Security audits to be conducted once every 3 months in engineering college and polytechnic campuses -
பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் வளாகங்களில் 3 மாதத்துக்கு ஒருமுறை பாதுகாப்பு தணிக்கை
அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு தொழில்நுட்பக்கல்வி ஆணையர் ஜெ.இன்னசென்ட் அனுப்பிய சுற்றறிக்கை:
கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் பாதுகாப்புக்கு பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளைபின்பற்றி அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளின் வளாகங்களில் மாணவர் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும்.
வளாகங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், பயிற்சி பெற்ற பாதுகாப்புபணியாளர்களை அமர்த்துதல் போன்ற அரசு உத்தரவை முழுமையாகப் பின்பற்ற வேண்டும். உள்ளூர் காவல்துறையினரின் ஒருங்கிணைப்புடன் வளாகபாதுகாப்பு தணிக்கை 3 மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டும். அதன் அறிக்கையைதங்கள் கல்வி நிறுவனத்தின் இணையதளத்தில் தவறாமல் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
Saturday, December 6, 2025
New
Security audits - பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் வளாகங்களில் 3 மாதத்துக்கு ஒருமுறை பாதுகாப்பு தணிக்கை
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.