பள்ளிகளில் உள்ள அறிவியல் ஆய்வகங்களில் தூய்மைப் பணி - Lab Cleaning - Director Proceedings - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, July 5, 2024

பள்ளிகளில் உள்ள அறிவியல் ஆய்வகங்களில் தூய்மைப் பணி - Lab Cleaning - Director Proceedingsபள்ளிகளில் உள்ள அறிவியல் ஆய்வகங்களில் தூய்மைப் பணி மேற்கொண்டு அதன் புகைப்படம் / காணொளியை (Video), EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

அரசு / அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள அறிவியல் ஆய்வகங்களில் பராமரிப்பு சார்ந்து கீழ்க்காண் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வி - மேல்நிலைக்கல்வி - அரசு /அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள அறிவியல் ஆய்வகங்களில் 08.07.2024 முதல் 10.07.2024 வரை தூய்மைப் பணி மேற்கொள்ளுதல் சார்பு -

1. அரசாணை நிலை 6T GODT.80 பள்ளிக்கல்வித் (ப.க.4(1))துறை நாள்.14.03.2024

இணை

2. G606060T-06 தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின்(பணியாளர் தொகுதி) செயல்முறைகள் 24224/15/84/2020, நாள்.05.07.2021 ந.க.எண்.

மற்றும் ந.க.எண்.89982/அ5/இ4/201 நாள். 20.09.2024

அரசு /அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள அறிவியல் ஆய்வகங்களில் பராமரிப்பு சார்ந்து கீழ்க்காண் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. 1. ஆய்வுக்கூட உபகரணங்களை (Maintainace of Micro scope, Models, Specimens, slides, Glass apparatus etc.,) பராமரித்தல், இருப்பு பதிவேடு பராமரித்தல், ஆய்வின் போது உரிய பதிவேடுகள் முன்னிலைப்படுத்த வேண்டும்.

2. ஆய்வக உதவியாளர் மேற்பார்வையின் கீழ் தூய்மைப் பணியாளர்களை பயன்படுத்தி அறிவியல் ஆய்வகத்தை சுத்தம் செய்து பராமரிக்கப்பட வேண்டும்.

3. செய்முறை பாடவேளையின் போது மாணவர்களுக்கு ஆசிரியர் கூறும் ஆய்வகப் பொருட்களை/ உபகரணங்களை கொடுத்தல் செய்முறை செயல்பாட்டிற்கு பின் ஆய்வகப் பொருட்களை / உபகரணங்களை மாணவர்களிடமிருந்து திரும்பப்பெற்று மீண்டும் உரிய இடத்தில் பாதுகாப்பான முறையில் பராமரித்தல் வேண்டும்.

4. வெப்பப்படுத்தும் உபகரணங்களை (stove, Burner of any kind,Induction Stove, Gas etc.) பாதுகாப்பாக கையாளுவதை உறுதி செய்தல் வேண்டும்.

5. வேதியியல் செய்முறை தேர்வின் போது உபயோகிக்கப்படும் அமிலங்கள் (Concentration Acids & Chemicals) உரிய பாதுகாப்பான முறையில் பயன்படுத்தி அதை உரிய இடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும்.

6. இயற்பியல்,வேதியியல்,உயிரியியல், தாவரவியல், பாடவாரியாக உள்ள செய்முறைப் பொருட்களை உரிய அலமாரி வைத்து பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். 7. மேற்காண் பணியினை தலைமையாசிரியர் ஆய்வு செய்து தூய்மையாகவும் ,உரிய பாதுகாப்பில் இருக்கின்றதா என உறுதிப் படுத்த வேண்டும்.

உயர்நிலைப்பள்ளி ஆய்வகம் மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆய்வகங்கள் நன்முறையில் பயன்படுத்தப்பட வேண்டும். அதனால் ஆய்வகங்களை சுத்தம் செய்து பயன்பாடற்ற பொருட்களை அப்புறப்படுத்தி, பராமரிக்கும் வகையில் தூய்மைப் பணியினை 08.07.2024, 09.07.2024 மற்றும் 10.07.2024 ஆகிய நாட்களில் மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் இப்பணியினை முடித்து ஆய்வகம் பயன்பாட்டில் உள்ளதை உறுதி செய்திட அதனை புகைப்படம் அல்லது காணொலி (Video) எடுத்து EMIS இணைதளத்தில் பதிவேற்றம் செய்தல் வேண்டும். இதற்காக ஏற்படும் செலவினத்தினை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி பள்ளி பராமரிப்பு மான்யம்/பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக நிதியிலிருந்து மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

மேற்காண் பணியினை செவ்வனே செய்திட அரசு /அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தமாறு சார்ந்த அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD DSE - Lab Cleaning Proceedings PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.