அரசு பள்ளியில் சக மாணவர்கள் ஒருவருக்கொருவர் தாக்குதல்
திருத்தணி
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே அருங் குளம் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல் பட்டு வருகிறது. இப்பள்ளியில் 600-க்கும் மேற்பட்ட மாணவியர் படித்து வருகின்றனர்.
மாணவ - இந்நிலையில், அருங்குளம் அரசு மேல்நிலைப் பள் ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் மாமண்டூர் கிராமத் தைச் சேர்ந்த ராகவேந்திரன் நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்றார். பின்னர், அவர் விளை யாட்டு மைதானத்தில் சக மாணவர்களுடன் கபடி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அதே பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் அருங்குளம் பகுதியை சேர்ந்த மாணவருக்கும், ராகவேந்திரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட தாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றியதால், அருங் குளம் பகுதியை சேர்ந்த மாணவர், கையில் மறைத்து வைத்திருந்த பேனா கத்தியால் ராகவேந்திரனின் இடது கையில் இரண்டு இடங்களில் கிழித்துள்ளார்.
இதில் பலத்த காயம் அடைந்த ராகவேந்திரன் ஆசிரியர்கள் மூலம் மீட்கப்பட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த கனகம்மாசத்திரம் போலீஸார், அந்த மாணவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.