அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை 600 006
பத்தாம் வகுப்பு மேல்நிலை முதலாம் ஆண்டு (Arrear) / மேல்நிலை இரண்டாம்
ஆண்டு பொதுத் தேர்வுகள், மார்ச் / ஏப்ரல் 2026
தனித்தேர்வர்களிடமிருந்து சிறப்பு தக்கல் முறையில் விண்ணப்பங்கள் பதிவேற்ற
சிறப்பு வாய்ப்பு அளித்தல்
செய்திக் குறிப்பு
நடைபெறவுள்ள மார்ச் / ஏப்ரல் 2026, பத்தாம் வகுப்பு (செய்முறைத் தேர்வுகளுக்கு ஏற்கனவே விண்ணப்பித்துள்ள தேர்வர்கள் மட்டும்) / மேல்நிலை முதலாம் ஆண்டு (Arrear) இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தகுதியான தனித்தேர்வர்களிடமிருந்து, சிறப்பு தக்கல் முறையில் இணைய தளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சிறப்பு தக்கல் (சிறப்பு அனுமதி) முறையில் விண்ணப்பிப்பதற்கான நாட்கள்:
ஏற்கனவே 22122025 முதல் 08.012026 வரையிலான தேதிகள் மற்றும் தக்கல் முறையில் 09.012026 மற்றும் 10.012026 தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் பயன் அடையும் வகையில் சிறப்பு வாய்ப்பாக மீளவும் 10.02.2026 மற்றும் 11022026 ஆகிய இரு நாட்கள் மட்டும் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை அந்தந்த மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு உரிய ஆவணங்களுடன் நேரில் சென்று தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.1000/- (மேல்நிலை) / ரூ.500 (பத்தாம் வகுப்பு) சிறப்பு கட்டணமாக செலுத்தி ஆன்-லைனில் தக்கல் முறையில் விண்ணப்பிக்கலாம். இவ்வாய்ப்பு இரண்டாம் முறையாக தனித்தேர்வர் நலன் கருதி வழங்கப்படுகிறது.
ஆன் லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்தல் குறித்த தனித்தேர்வர்களுக்கான தகுதி மற்றும் அறிவுரைகள் ஆகியவற்றை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்ளலாம். மேலும், இவ்விவரங்களை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்கள், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மற்றும் அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் அறிந்து கொள்ளலாம்.
கீழ்க்கண்ட மாவட்டங்களைச் சேர்ந்த தேர்வர்கள் மட்டும் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்களில் விண்ணப்பிக்கவேண்டும்.
தேர்வுக்கால அட்டவணை
மார்ச் / ஏப்ரல் 2026. பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு (Arrear) /மேவ்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான தேர்வுக் கால அட்டவணைகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
Saturday, February 7, 2026
New
பத்தாம் வகுப்பு மேல்நிலை முதலாம் ஆண்டு (Arrear) / மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள், மார்ச் / ஏப்ரல் 2026 தனித்தேர்வர்களிடமிருந்து சிறப்பு தக்கல் முறையில் விண்ணப்பங்கள் பதிவேற்ற சிறப்பு வாய்ப்பு அளித்தல் செய்திக் குறிப்பு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.