பாரதியார் பல்கலை Ph.D Admission - 28 ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, November 30, 2024

பாரதியார் பல்கலை Ph.D Admission - 28 ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்



பாரதியார் பல்கலை Ph.D Admission - 28 ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

பாரதியார் பல்கலை பல்வேறு துறைகளிலும், கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள பல்கலையால், அங்கீகரிக்கப்பட்ட கல்லுாரிகளிலும் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களிலும் பி.எச்டி., பகுதி மற்றும் முழுநேர படிப்புக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் இனையதளம் வாயிலாக வரவேற்கப்படுகின்றன. விண்ணப்ப கட்டணமாக 1,000 ரூபாய், எஸ்.சி., எஸ்.டி., பிரிவு மாணவர்கள் 500 ரூபாயும் செலுத்தவேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் டிச., 15ம் தேதி மாலை, 5:00 மணிக்கு முன் சமர்ப்பிக்கவேண்டும். குறிப்பிட்ட அவகாசத்திற்கு பிறகும், கட்டணமின்றியும் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

பாரதியார் பல்கலை, டிச., மாத பி.எச்டி., சேர்க்கை, 2024 ஜூன் மாதம் பொது நுழைவுத்தேர்வு, நேர்காணல் அடிப்படையில் விதிமுறைகளின் படி மேற்கொள்ளப்படும். மேலும், விபரங்களை https://b-u.ac.in/ என்ற இணைய தளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.