வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்ட இடைநிலை ஆசிரியர்கள் மீள பணியில் சேர அனுமதித்து ஆணை - DEO Proceedings - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, January 27, 2026

வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்ட இடைநிலை ஆசிரியர்கள் மீள பணியில் சேர அனுமதித்து ஆணை - DEO Proceedings



வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்ட இடைநிலை ஆசிரியர்கள் மீள பணியில் சேர அனுமதித்து ஆணை - DEO Proceedings Order issued allowing secondary school teachers who participated in the strike to rejoin duty - DEO Proceedings

புதுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலரின் (தொடக்கக்கல்வி) செயல்முறைகள்

பிறப்பிப்பவர்.திருமதி.பா.கனகராணி எம்.எஸ்.சி,பி.எட்,எம்.பிஃல்,

தொடக்கக்கல்வி - சமவேலை சம ஊதியம் கோரி காலவரையற்ற வேலைநிறுத்தம் - புதுக்கோட்டை கல்வி மாவட்டம் - புதுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) ஆளுகைக்குட்பட்ட பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்திலிருந்து விலகி மீள பணியேற்க அனுமதி கோரியமை - உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தல் - சார்பு. புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில், புதுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) ஆளுகைக்குட்பட்ட பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் சம வேலைக்கு சமஊதியம் கோரி 05.012026 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்ட இடைநிலை ஆசிரியர்கள் வேலைநிறுத்த்திலிருந்து விலகி மீள பணியில் சோ அனுமதி கோரி பார்வை (5)இல் காணும் கடிதத்தில் கண்டுள்ளவாறு சார்ந்த ஆசிரியர்கள் விண்ணப்பம் அளித்துள்ளனர். கீழ்க்காணும் ஆசிரியர்கள் பார்வை (1)இல் தெரிவிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் நெறிமுறைகள் மீறப்பட்டுள்ள நிலையில் நிலையில் பார்வை (2)இல் தெரிவித்துள்ள நடத்தை விதிகளுக்கு எதிராக வேலை நிறுத்தப்போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள நிலையில் போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் மீள பணியேற்க அனுமதி கோரும் நிகழ்வில் வட்டாரக் கல்வி அலுவலர்கள் சார்ந்த ஆசிரியர்கள் மீது பார்வை (3) மற்றும் (4)இல் காணும் சென்னை 06. தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் இணைய வழிக்கூட்டம் மற்றும் செயல்முறைகளில் தெரிவித்துள்ள வழிமுறைகளைப் பின்பற்றிட தெரிவித்து ஆசிரியர்கள் மீள பணியேற்க அனுமதி வழங்கப்படுகிறது. ஆசிரியர்கள் பள்ளியில் பணியேற்ற விவரத்தினை இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறும் சார்ந்த வட்டாரக் கல்வி அலுவலர்களுக்குத் தெரிவிக்கலாகிறது.

an official order from the Pudukkottai District Educational Officer regarding the reinstatement of secondary school teachers who participated in an indefinite strike seeking equal pay for equal work.

Teachers who participated in the strike from 05.01.2026 requested permission to rejoin duty.

The strike was considered a violation of the Right to Free and Compulsory Education Act and conduct rules.

Block Educational Officers were instructed to follow specific guidelines for allowing teachers back to work.

Permission for reinstatement is granted, and details of teachers rejoining must be submitted. CLICK HERE TO DOWNLOAD SG Teachers Protest - Teachers Re Joining - Orders - Director Proceedings PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.