ஒரே பள்ளியை சார்ந்த 4 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் - CEO உத்தரவு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, October 13, 2024

ஒரே பள்ளியை சார்ந்த 4 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் - CEO உத்தரவு.



ஒரே பள்ளியை சார்ந்த 4 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் - CEO உத்தரவு.

பெரம்பலுார் மாவட்டம், அசூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. ஆறாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை உள்ள இந்தப் பள்ளியில், 156 மாணவ, மாணவியருடன் எட்டு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

பள்ளி மாணவர்கள் சிலரை, இப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் மூன்று பேர், தங்களது டூ - வீலர்களை நேற்று முன்தினம் சுத்தம் செய்ய வைத்தனர். பள்ளிக்கு சென்றிருந்த மாணவர்கள் சிலரை, நேற்று முன்தினம் இப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் மூன்று பேர், தங்களது, டூ-வீலர்களை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்ய வைத்தனர்.

இதை, அதே கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலர், தங்களது மொபைல் போனில் வீடியோவாக பதிவு செய்து, பரவ விட்டனர்.

இது குறித்து கல்வி துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, ஆசிரியர்கள் நான்கு பேர் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் அன்பழகன் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.


இது குறித்து கல்வி துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, ஆசிரியர்கள் நான்கு பேர் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் அன்பழகன் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் டூவீலரை கழுவ விட்ட 4 ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்து பெரம்பலூர் சிஇஓ உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.