நாளை 06.02.2025 தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் - CEO Proceedings - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, February 5, 2025

நாளை 06.02.2025 தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் - CEO Proceedings

நாளை 06.02.2025 தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் - CEO Proceedings

நடைபெறவுள்ள மார்ச் 2025 மேல்நிலைப் பொதுத்தேர்வு சார்ந்து, மேல்நிலைப் பள்ளிகளுக்கான செய்முறைத் தேர்வுகள் 07.022025 முதல் 21022025 முடிய நடைபெறவுள்ளது. செய்முறைத் தேர்வுகள் சார்ந்து, அனைத்து அரசு / அரசு உதவிபெறும் மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் முதன்மைக்கல்வி அலுவலர் தலைமையில் 06.02.2025 அன்று காலை 8.30 மணிக்கு, தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் மகளிர் மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில் வைத்து நடைபெறவுள்ளது

இக்கூட்டத்தில் செய்முறைத் தேர்வுகளுக்கான மந்தன கட்டுகள் மற்றும் பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட இருப்பதால் அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களும் உரிய நேரத்தில் வருகை புரிந்திட அனைத்து மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். . மேலும் தலைமை ஆசிரியர்கள் மட்டுமே கூட்டத்தில் கலந்து கொள்ளவும் தெரிவிக்கப்படுகிறது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.