Lump Sum Amount - Human Resource Management Department has issued a separate order for each department! அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை (Lump Sum Amount) - ஒவ்வொரு துறையும் விரைந்து தனியாக அரசாணை வெளியிட மனித வள மேலாண்மைத் துறை உத்தரவு!
அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை (Lump Sum Amount) - மனித வள மேலாண்மைத் துறை 26.10.2023 அன்று வெளியிட்ட அரசாணையைப் பின்பற்றி ஒவ்வொரு துறையும் விரைந்து தனியாக அரசாணை வெளியிட மனித வள மேலாண்மைத் துறை உத்தரவு! மேலே பார்வையில் காணும் அரசாணை மற்றும் அரசு கடிதத்தின் மீது தங்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது.
மாநில அரசு ஊழியர்களுக்கு கூடுதல் கல்வித் தகுதிக்கான ஊக்கத் தொகை (Lumpsum) வழங்கி பார்வை 1ல் காணும் அரசாணையில் ஆணை வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து பார்வை இரண்டில் காணும் அரசு கடிதத்தில், அரசுப் பணியாளர்களுக்கு அவர்கள் பெற்றிடும் கூடுதல் கல்வித் தகுதிக்கான ஊக்கத் தொகை வழங்குவது தொடர்பான சில அறிவுறுத்தங்கள் வெளியிடப்பட்டது.
2. மேலும், பார்வை மூன்றில் காணும் அரசாணையில், மாநில அரசு ஊழியர்களுக்கு கூடுதல் கல்வித் தகுதிக்கான ஊக்கத் தொகை (Lumpsum) வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு, அதில் குறிப்பாக 10.03.2020-க்கு முன்னர் கூடுதல் கல்வித் தகுதி பெற்ற தகுதியுடைய நபர்களுக்கு முன் ஊதிய உயர்வு இதுவரை வழங்கப்படாத நேர்வுகளுக்கும் ஊக்கத் தொகை (Lumpsum) மட்டுமே வழங்கப்பட வேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது. 3. பார்வை மூன்றில் காணும் அரசாணையில், பத்தி 8-ல் குறிப்பிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பத்தி B(xii)-ல் தெரிவித்துள்ளவாறு மனித வள மேலாண்மைத் துறை மற்றும் நிதித் துறையுடன் கலந்தாலோசித்து, உரிய தலைமைச் செயலகத் துறைகள் ஒவ்வொரு துறைகளிலும், உரிய பதவி மற்றும் கூடுதல் கல்வித் தகுதிகளை தெரிவு செய்து அத்துறைகளுக்கென்று தனித்தனியாக அரசாணை வெளியிட்டு, அதன் அடிப்படையிலேயே ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்ட நிலையில், சில துறைகளில் பெறப்படும் தனிநபர் நேர்வு தொடர்பான விண்ணப்பங்கள் குறித்தான கோப்புகள் தலைமைச் செயலகத் துறைகள் அப்படியே இத்துறையின் குறிப்பிற்கு அனுப்பி வருகின்றன. பார்வை மூன்றில் காணும் அரசாணையில் வெளியிடப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி இதுவரை எந்த ஒரு துறையும் அந்தந்த துறைகளுக்கென தனிப்பட்ட அரசாணை (Specific Order) எதுவும் வெளியிடப்படவில்லை. அவ்வாறு துறைகளுக்கான ஆணைகள் இல்லாதபட்சத்தில், இத்துறையில் அக்கோப்புகளில் உரிய குறிப்புரை வழங்க இயலாத நிலை உள்ளது. இவை தேவையற்ற கால தாமதத்தினை ஏற்படுத்துகிறது. 4. எனவே, இதனை தவிர்க்கும் பொருட்டு தலைமைச் செயலகத்தில் உள்ள அனைத்து துறைகளும் அத்துறையின் பணியாளர்களுக்கு கூடுதல் கல்வித் தகுதிக்கான ஊக்கத் தொகை வழங்கும்பொருட்டு, அத்துறையின் எந்தெந்த பதவிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கலாம் என்பதை பரிந்துரைத்து, அப்பதவிகளுக்குரிய தற்போதுள்ள பணிவிதிகளின்படி தேவையான கல்வித் தகுதிகள் என்னென்ன, அப்பதவியின் கடமைகளும் பொறுப்புகளும் என்னென்ன, அப்பதவியின் பணிகள் தொடர்பாக கூடுதல் கல்வித் தகுதி எவையெவை, அக்கூடுதல் கல்வித் தகுதி எந்தெந்த வகையில் அத்துறையின் வளர்ச்சிக்கும், அரசிற்கும் பங்களிப்புள்ளதாக அமையும் போன்ற அனைத்து விவரங்களும் அடங்கிய உரிய கருத்துருக்களை தத்தமது துறையின் கீழ் இயங்கும் அனைத்து துறைத் தலைமையகங்களிலிருந்தும் (அதாவது இயக்குநரகங்கள் ஆணையரகங்கள்) விரைந்து பெற்று சம்மந்தப்பட்ட நிருவாகத் துறையளவில் முழுமையாக ஆய்வு செய்து, முடிவெடுத்து.
மனித வள மேலாண்மை மற்றும் நிதித் துறைகளுடன் கலந்தாலோசித்து, அதனடிப்படையில் அத்துறையின்கீழ் பணிபுரியும் தகுதிவாய்ந்த அரசுப் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்குவது தொடர்பாக விரைந்து தனியாக ஆணை வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறேன். CLICK HERE TO DOWNLOAD Govt Guidelines - Lump Sum Amount PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.