1400 தற்காலிகப் BT பணியிடங்களுக்கு 30.11.2024 வரை மாதங்களுக்கு ஊதியம் வழங்கும் அதிகார ஆணை வெளியீடு!
1400 தற்காலிகப் பணியிடங்களுக்கு [1200 BT + 200 PET - G.O.Ms.No.64 Dated: 15.03.2010 - RMSA, KH Head] 30.11.2024 வரை மாதங்களுக்கு ஊதியம் வழங்கும் அதிகார ஆணை வெளியீடு!
பார்வை 1-ல் காணும் அரசாணையின்படி அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின்கீழ் 2009-2010-ஆம் கல்வியாண்டில் 200 ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, நலத்துறை நடுநிலைப்டி பள்ளிகளை 6 முதல் 10 வகுப்புகள் கொண்ட CICAGO
உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தியும், இவ்வாறு தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கும், ஒரு உயர்நிலைப் பள்ளிக்கு 6 பட்டதாரி ஆசிரியர் பணியிடம் மற்றும் ஒரு உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் வீதம் 1200 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், 200 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களும் என மொத்தம் 1400 ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிகமாக தோற்றுவித்து ஆணை வழங்கப்பட்டது. பார்வை 2-இல் காணும் அரசாணையில் இப்பணியிடங்களுக்கு 01.06.2021 முதல் 31.05.2024 வரை தொடர் நீட்டிப்பு வழங்கப்பட்டது. பார்வை 3-இல் காணும் பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளின்படி இப்பணியிடங்களுக்கு 01.06.2024 முதல் 31.08.2024 வரை மூன்று மாதங்களுக்கு விரைவு ஊதிய கொடுப்பானை (Express Pay Order) வழங்கப்பட்டு முடிவுற்ற நிலையில், 01.09.2024 முதல் 28.02.2025 வரை மேலும் ஆறு மாதங்களுக்கு ஊதியக் கொடுப்பாணை (Pay Authorization) வழங்குமாறு பள்ளிக்கல்வி இயக்குநர் பார்வை 4-இல் காணும் கடிதத்தில் அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.
2. பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவினை அரசு கவனமுடன் பரிசீலனை செய்து, மேற்குறிப்பிட்டுள்ள 1400 ஆசிரியர் பணியிடங்களுக்கு 01.09.2024 முதல் 30.11.2024 வரை மூன்று மாதங்களுக்கு ஊதியம் பெற்று வழங்க ஏதுவாக ஊதிய கொடுப்பாணை (Pay Authorization) வழங்கப்படுகிறது. மேற்படி அலுவலர்களுக்கான 01.09.2024 முதல் 30.11.2024 வரை மூன்று மாதங்களுக்கான சம்பளம் மற்றும் இதர படிகளுக்கான ஊதியப் பட்டியல்கள் உரிய அலுவலர்களால் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில், அவை ஏனைய இனங்களில் சரியாக இருக்கும் நிலையில், ஏற்றுக் கொண்டு ஊதியம் பெற அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
3. இக்கடிதம், அரசாணை (நிலை) எண்.334 நிதித்(சம்பளம்)துறை, நாள். 22.10.2022-இல் துறைச் செயலாளருக்கு பகிர்வின்படி வெளியிடப்படுகிறது. 1400 Posts Pay Order -
CLICK HERE TO DOWNLOAD PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.