே சின்னக் கீரமங்கலம் தனியார் பள் ளியில் நேற்று முன்தினம் நடந்தது.

இதில் 1431 பேருக்கு பயிற்சி இந்த தேர்தல் வகுப்பில் கலந்து கொள்வதற்காக திருவா டானை தொகுதிக்கு உட் பட்ட அரசுத்துறை ஆசி ரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் என 1431 பேருக்கு மாவட்ட தேர்தல் பிரிவு சார்பில் முறைப்படி அழைப்பு விடுக்கபட்டி ருந்தது.


இயந்திரங்களை கையாள்வது, தேர்தல் விதிமுறைகள் மற்றும் படிவங்களை பூர்த்தி செய் வது குறித்து இந்த பயிற்சி யில் விரிவாக விளக்கபட இருந்தது. பயிற்சி வகுப்பு தொடங்கிய நிலையில் அதிகாரிகள் வருகை பதி வேட்டை ஆய்வு செய்த போது அதிர்ச்சியடைந் தனர்.

அழைப்பு விடுக்க பட்ட 1431 பேரில் 1281 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். மீதமுள்ள 150 பேர் பயிற்சிக்கு வரா மல் டிமிக்கி கொடுத்தது தெரியவந்தது.

தேர்தல் பணி என்பது மிக முக்கி யமான மற்றும் தவிர்க்க முடியாத கடமையாகும். ஆனால் இத் தொகுதியில் இவ்வளவு அதிகமான ஊழியர்கள் பயிற்சிக்கு வராதது தேர்தல் நடத்தும் அலுவலர்களை அதிருப்தி யில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து தேர்தல் அலுவலர்கள் கூறியதா வது- தேர்தல் ஆணையத் தின் உத்தரவை மீறி பயிற் சியில் கலந்து கொள்ளாத 150 பேர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப் பபடும்.

முறையான காரண மின்றி வராதவர்கள் மீது தேர்தல் விதிமுறைகளின் படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு பரிந்துரைக் கப்படும். அடுத்த பயிற்சி வகுப்பு ஏப்.11ல் நடை பெறும் என்றனர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.