Tamil Nadu government issues order to create new panchayat unions! - புதிய ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு!
திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, இராமநாதபுரம் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் புதிய ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு!
சுருக்கம்
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 (தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 21/1994) திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மற்றும் இராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான கிராம ஊராட்சிகளைக் கொண்ட ஊராட்சி ஒன்றியங்களைப் பிரித்தல் மற்றும் மறுசீரமைப்பு செய்து புதிய ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்குதல் - தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 (தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 21/1994) பிரிவு 15 உட்பிரிவு (1)-ன்படி அறிவிக்கை வெளியிடப்படுகிறது.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி [ப.ரா-2(1)]த் துறை
அரசாணை (நிலை) எண்.345
: 08.12.2025.
விசுவாவசு, கார்த்திகை - 22.
திருவள்ளுவர்ஆண்டு 2056.
படிக்கப்பட்டவை:
G.O.Ms.No.345 & 340 - New Unions
👇👇👇👇
Tamil Nadu government order (G.O. (Ms) No. 345) from December 8, 2025, regarding the reorganization of Panchayat Unions in six districts. The order is issued under the authority of the Tamil Nadu Panchayats Act, 1994.
It concerns the division and restructuring of Panchayat Unions in Tiruvallur, Kanchipuram, Villupuram, Tiruvannamalai, Krishnagiri, and Ramanathapuram districts.
The goal is to create new Panchayat Unions from those with a large number of village panchayats.
ஆணை:
மேலே முதலாவதாக படிக்கப்பட்ட அரசாணையில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அவர்கள் தலைமையில் மாநில அளவிலான உயர்மட்டக்குழு (High Level Committee) அமைக்கப்பட்டது. அதனடிப்படையில் பல்வேறு தேதிகளில் கூடி இப்பொருண்மைகள் மீது விரிவான ஆலோசனைகள் / விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், ஊரக உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைப்பு செய்தல் தொடர்பாக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலி காட்சி மூலமாக ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன, அதனைத் தொடர்ந்து ஊரக உள்ளாட்சி அமைப்புகள் மறுசீரமைப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் உரிய கருத்துருக்கள் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
2. மேலே இரண்டாவதாக படிக்கப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையரின் கருத்துருவில் திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மற்றும் இராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான கிராம ஊராட்சிகளைக் கொண்ட ஊராட்சி ஒன்றியங்களைப் பிரித்தல் மற்றும் மற்றும் மறுசீரமைப்பு மறுசீரமைப்பு செய்து புதிய ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்குதல் குறித்து மேலே 3 முதல் 8 வரை படிக்கப்பட்ட தொடர்புடைய மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துருக்களின் அடிப்படையில் திருவள்ளூர், காஞ்சிபுரம், மற்றும் விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள 3 ஊராட்சி ஒன்றியங்களை பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இரண்டாக பிரித்திடவும் மற்றும் திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, இராமநாதபுரம் மற்றும் விழுப்புரம் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களை மறுசீரமைப்பு செய்வதற்கும் கீழ்க்காணுமாறு விவரங்கள் பெறப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்:
(1) திருவள்ளூர் மாவட்டம்:
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிபூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 61 கிராம ஊராட்சிகளில் 410 குக்கிராமங்கள் உள்ளன. எனவே, கும்மிடிபூண்டி ஊராட்சி ஒன்றியத்தை இரண்டாகப் பிரித்து கும்மிடிபூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் 39 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி ஒரு ஊராட்சி ஒன்றியமாகவும் மற்றும் மாதர்பாக்கம் என்ற ஊராட்சி ஒன்றியத்தை புதியதாக உருவாக்கி அதில் 22 கிராம ஊராட்சிகளை 3 உள்ளடக்கி இரு ஊராட்சி தெரிவிக்கப்பட்டுள்ளது.
(2) காஞ்சிபுரம் மாவட்டம்:
ஒன்றியங்களாகவும் பிரிக்கலாம் எனத் காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 73 கிராம ஊராட்சிகளில் 369 குக்கிராமங்கள் உள்ளன. எனவே, உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தை இரண்டாகப் பிரித்து உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தில் 38 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி ஒரு ஊராட்சி ஒன்றியமாகவும் மற்றும் சாலவாக்கம் என்ற புதிய ஊராட்சி ஒன்றியத்தை உருவாக்கி அதில் 35 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி இரு ஊராட்சி ஒன்றியங்களாகவும் பிரிக்கலாம் தொவிக்கப்பட்டுள்ளது.
(3) விழுப்புரம் மாவட்டம்:
எனத் விழுப்புரம் மாவட்டம், வானூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 65 கிராம ஊராட்சிகளில் 228 குக்கிராமங்கள் உள்ளன. எனவே, வானூர் ஊராட்சி ஒன்றியத்தை இரண்டாகப் பிரித்து வானூர் ஊராட்சி ஒன்றியத்தில் 34 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி ஒரு ஊராட்சி ஒன்றியமாகவும் மற்றும் கிளியனூர் என்ற ஊராட்சி ஒன்றியத்தை புதியதாக உருவாக்கி அதில் 31 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி இரு ஊராட்சி ஒன்றியங்களாகவும் பிரிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. (4) திருவண்ணாமலை மாவட்டம் :
திருவண்ணாமலை மாவட்டம், தெள்ளார் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 61 கிராம ஊராட்சிகளில் 277 குக்கிராமங்கள் உள்ளன. பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 57 கிராம ஊராட்சிகளில் 218 குக்கிராமங்கள் உள்ளன. எனவே, தெள்ளார் ஊராட்சி ஒன்றியத்திலிருந்து 21 கிராம ஊராட்சிகளையும் மற்றும் பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியத்திலிருந்து 15 கிராம ஊராட்சிகளையும் பிரித்து புதியதாக 36 கிராம ஊராட்சிகளுடன் மழையூர் என்ற ஊராட்சி ஒன்றியம் உருவாக்கலாம். மீதமுள்ள 40 கிராம ஊராட்சிகளுடன் தெள்ளார் ஊராட்சி ஒன்றியமாகவும், 42 கிராம ஊராட்சிகளுடன் பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியமாகவும் செயல்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(5) கிருஷ்ணகிரி மாவட்டம்:
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 50 கிராம ஊராட்சிகளில் 583 குக்கிராமங்கள் உள்ளன. கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 28 கிராம ஊராட்சிகளில் 354 குக்கிராமங்கள் உள்ளன. எனவே, தளி ஊராட்சி ஒன்றியத்திலிருந்து 14 கிராம ஊராட்சிகளையும் மற்றும் கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திலிருந்து 4 கிராம ஊராட்சிகளையும் பிரித்து 4 புதியதாக 18 கிராம ஊராட்சிகளுடன் அஞ்செட்டி என்ற புதிய ஊராட்சி ஒன்றியம் உருவாக்கவும், மீதமுள்ள 36 கிராம ஊராட்சிகளுடன் தளி ஊராட்சி ஒன்றியமாகவும், 24 கிராம ஊராட்சிகளுடன் கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியமாகவும் செயல்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(6) இராமநாதபுரம் மாவட்டம்:
இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 60 கிராம ஊராட்சிகளில் 273 குக்கிராமங்கள் உள்ளன. கமுதி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 53 கிராம ஊராட்சிகளில் 251 குக்கிராமங்கள் உள்ளன. எனவே, கடலாடி ஊராட்சி ஒன்றியத்திலிருந்து 20 கிராம ஊராட்சிகளையும் மற்றும் கமுதி ஊராட்சி ஒன்றியத்திலிருந்து 13 கிராம ஊராட்சிகளையும் பிரித்து புதியதாக 33 கிராம ஊராட்சிகளுடன் சாயல்குடி என்ற ஊராட்சி ஒன்றியம் உருவாக்கவும், மீதமுள்ள 40 கிராம ஊராட்சிகளுடன் கடலாடி ஊராட்சி ஒன்றியமாகவும், 40 கிராம ஊராட்சிகளுடன் கமுதி ஊராட்சி ஒன்றியமாகவும் செயல்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(7) விழுப்புரம் மாவட்டம்:
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 51 கிராம ஊராட்சிகளில் 106 குக்கிராமங்கள் உள்ளன, காணை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 50 கிராம ஊராட்சிகளில் 98 குக்கிராமங்கள் உள்ளன. எனவே, விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியத்திலிருந்து 18 கிராம ஊராட்சிகளையும் மற்றும் காணை ஊராட்சி ஒன்றியத்திலிருந்து 19 கிராம ஊராட்சிகளையும் பிரித்து புதியதாக 37 கிராம ஊராட்சிகளுடன் கஞ்சனூர் என்ற ஊராட்சி ஒன்றியம் உருவாக்கவும், மீதமுள்ள 33 கிராம ஊராட்சிகளுடன் விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியமாகவும், 31 கிராம ஊராட்சிகளுடன் காணை ஊராட்சி ஒன்றியமாகவும் செயல்படலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனத் 3. எனவே, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மற்றும் இராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான கிராம ஊராட்சிகளைக் கொண்ட ஊராட்சி ஒன்றியங்களைப் பிரித்திடவும் மற்றும் மறுசீரமைப்பு செய்திடவும், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மற்றும் மற்றும் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர் பரிந்துரை செய்து உரிய கருத்துருவினை அரசுக்கு அனுப்பி ஆணை வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். 4. மேற்காண் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையரின் கருத்துருவினை அரசு நன்கு ஆய்வு செய்து, அதனை ஏற்க முடிவு செய்து, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மற்றும் இராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான கிராம 5 ஊராட்சிகளைக் கொண்ட ஊராட்சி ஒன்றியங்களைப் பிரித்தல் மற்றும் மறுசீரமைப்பு செய்து புதிய ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்குதல் குறித்து மேலே 3 முதல் 8 வரை படிக்கப்பட்ட தொடர்புடைய மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துருக்களின் அடிப்படையில் திருவள்ளூர், காஞ்சிபுரம், மற்றும் விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள 3 ஊராட்சி ஒன்றியங்களை பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இரண்டாக பிரித்து மற்றும் திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, இராமநாதபுரம் மற்றும் விழுப்புரம் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களை மறுசீரமைப்பு செய்து கீழ்க்காணுமாறு அமைத்து அரசு ஆணையிடுகிறது. J. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிபூண்டி ஊராட்சி ஒன்றியத்தை இரண்டாகப் பிரித்து (பிற்சேர்க்கை I-இல் உள்ளவாறு) 39 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி கும்மிடிபூண்டி எனும் ஒரு ஊராட்சி ஒன்றியமாகவும் மற்றும் 22 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி V. மாதர்பாக்கம் எனும் புதிய ஊராட்சி ஒன்றியமாகவும் உருவாக்கப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தை இரண்டாகப் பிரித்து (பிற்சேர்க்கை II-இல் உள்ளவாறு) 38 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி உத்திரமேரூர் எனும் ஒரு ஊராட்சி ஒன்றியமாகவும் மற்றும் 35 35 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி சாலவாக்கம் எனும் புதிய ஊராட்சி ஒன்றியமாகவும் உருவாக்கப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டம், வானூர் ஊராட்சி ஒன்றியத்தை இரண்டாகப் பிரித்து (பிற்சேர்க்கை III-இல் உள்ளவாறு) 34 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி வானூர் எனும் ஒரு ஊராட்சி ஒன்றியமாகவும் மற்றும் 31 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி கிளியனூர் எனும் புதிய ஊராட்சி ஒன்றியமாகவும் உருவாக்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டம், தெள்ளார் ஊராட்சி மற்றும் ஒன்றியத்திலிருந்து 21 கிராம ஊராட்சிகளையும் பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியத்திலிருந்து 15 கிராம ஊராட்சிகளையும் பிரித்து (பிற்சேர்க்கை IV-இல் உள்ளவாறு) புதியதாக 36 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி மழையூர் எனும் புதிய ஊராட்சி ஒன்றியம் உருவாக்கப்படுகிறது. மீதமுள்ள 40 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி தெள்ளார் ஊராட்சி ஒன்றியம் மற்றும் 42 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியம் என மறுசீரமைப்பு செய்யப்படுகிறது. மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஊராட்சி ஒன்றியத்திலிருந்து 14 கிராம ஊராட்சிகளையும் கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திலிருந்து 4 கிராம ஊராட்சிகளையும் பிரித்து (பிற்சேர்க்கை V-இல் உள்ளவாறு) புதியதாக 18 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி 6 அஞ்செட்டி எனும் புதிய ஊராட்சி ஒன்றியம் உருவாக்கப்படுகிறது. மீதமுள்ள 36 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி தளி ஊராட்சி ஒன்றியம் மற்றும் 24 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியம் என மறுசீரமைப்பு செய்யப்படுகிறது. இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஊராட்சி ஒன்றியத்திலிருந்து 20 கிராம ஊராட்சிகளையும் மற்றும் கமுதி ஊராட்சி ஒன்றியத்திலிருந்து 13 கிராம ஊராட்சிகளையும் பிரித்து (பிற்சேர்க்கை VI-இல் உள்ளவாறு) புதியதாக 33 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி சாயல்குடி எனும் புதிய ஊராட்சி ஒன்றியம் உருவாக்கப்படுகிறது. மீதமுள்ள 40 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி கடலாடி ஊராட்சி ஒன்றியம் மற்றும் 40 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி கமுதி ஊராட்சி ஒன்றியம் என மறுசீரமைப்பு செய்யப்படுகிறது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியத்திலிருந்து 18 கிராம ஊராட்சிகளையும் மற்றும் காணை ஊராட்சி ஒன்றியத்திலிருந்து 19 கிராம ஊராட்சிகளையும் பிரித்து (பிற்சேர்க்கை VII-இல் உள்ளவாறு) புதியதாக 37 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி கஞ்சனூர் எனும் புதிய ஊராட்சி ஒன்றியம் உருவாக்கப்படுகிறது. மீதமுள்ள 33 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியம் மற்றும் 31 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி காணை ஊராட்சி ஒன்றியம் என மறுசீரமைப்பு செய்யப்படுகிறது. இவ்வாணையினைத் தொடர்ந்து, 08.12.2025 நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் சிறப்பிதழில் பின்னிணைப்பில் கண்டுள்ள அறிவிக்கைகளை (I, II, III, IV, V, VI & VII) தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடுமாறு பணிமேலாளர், அரசு மைய அச்சகம், சென்னை-75 அவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஊரக 6. காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உள்ளாட்சி பதவிகளுக்கான பதவிக்காலம் முடிவுற்ற பின்னர் இந்த அரசாணை நடைமுறைப்படுத்தப்படும். பிற மாவட்டங்களில் உருவாக்கப்படும் புதிய ஊராட்சி ஒன்றியங்கள் அரசாணை வெளியிடப்படும் நாள் முதல் செயல்படும்.
பதிவிறக்கம் செய்ய கீழே 👇👇👇கொடுக்கப்பட்டுள்ள Click Here To Download Link- ஐ கிளிக் செய்யவும் CLICK HERE TO DOWNLOAD புதிய ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு PDF
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.