23.08.2024 வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, August 19, 2024

23.08.2024 வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு



23.08.2024 வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசாமி திருக்கோவில் குடமுழுக்கு விழா நடைபெற இருப்பதால் 23 8 2024 வெள்ளிக்கிழமை அன்று தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை நாளாக மாவட்ட ஆட்சியர் ஏ கே கமல் கிஷோர் தெரிவித்துள்ளார் செ.வெ.எண்: 57

: 19.08.2024

பத்திரிக்கைச் செய்தி

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அ/மி சங்கரநாராயணசாமி திருக்கோவில் குடமுழுக்கு விழா நடைபெற இருப்பதால் 23.08.2024 வெள்ளிக்கிழமை அன்று தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை (Local Holiday) நாளாக அறிவித்து ஆணையிடப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஏ.கே கமல் கிஷோர் அவர்கள் அறிவிப்பு

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டம் மற்றும் நகரம் அ/மி சங்கரநாராயணசாமி திருக்கோவில் குடமுழுக்கு விழா எதிர்வரும் 23.08.2024 (வெள்ளி) அன்று நடைபெற இருப்பதால் அரசாணையின்படி வழங்கப்பட்டுள்ள அதிகார வரம்பிற்குட்பட்டு 23.08.2024 வெள்ளிக்கிழமை அன்று தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகளில் நடைபெற்று வரும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கு நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை (Local Holiday) நாளாக அறிவித்து ஆணையிடப்படுகிறது. மேற்குறிப்பிட்ட நாளில் அரசு தேர்வுகள் ஏதுமிருப்பின் சம்பந்தப்பட்ட தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது.

மேற்படி உள்ளூர் விடுமுறையானது செலவாணி முறிச்சட்டம் 1881 (Under Negotiabel Instrument Act -1881) ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது. இம்மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களைகொண்டு அரசு காப்புகள் (Government Securities) தொடர்பாக அவசரப் பணிகளை கவனிப்பதற்காக செயல்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலே குறிப்பிட்டுள்ள விடுமுறையை ஈடு செய்யும் வகையில் (21.09.2024) சனிக்கிழமை அன்று தென்காசி மாவட்டத்திற்கு வேலை நாளாக அறிவிக்கப்படுறது. என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஏ.கே கமல் கிஷோர் அவர்கள் தெரிவித்துள்ளார். வெளியீடு. செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தென்காசி.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.