The article discusses concerns from parents regarding the potential removal of temporary teachers in Tamil Nadu government schools due to the recent recruitment of 1,996 permanent teachers through TRB.
Parents fear that changing teachers just before the upcoming public exams for 10th and 12th graders could negatively impact student learning and exam performance.
They are requesting that temporary teachers be allowed to continue working until the end of the current academic year to ensure continuity.
Suggestions were made that new appointments should have been made earlier or after the exams.
புதிய ஆசிரியர்கள் நியமனத்தால் தற்காலிக ஆசிரியர்கள் நீக்கம்? Temporary teachers removed due to appointment of new teachers?
மாணவர்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
கே.சுரேஷ் புதுக்கோட்டை தமிழகத்தில் அரசுப் பள்ளி களில் உள்ள காலி இடங்களில், பள்ளி மேலாண்மைக் குழு மூலம் நியமிக்கப்பட்ட தற்காலிக ஆசிரியர்கள் பணிபுரிந்து வரு கின்றனர். குறிப்பாக, பொதுத் தேர்வு நடைபெறும் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 வகுப் புகளுக்கு கூடுதல் முக்கியத்து வம் அளிக்கப்பட்டு, ஆசிரியர் கள் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில், டிஆர்பி மூலம் தேர்வு செய்யப்பட்ட முது நிலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் மற் றும் கணினி பயிற்றுநர்கள் என மொத்தம் 1,996 பேருக்கு முதல் வர் ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கி, அவர் கள் பணியில் சேர்ந்துள்ளனர்.
இதனால், 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பாடம் எடுத்து வரும் தற்காலிக ஆசிரியர்கள் விடுவிக்கப்படும் நிலை உள் ளது.
அடுத்த மாதம் பொதுத் தேர்வு நடைபெற உள்ள நிலை யில், மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில், தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேர்வு நேரத்தில்... இதுகுறித்து பெற்றோர்கள் கூறியதாவது: தற்போது 1,996 ஆசிரியர்கள் நியமனம் செய் யப்பட்டுள்ளதால், இவர்கள் பணியில் சேர உள்ள இடங் களில் பணிபுரிந்த தற்காலிக ஆசிரியர்கள் விடுவிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தேர்வு நேரத்தில் புதிய ஆசிரியர் கள் நியமனம் செய்யப்பட் டுள்ளதால், மாணவர்களுக்கு புரிதல் ஏற்படுவதில் சிக்கல் உண்டாகலாம். மேலும், கவனச் சிதறல் ஏற்படவும் வாய்ப்புள் ளது.
பழைய ஆசிரியர்கள் கொடுத்து வந்த வழிகாட்டுதல் களில் மாற்றம் ஏற்படும். முக் கிய வினாத்தாள்கள், பாடக் குறிப்புகளைப் பின்பற்றுவதில் சிரமம் ஏற்படும். இதனால், மதிப் பெண் குறையவும் வாய்ப்பு உள்ளது.
எனவே, தற்காலிக ஆசிரியர் களுக்கு நடப்பு கல்வியாண்டு முடியும்வரை பணி நீட்டிப்பு வழங்க வேண்டும். புதிய ஆசிரியர் நியமனத்தை சில மாதங்களுக்கு முன்னரோ அல் லது பொதுத்தேர்வுக்குப் பின் னரோ செய்திருக்கலாம்.
தேர் தலை மையப்படுத்தி தமிழக அரசு புதிய ஆசிரியர் நியமனத் தில் தீவிரம் காட்டியது தெரி கிறது.
எனவே, புதிய ஆசிரியர் நியமனத்தால் மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பெற் றோர் தரப்பில் வலியுறுத்தப் பட்டது.
இதுகுறித்து மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர் தரப்பில் கேட்டபோது, "பணி நியமனம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர் கள் பணிக்கு வந்ததும், அங்கு பணிபுரிந்த தற்காலிக ஆசிரியர்கள் நீக்கம் செய்யப் படுவது வழக்கம். தற்போதைய சூழல் குறித்து, அரசுதான் முடி வெடுக்க வேண்டும்” என்றனர்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.