பள்ளிக் கல்வித் துறையில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களுக்கு (Non Teaching Staff) கட்டாய இடமாறுதல் - DSE செயல்முறைகள் மற்றும் அரசாணை! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, July 2, 2024

பள்ளிக் கல்வித் துறையில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களுக்கு (Non Teaching Staff) கட்டாய இடமாறுதல் - DSE செயல்முறைகள் மற்றும் அரசாணை!



பள்ளிக் கல்வித் துறையில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களுக்கு (Non Teaching Staff) கட்டாய இடமாறுதல் - DSE செயல்முறைகள் மற்றும் அரசாணை! பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அலுவலகங்கள் / ஆசிரியர் தேர்வு வாரியம் / இயக்ககங்கள் / பள்ளிகள் / இயக்ககங்கள் / 30.06.2024 அன்றைய நிலவரப்படி 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் நேர்முக உதவியாளர் , கண்காணிப்பாளர் / பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் / உதவியாளர் / இளநிலை உதவியாளர் / தட்டச்சர் / சுருக்கெழுத்து தட்டச்சர் -1.2.3 விவரங்கள் இணைப்பில் கண்ட படிவத்தில் பணியிட வாரியாக ( Category wise ) தனித்தனியாக a3sec.tndse @ gmail.com / cosea4sec @ gmail.com என்ற மின்னஞ்சலுக்கு ( 05.07.2024 ) அன்று மாலை 5.00 மணிக்குள் அனுப்பி வைக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) அவர்களின் செயல்முறைகள், சென்னை-06

ந.க.எண். 040524/அ3/இ1/2024, நாள் 02.07.2024

பொருள்

பள்ளிக்கல்வி பணியில் 3 பார்வை பள்ளிக்கல்வித்துறையில் பொதுப்பணி / அமைச்சுப் ஆண்டுகளுக்கு மேல் ஓரே இடத்தில் பணிபுரியும் பணியாளர்கள் வேறு அலுவலகங்களுக்கு மாறுதல் அளித்தல் அரசாணை பெறப்பட்டது - விவரம் கோருதல் - தொடர்பாக.

அரசாணை(நிலை) எண் .149. ப.க.( ப.க .4(1) துறை, நாள் 01.07.2024

அரசாணையின்படி பள்ளிக் கல்வித் துறையில் பார்வையில் காணும் அனைத்துவகை இயக்ககங்கள் / அலுவலகங்கள் நிர்வாகம் திறம்பட செயல்படும் பொருட்டு, பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் அனைத்துவகைப் பணியாளர்கள் மூன்று வருடத்திற்கு மேல் ஒரே அலுவலகத்தில்/ பணியிடத்தில் பணிபுரியும் பட்சத்தில் அவர்களை மாறுதல் செய்திடவும் மற்றும் பொதுவான விருப்ப மாறுதல் ஆண்டு தோறும் நடத்திடவும் அரசால் நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அலுவலகங்கள் / ஆசிரியர் தேர்வு வாரியம் / இயக்ககங்கள் / பள்ளிகள் / இயக்ககங்கள்/ 30.06.2024 அன்றைய நிலவரப்படி 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர் / பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் / உதவியாளர் இளநிலை உதவியாளர் / தட்டச்சர் / சுருக்கெழுத்து தட்டச்சர்-1,2,3 விவரங்கள் இணைப்பில் கண்ட படிவத்தில் பணியிட வாரியாக (Category wise) தனித்தனியாக a3sec.tndse@gmail.com / cosea4sec@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு (05.07.2024) அன்று மாலை 5,00மணிக்குள் அனுப்பி வைக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர் விவரங்கள் விடுபடாமல் முழுமையான வகையில் விவரம் அளிக்க அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். a3sec.tndse@gmail.com

cosea4sec@gmail.com

இணைப்பு:- 1. அரசாணை ORDER:-

In the Government order first read above guidelines were issued framing the policy to regulate transfers and posting of Headmasters and Teachers working in Government / Panchayat Union / Municipal Primary/Middle schools and Government /Municipal High/Higher Secondary Schools.

2. In the letter Second read above, the Director of School Education has stated that at present 37 sections are functioning in the office of the Directorate of School Education. An audit wing is also separately functioning under the control of Financial Advisor and Chief Accounts Officer (FA&CAO). Similarly other Directorates such as Directorate of Elementary Education, Directorate of Private Schools, State Council for Education Research and Training (SCERT), Directorate of Non-formal and Adult Education are also having equal importance under the control of Secretary, School Education department.

Chief Educational Offices, District Educational Offices, and Block Educational Offices are functioning in the Revenue district, Educational District and Block level so as to visit, inspect all types of schools and implement various schemes in the field level. Teachers Recruitment board is functioning with 13 sections to conduct TET, competitive examinations to select various category of teachers for Government schools under the control of School Education department, Lecturers for Government Colleges/Polytechnics under the control of Higher education department by following Rule of reservation and other recruitment norms. State Project Directorate (Samagra Shiksha) is functioning with 7 sections to implement Samagra Shiksha in the schools.

3. A General transfer norms and guideline is proposed to be implemented for the first time in order to facilitate, regulate the transfers of non-teaching staff of School Education Department and also for efficient discharge of their duties and responsibilities to improve the overall administration. Therefore, the Director of School Education has now requested the approval of the Government, so as to frame guidelines for General Transfer of Non-Teaching staff in the Directorate School Education and to conduct the General Transfer counselling for the year of 2024-2025.

4. The Government after careful examination, hereby accept the proposal of the Director of School Education to frame guidelines for the General transfer of Non- teaching staff in the Directorate of School Education and to conduct the General Transfer counselling for the year of 2024-2025 as below:- CLICK HERE TO DOWNLOAD DSE - Over 3 Years - DSE Proceedings PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.