CPS teachers working on re-appointment basis should be paid the full salary they last received during the re-appointment period - Order of the Principal Secretary, Finance Department! - மறுநியமன அடிப்படையில் பணிபுரியும் CPS ஆசிரியர்களுக்கு மறுநியமன காலத்தில் கடைசியாகப் பெற்ற முழு ஊதியம் வழங்க வேண்டும் - நிதித்துறை முதன்மைச் செயலாளர் உத்தரவு!
மறுநியமன அடிப்படையில் பணிபுரியும் CPS ஆசிரியர்களுக்கு மறுநியமன காலத்தில் கடைசியாகப் பெற்ற முழு ஊதியம் வழங்க வேண்டும் - CPS (Employee Contribution & Employer Contribution) பிடித்தம் செய்யத் தேவையில்லை - நிதித்துறை முதன்மைச் செயலாளர் உத்தரவு! Cps Clarification Order - Download
பொருள்:
பங்களிப்பு ஒய்வூதியத் திட்டம் தமிழ்நாடு பள்ளி மற்றும் கல்லூரிக் கல்விப் பணி கல்வியாண்டின் இடையில் வயது முதிர்வில் ஓய்வு பெறும் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களுக்கு அந்த கல்வியாண்டின் இறுதி வரையில் மறு பணிநியமனம் (Re-employment) ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வராத ஆசிரியர்களுக்கு அவர்கள் ஓய்வு பெறுவதற்கு முன்னர் கடைசியாக பெற்ற ஊதியத்தை மறுபணிநியமன காலத்திற்கான ஊதியமாக வழங்குதல் - தெளிவுரை வழங்குதல் தொடர்பாக.
பார்வை: 1.
அரசாணை நிலை எண்.170, பள்ளிக்கல்வி [பக5(2)] துறை. நாள் 23.10.2014
2. அரசாணை நிலை எண். 243, உயர்கல்வி (எப்1) துறை, நாள் 23.10.2014
3. அரசாணை நிலை எண்.261, பள்ளிக்கல்வி [பக5(2)] துறை, நாள் 20.12.2018
அரசாணை நிலை எண்.115, பள்ளிக்கல்வி [பக5(2)] துறை, 4. நாள் 28.06.2022
5. அரசாணை நிலை 6T 600T.59, 22.02.2016.
நிதி(ஓ.கு.தீ)துறை, நாள் 6. பல்வேறு ஆசிரியர் சங்கங்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் பார்வையில் காணும் அரசாணைகளின் மீது கவனம் ஈர்க்கப்படுகிறது. 2. பார்வை 1 முதல் 4 . இல் கண்ட அரசாணைகளில் ஒரு கல்வியாண்டின் இடையில் வயது முதிர்வு காரணமாக தொடர்புடைய ஆசிரியர்கள் பணியிலிருந்து ஓய்வு பெறும் போது ஆசிரியரின்றி மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு ஓய்வு பெறும் ஆசிரியரை அக்கல்வியாண்டு முடியும் வரை மறுநியமனம் செய்திட ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
பணிபுரியும் 3. இந்நிலையில், பங்களிப்பு ஓய்வூதியத் கீழ் ஓய்வூதியத் திட்டத்தின் ஆசிரியர்களுக்கான மறுநியமனம் தொடர்பாக உரிய தெளிவுரைகள் வேண்டி பல்வேறு ஆசிரியர் சங்கங்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை அரசு கூர்ந்தாய்வு செய்ததன் அடிப்படையில், தமிழ் நாடு அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் கல்வி மற்றும் பயிற்சி பயிற்றுவிக்கும் பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்கள் வயது முதிர்வின் கல்வியாண்டின் தொடர்புடைய இடையில் ஓய்வு பெறுவதால் மாணவர்களின் கல்வி எவ்விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு அவ்வாசிரியர் தொடர்புடைய கல்வியாண்டின் இறுதிவரை பணிபுரிய ஏதுவாக கீழ்க்கண்ட நிபந்தனைகளுடன் மறுநியமனம் செய்திட தெளிவுரை வழங்கப்படுகிறது.
காரணமாக i. பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெற்று, மறு நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் அவர்கள் வயது முதிர்வு காரணமாக ஓய்வு பெறும் நாளன்று ஓய்வு பெற அனுமதித்து தனியே ஒரு ஆணை தகுதியுடைய அதிகாரி அளவில் (Competent Authority) வெளியிடப்பட வேண்டும்.
ii. பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு அரசாணை நிலை எண். 59, நிதி (ஓ.கு.தீ) துறை, நாள் 22.02.2016-இல் வெளியிடப்பட்டுள்ள வழிமுறைகள் மற்றும் அது சார்ந்த அரசால் வெளியிடப்பட்டுள்ள அறிவுரைகளின்படி அவர்களுக்குடைய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழான இறுதித் திரண்ட தொகையினை பெற்று வழங்க வேண்டும்.
கல்வியாண்டின் iii. ஒரு மறுநியமனம் இடையில் செய்வதற்கான ஓய்வுபெறும் விருப்பக்கடிதம் ஆசிரியர்களை, தொடர்புடைய iv. ஆசிரியர்களிடமிருந்து பெறப்பட வேண்டும்.
மேற்படி மறுநியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் வயது முதிர்வில் ஓய்வு பெற்ற நாளுக்கு மறுநாள் முதல் தொடர்புடைய கல்வி ஆண்டு முடியும் வரை / தேவை உள்ள வரை இதில் எது முந்தையதோ அதுநாள் வரை ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்து ஆணை வெளியிடப்பட வேண்டும். V. மேற்சொன்ன ஆசிரியர்கள் மறுநியமனத்தின் போது அவர்கள் இறுதியாக பெற்ற மொத்த ஊதியத்தினை (Gross Salary) ஒப்பந்த அடிப்படையிலான ஊதியமாக (Contractual Payment) வழங்கப்பட வேண்டும். அவர்களிடமிருந்து பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழான பணியாளர் மற்றும் அரசுப் பங்களிப்பு ஆகியவற்றினை பிடித்தம் செய்ய தேவையில்லை.
vi. பழைய vii. viii. பெறும் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் ஓய்வூதியதாரர்களுக்கு பிடித்தம் செய்யப்படும் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்குண்டான மாதந்திர சந்தாத் தொகையே, மறுநியமனம் செய்யப்படும் ஆசிரியர்களுக்கும் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பொருட்டு மாதாந்திர சந்தாத் தொகையாக மறுநியமன ஒப்பந்த காலம் முழுவதும் பிடித்தம் செய்யப்பட வேண்டும்.
மறுநியமனம், செய்யப்படும் ஆசிரியர்களுடைய இறுதி மாத ஒப்பந்த ஊதியம் தொடர்புடைய பணிநியமனம் செய்த அதிகாரி அளவில் இழப்பில்லா சான்று (No Dues Certificate) பெற்ற பின்னர் வழங்கப்பட வேண்டும். இழப்புகள் ஏதேனும் அவருடைய இறுதி மாத ஒப்பந்த ஊதியத்திற்கு மிகைப்பட்டிருப்பின் அது குறித்து அரசின் உரிய தெளிவுரைகளை பெற்று மேல்நடவடிக்கை தொடரப்பட வேண்டும். 01.04.2003 - க்கு பின்னர் இதுநாள் வரை மறுநியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மேற்சொன்ன மறுநியமன பணிக்காலத்திற்கான பெற்றிருப்பின் ஊதிய நிர்ணயத்தின் அளவில் குறைவாக தொடர்புடைய வித்தியாசத் தொகை சம்மந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு பெற்று வழங்கப்பட வேண்டும்.
ix. கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெறும் ஆசிரியரின் பணியிடத்தினை அக்கல்வியாண்டு முடியும் வரை காலிப்பணியிடமாக அறிவிக்கப்படக்கூடாது. மேலும் அக்கல்வியாண்டில் மறுநியமனம் செய்யப்படும் ஆசிரியர் மூலம் கல்விப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்று மறுநியமனம் செய்யப்படும் ஆசிரியர்களுக்கு அவர்கள் பொருட்டு ஏற்கனவே பின்பற்றப்பட்டு வந்த மறுநியமன வழிமுறைகள் எவ்வித மாற்றமுமின்றி பின்பற்றப்படும்.
மேற்படி மறுநியமனம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள தொடர்புடைய அரசாணைகளில் குறிப்பிடப்பட்டுள்ள விடுப்பு, பணியமைப்பு மற்றும் ஏனையவை தொடர்பாக நடப்பில் உள்ள விதிகள் / வழிமுறைகள் எவ்வித மாற்றமுமின்றி பின்பற்றப்படும்.
மேற்கண்ட தெளிவுரையினை தொடர்புடைய துறைச் செயலாளர்கள் தத்தமது துறையின் கீழ் இயங்கும் சம்பந்தப்பட்ட துறை தலைவர்களுக்கு சுற்றறிக்கை வாயிலாக தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நகல்:-
பதிவிறக்கம் செய்ய கீழே 👇👇👇கொடுக்கப்பட்டுள்ள Click Here To Download Link- ஐ கிளிக் செய்யவும் CLICK HERE TO DOWNLOAD நிதித்துறை முதன்மைச் செயலாளர் உத்தரவு PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.