ஆசிரியர் தேர்வு வாரியம்
பத்திரிகைச் செய்தி Teachers Selection Board Press Release - 16.10.2025
ஆசிரியர் தேர்வு வாரியம் பத்திரிகைச் செய்தி
அரசாணை நிலை எண்.230 மற்றும் 231 உயர் கல்வித்(F2)துறை. நாள்.06.10.2025-இன்படி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கான 4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு கடந்த 14.03.2024 அன்று வெளியிடப்பட்ட அறிவிக்கை எண். 02 2024 இரத்து செய்யப்பட்டு தற்போது ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் (Website:https://www.trb.tn.gov.in கல்லூரிகளுக்கான 2708 உதவிப் பேராசிரியர் காலிப்பணியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்புவதற்கான புதிய அறிவிக்கை எண் 04:2025 இன்று (18:10,2025) வெளியிடப்படுகிறது.
பாடவாரியான காலிப் பணியிட விவரங்கள், கல்வித் தகுதி. வயது மற்றும் விண்ணப்பம் செய்வதற்கான அனைத்து விவரங்களும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும், விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க (Online Application) 17.10.2025 ( 10.11.2025 அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிக்கை எண்:12/2019, நாள் 28.08.2019 04.10.2019 மற்றும் அறிவிக்கை எண்: 02 / 2024, நாள்:14.03.2024இன்படி, விண்ணப்பித்த பணிநாடுநர்கள் இப்புதிய அறிவிக்கையின்கீழ் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். இவர்களுக்கு இப்புதிய விண்ணப்பத்திற்கான தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களித்தும் மற்றும் வயது வரம்பில் தளர்கவும் வழங்கப்படுகிறது.
16.10.2025
இடம்: சென்னை-06
தலைவர்
https://trb.tn.gov.in/admin/pdf/8098279381AP_compressed.pdf
Friday, October 17, 2025
New
ஆசிரியர் தேர்வு வாரியம் பத்திரிகைச் செய்தி - 16.10.2025
TRB PRESS RELEASE
Tags
PG TRB,
Teacher Examination Board,
Teacher Selection Board Notice,
Teachers Recruitment Board,
Teachers Selection Board,
TRB,
TRB PRESS RELEASE
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.