JA to Assistant Promotion Counselling - இளநிலை உதவியாளர் பதவியில் இருந்து உதவியாளர் ஆக பதவி உயர்வு கலந்தாய்வு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 12 ديسمبر 2025

JA to Assistant Promotion Counselling - இளநிலை உதவியாளர் பதவியில் இருந்து உதவியாளர் ஆக பதவி உயர்வு கலந்தாய்வு



JA to Assistant Promotion Counselling - இளநிலை உதவியாளர் பதவியில் இருந்து உதவியாளர் ஆக பதவி உயர்வு கலந்தாய்வு

JA to Assistant Promotion Counselling இளநிலை உதவியாளர் பதவியில் இருந்து உதவியாளர் ஆக பதவி உயர்வு முன்னுரிமை எண் 146 முதல் 399 முடிய உள்ளவர்களுக்கு கலந்தாய்வு 15-12-2025 திங்கள்கிழமை காலை 11-00 மணிக்கு கூகுள் மீட் மூலம் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடைபெறும்!! பொருள்:

பார்வை

பள்ளிக் கல்வித்துறை - இளநிலை உதவியாளர் / தட்டச்சர் /சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை III ஆகியோர்களுக்கு உதவியாளராகப் பதவி உயர்வு / பணிமாறுதல் வழங்குவது 15.03 2025 நிலவரப்படி திருத்திய கூடுதல் தேர்ந்தோர் பெயர் 1 (Revised Additional Panel to the post of Assistant) வெளியிடப்படுதல் கலந்தாய்வு விவரம் தெரிவித்தல் தொடர்பாக

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள். ந.க.எண். 012828/ •4/ இ3/2025, .05.03.2025, 22.04.2025 (SENIORITY LIST), 02.05.2025 (PANEL) 29.05.2025 (REVISED PANEL), 06.06.2025 11.11.2025 (ADDITIONAL PANEL)

பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்கள் /தட்டச்சர்களுக்கு தமிழ்நாடு அமைச்சுப்பணி சிறப்பு விதிகள், விதி 5(b) ன் படி உதவியாளர் பதவி உயர்வு மற்றும் விதி 9 ன் படி சுருக்கெழுத்துத் தட்டச்சர் நிலை-III லிருந்து உதவியாளர்களாகப் பணி மாறுதல் வழங்கும் பொருட்டு 15.03.2025 நிலவரப்படி பட்டியலில் முன்னுரிமை எண்.147 முதல் 399 ण (Drawl of Additional Panel to the post of Assistant) பார்வை(2)ல் காணும் 08.12.2025 நாளிட்ட இவ்வியக்க செயல்முறைகளின் வாயிலாக அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், 08.12.2025 நாளிட்ட இவ்வியக்க செயல்முறைகளின் வாயிலாக வெளியிடப்பட்ட தேர்ந்தோர் பெயர் பட்டியலில் முன்னுரிமை எண் எண்.146 முதல் 399 வரையிலான பணியாளர்களுக்கு 15.12.2025 அன்று காலை 11.00க்கு அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களில் கலந்தாய்வு Google Meet pour நடத்தப்பட உள்ளது. Google Meet link ன்னர் அனுப்பப்படும். 50% தற்போது கூடுதலாக ஏற்பட்ட காலிப்பணியிடங்களில் பணியிடங்களான 107 பணியிடங்களை மட்டுமே பதவி உயர்வு மூலம் நிரப்பிக்கொள்ள இயலும் என்பதனால், தேர்ந்தோர் பட்டியலில் முதுநிலையில் உள்ள 107 பணியாளர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. பதவி உயர்வினை துறப்பு செய்பவர்களுக்கு பதிலாக அடுத்து முன்னுரிமையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கும் பொருட்டு கூடுதலான எண்ணிக்கையில் தேர்ந்தோர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள அனைத்து பணியாளர்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்படும் என கருத இயலாது.

மேலும், கலந்தாய்வுக்கு உரிய வசதிகள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். இக்கலந்தாய்வு பணிக்கு ஏற்கனவே அனுபவம் உள்ள பணியாளரை நியமிக்க வேண்டும்.

தேர்ந்தோர் பெயர் பட்டியலில் உள்ள தங்கள் மாவட்டத்தைச் சார்ந்த பணியாளர்களுக்கு மட்டும் தகவல் தெரிவித்து அவர்களை மேற்குறிப்பிட்ட நாளில் காலை 10.00 மணிக்கு வருகை தரும் வகையில் தகவல் அளிக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பதிவிறக்கம் செய்ய கீழே 👇👇👇கொடுக்கப்பட்டுள்ள Click Here To Download Link- ஐ கிளிக் செய்யவும் CLICK HERE TO DOWNLOAD JA to Assistant Promotion Counselling PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.