தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 12 سبتمبر 2024

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு



தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

திருவள்ளூர் மாவட்ட அரசு பள்ளியின் தலைமையாசிரியர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையும், இதன் பின்னணியும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. என்ன செய்தார் அவர்? பார்க்கலாம் விரிவாக...

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமையாசிரியரால் அரங்கேற்றப்பட்டிருக்கும் மோசடிகளும், முறைகேடுகளும் தமிழக கல்வித்துறையை ஆட்டம் காணச் செய்திருக்கிறது... திருவள்ளூர் மாவட்டம், பம்மதுகுளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்தான் இந்த சம்பவம்..

தலைமை ஆசிரியரான லதா, மாணவர்களின் வருகை பதிவேட்டை திருத்தம் செய்து... 230 மாணவர்கள் படிக்க கூடிய பள்ளியில், 550 மாணவர்கள் படிப்பதாக கணக்கு காட்டியிருக்கிறார்...

இதற்கு ஏற்றார் போல கூடுதல் ஆசிரியர்களை பெற்று, ஆசிரியர் அல்லாத பணியிடங்களை அவர் நிரப்பியதும் அம்பலமாகி உள்ளது..

இதோடு இல்லாமல், 220 மாணவர்கள் பெயரில் பள்ளிக் கல்வித் துறையின் பல்வேறு விலையில்லாத திட்டங்களையும், சத்துணவு பொருட்களையும் பெற்று முறைகேட்டில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது...

இதனால், அரசுக்கு மிகப்பெரும் நிதி இழப்பு ஏற்பட்டிருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.. இந்த பலே மோசடியும், முறைகேடும் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்திருப்பதை கண்டு அதிர்ந்து போன தொடக்கக்கல்வி இயக்குனர் நரேஷ் , இதனை முறையாக ஆய்வு செய்து கண்டுபிடிக்காத வட்டார கல்வி அலுவலர் மேரி ஜோசப்பை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருக்கிறார்..

தொடர்ந்து, தலைமையாசிரியர் லதா மீதும் இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை பாய்ந்திருக்கிறது...

இந்நிலையில், இதன் எதிரொலியாய்.. தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய அரசு ஆரம்பப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் வருகை பதிவேடு உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்க்க கல்வித் துறை முடிவு செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.