பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி CPS ஒழிப்பு இயக்கம் தொடர் போராட்டம் அறிவிப்பு ... - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, March 2, 2025

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி CPS ஒழிப்பு இயக்கம் தொடர் போராட்டம் அறிவிப்பு ...

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி CPS ஒழிப்பு இயக்கம் தொடர் போராட்டம் அறிவிப்பு ...

தமிழக அரசு பழைய ஓய்வூதியத்திட் டத்தை அமல்படுத்தக் கோரி தொடர் போராட்டத் தில் ஈடுபட உள்ளதாக திண்டுக்கல்லில் சி.பி. எஸ்., ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப் பாளர் பிரெடரிக் ஏங்கெல்ஸ் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதியக் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்திட் டத்தை நடைமுறைப் படுத்துவோம் என முதல்வர் ஸ்டாலின் கடந்த தேர்தலின் போது வாக்கு றுதி அளித்தார்.

நான்காண்டுகளாகியும் டுகள் இக்கோரிக்கை குறித்து தொடர்ந்து முதல்வர் மவு னம் சாதித்து வருவதை சாதித்து சி.பி.எஸ்., ஒழிப்பு இயக் கம் கண்டிக்கிறது. 2016 ல் ஓய்வூதியம் தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை என்ன ஆனது என்பது தெரியவில்லை. தற் போது மீண்டும் ஒரு வல் லுநர் குழு அமைப்பதாக ஏமாற்றுகின்றனர். இத னால் தொடர் போராட் டத்தில் ஈடுபட சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் முடிவெ டுத்துள்ளது.

வரும் மார்ச் 13ல் மாவட்ட தலைநகரங் களில் மறியல், மே மாதம் குமரி முதல் சென்னை வரை டூவீலர் பேரணி, ஜூலையில் 72 மணி நேர உண்ணாவிரதம், செப்டம் பரில் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம், அக்டோபரில் மீண்டும் மறியல், நவம்பரில் சென்னையில் ஊர்வ லம், டிசம்பரில் ஒரு நாள் வேலைநிறுத்தம்," 2026 ஜனவரில் காலவரை யற்ற வேலை நிறுத்தம் என புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யும் வரை போராட்டம் நடக்கவுள்ளது. 90 சதவீதம் வாக் குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என முதல்வர் தெரிவிப்பது உண்மையா னால் விரிவான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்.


அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அளித்த எந்த வாக்குறு தியையும் அரசு நிறை வேற்றவில்லை. ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, சம வேலைக்கு சம ஊதி யம், சிறப்பு கால முறை ஊதியம், காலிப்பணியி டங்களை நிரப்புவோம் என தேர்தலின் போது கூறிவிட்டு ஒன்றுமே செய்யவில்லை. எதிர்கட் சியாக இருந்தபோது ஒரு நிலைப்பாடு, ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு ரு நிலைப் பாடு என தி.மு.க., ஆட்சி யாளர்கள் இருக்கின்றனர். 2026 தேர்தலிலு தேர்தலிலும் இதே போல் வாக்குறுதியளித் தால் ஏமாற மாட்டோம் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.