NMMS January 2026 - Hall Ticket Downloading Instructions - DGE Proceedings - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, January 2, 2026

NMMS January 2026 - Hall Ticket Downloading Instructions - DGE Proceedings



NMMS Hall Ticket Downloading Instructions by DGE!

2025 - 2026 ஆம் ஆண்டிற்கான தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு (NMMS) 10.01.2026 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு வருகைபுரியும் மாணவர்களின் பெயர்பட்டியலுடன் கூடிய வருகைத் தாட்கள் (Nominal Roll Cum Attendance Sheets) தேர்வு மையம் வாரியாக www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 05.01.2026 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே, ஒவ்வொரு தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களும் தவறாமல் பெயர் பட்டியலினை பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6 தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகைத் திட்டத் (NMMS) தேர்வுமைய பெயர்ப்பட்டியலுடன் கூடிய வருகைத் தாட்கள் (Nominal Roll Cum Attendance Sheets) நுழைவுச் சீட்டுகள் (Hall Tickets) பதிவிறக்கம் செய்தல் -தொடர்பாக. 2025 - 2026 ஆம் ஆண்டிற்கான தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு (NMMS) 10.01.2026 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு வருகைபுரியும் மாணவர்களின் பெயர்பட்டியலுடன் கூடிய வருகைத் தாட்கள் (Nominal Roll Cum Attendance Sheets) தேர்வு மையம் வாரியாக www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 05.01.2026 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே, ஒவ்வொரு தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களும் தவறாமல் பெயர் பட்டியலினை பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தேர்வுகூடநுழைவுச்சீட்டு:

மேற்படி தேர்விற்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை (Hall Tickets) 05.012025 பிற்பகல் முதல் பள்ளித் தலைமையாசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தங்கள் பள்ளிக்கான User ID /Password ஐ கொண்டு பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்கவும். தேர்வு மைய விவரத்தினை மாணவர்களுக்கு தெரிவிக்கவும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்குமாறு கனிவுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது. தேர்வுகூட நுழைவுச் சீட்டினை அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களும் பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மிக முக்கியம்:

தேர்வர்களின் நுழைவுச் சீட்டுகளில் பெயர் / பிறந்த தேதி / வகுப்பினம் (Community) ஆகியவற்றில் திருத்தம் ஏதும் இருப்பின், திருத்தத்தினை சிவப்பு நிற மையினால் கழித்து சரியான பதிவினைக் குறிப்பிட்டு, பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சான்றொப்பம் இடவேண்டும். புகைப்படம் மாறியிருந்தால், தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் தேர்வரின் சரியான புகைப்படத்தினை ஒட்டி பள்ளி தலைமை ஆசிரியர்கள் சான்றொப்பம் இடவேண்டும். மற்றொரு புகைப்படத்தை பெயர்ப்பட்டியலில் ஒட்டுவதற்காக தேர்வு மையக் கண்காணிப்பாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

தேர்வு மையக் கண்காணிப்பாளர்கள் இத்தகைய தேர்வரின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை பெயர்ப்பட்டியலிலும் தவறாது மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.