TNPSC - 2026 தேர்வு அட்டவணை வெளியீடு.
2026 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( TNPSC வெளியிட்டுள்ளது.
#ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வு 2026 , ஆக .3 - ல் தொடங்கி 7 நாட்கள் நடைபெறும்.
#ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு -1 அறிவிக்கை ஜூன் 26 - ல் வெளியீடு ; செப் . 9 - ல் தேர்வு
#ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு- II அறிவிக்கை ஆக .11 - ல் வெளியீடு ; அக் .25 - ல் தேர்வு
#ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு- IV அறிவிக்கை அக் .6 - ல் வெளியீடு ; டிச .20 - ல் தேர்வு
தேர்வர்கள் தேர்வுக்கு ஆயத்தப்படுத்திக் கொள்வதற்காக மட்டுமே உத்தேச ஆண்டுத் திட்டம் வெளியீடு
2026 ஆண்டுத் திட்டத்தில் தேர்வுகள் சேர்க்கவோ அல்லது நீக்கப்படவோ செய்யலாம் ' என டிஎன்பிஎஸ்சி தகவல்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
எண்.3, தேர்வாணையச் சாலை, சென்னை-600 003.
செய்தி வெளியீடு
2026-ம் ஆண்டிற்கான ஆண்டுத்திட்டம் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அறிவிக்கையில் வெளியிடப்படும்.
தேர்வாணைய வரலாற்றில் முதன்முறையாக தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக (2024, 2025 மற்றும் 2026) ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு தொகுதி I, II, IIA, மற்றும் IV பணிகள் மற்றும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுகள் நேர்முகத்தேர்வு பதவிகள், நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள். பட்டயப்படிப்பு /தொழிற்பயிற்சி நிலை ஆகியவைகளுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்படவுள்ளன.
தேர்வாணைய வரலாற்றில் முதன்முறையாக 2024 மற்றும் 2025 ஆண்டுகளில், அறிவிக்கை வெளியிடப்படும் நாள். தேர்வு நடைபெறும் நாள் ஆகியவை குறிப்பிடப்பட்டு, ஆண்டுத்திட்டம் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டு, ஆண்டுத்திட்டத்தில் குறிப்பிட்டவாறு. குறித்த தேதியில் அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளது.
Wednesday, December 3, 2025
New
TNPSC 2026 Annual Planner Published - TNPSC - 2026 தேர்வு அட்டவணை வெளியீடு
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.