CMBFS - APP updation DEE Proceedings - முதலமைச்சரின் காலை உணவு திட்டம் - உணவு உட்கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையினை அதிகரிக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 11 ديسمبر 2025

CMBFS - APP updation DEE Proceedings - முதலமைச்சரின் காலை உணவு திட்டம் - உணவு உட்கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையினை அதிகரிக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு



முதலமைச்சரின் காலை உணவு திட்டம் - உணவு உட்கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையினை அதிகரிக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு. Chief Minister's Breakfast Scheme - Director of Primary Education orders to increase the number of students consuming the meal

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் உள்ளாட்சி பகுதிகளிலுள்ள பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்ட செயலியில் ( App ) பதிவான மாணவர்களின் உணவு உட்கொள்ளும் பதிவுகள் சதவீதம் குறைவாக இருப்பது அறிவுறுத்துதல் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.

28.11.2025.

பார்வையில் காணும் 28.1.2025 நாளிட்ட கடிதத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்ட செயலியை தினசரி கண்காணிக்கும்போது, நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் உள்ள மையங்களிலுள்ள 4,327 பள்ளிகளில் 4,68,544 மாணவ / மாணவியர் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 2.87,997 மாணவ / மாணவியர் மட்டுமே உணவு உட்கொண்டதாக செயலியில் பதிவு செய்யப்பட்டு, 60 % மட்டுமே பயனாளிகள் என உள்ளீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்வாறு குறைந்த சதவீதம் பதிவாவதற்கு காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் "சரக்கு இருப்பு தொகுதி (Inventory Module)" வெளியிடுதல் முன்னோடி (Plot) திட்டமாக செயல்படுத்தப்பட்டதில் இருந்து சிக்கல் ஏற்பட்டதாக தமிழ்நாடு மின்னாளுமை முகமை (TNeGA) மூலம் தெரிவிக்கப்பட்டது என கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து. பார்வையில் காணும் 07.11.2025 நாளிட்ட கடிதத்தின்படி, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், பள்ளிக்கு வருகை தரும் அனைத்து மாணவ/மாணவியர்களுக்கும் தினமும் காலை உணவு வழங்கப்பட்டு வரும் நிலையில், செயலியில் உணவு உட்கொண்ட மாணவ / மாணவியர் எண்ணிக்கையை சரியாக பதிவிடுவது, அந்தந்த பள்ளியின் பொறுப்பாளரின் (School In-charge) பொறுப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இணைப்பில் இத்துடன் குறிப்பிட்டுள்ள அட்டவணையின்படி முதலமைச்சரின் காலை உணவு திட்ட செயலியில் 01.11.2025 முதல் 21.11.2025 வரை உள்ள பதிவுகளை ஆய்வு செய்தபோது, 584 பள்ளிகளில் தரவு தாமதமாக பதிவேற்றப்பட்டதும், 478 கண்டறியப்பட்டது எனவும் பள்ளிகளில் எந்தத் தரவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவேற்றப்படாததும் எனவே, முதலமைச்சரின் காலை உணவு திட்ட செயலியில் உள்ளீடு செய்யப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையிலேயே நிதி ஒதுக்கீடு செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதால், நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளிலுள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஒருங்கிணைந்த சமையலறை பொறுப்பாளர்கள், சம்பந்தப்பட்ட மையப்பொறுப்பாளர்கள் மற்றும் பள்ளி பொறுப்பாளர்களுக்கு (School In-charge) உரிய அறிவுறுத்தல்கள் வழங்கி, தேவையான பயிற்சி/வழிகாட்டலை ஏற்பாடு செய்து, அனைத்து பள்ளிகளிலும் தினந்தோறும் காலை உணவு உட்கொள்ளும் மாணவ / மாணவியர் எண்ணிக்கையினை சரியாக செயலியில் பதிவு செய்ய உடனடி நடவடிக்கை எடுக்குமாறு வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (தொடக்கக்கல்வி) தெரிவிக்கப்படுகிறது.

இணைப்பு : மாவட்ட வாரியான பட்டியல்

பதிவிறக்கம் செய்ய கீழே 👇👇👇கொடுக்கப்பட்டுள்ள Click Here To Download Link- ஐ கிளிக் செய்யவும் CLICK HERE TO DOWNLOAD CMBFS - APP updation dee Proceedings PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.