9 - 12th std | மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி கையேடு மாதவாரியாக பாடத்திட்டம் , மற்றும் வழிகாட்டு வகுப்பு நடைபெறும் நாட்கள் நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, June 13, 2024

9 - 12th std | மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி கையேடு மாதவாரியாக பாடத்திட்டம் , மற்றும் வழிகாட்டு வகுப்பு நடைபெறும் நாட்கள் நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்



9 - 12th std | மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி கையேடு மாதவாரியாக பாடத்திட்டம் , மற்றும் வழிகாட்டு வகுப்பு நடைபெறும் நாட்கள் நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - 9 - 12th std | Higher Education Guidance Manual for Students Monthly Syllabus, and days of guidance classes are provided depending on the procedures of the Director of Integrated School Education.

நான் முதல்வன் திட்டம் 2024 கல்வியாண்டு 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி கையேடு மாதவாரியாக பாடத்திட்டம் , மற்றும் வழிகாட்டு வகுப்பு நடைபெறும் நாட்கள் நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் கல்வியாண்டு 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி கையேடு பாடத்திட்டம். வகுப்பு நடைபெறும் நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்து

மாதவாரியாக நாட்கள் மற்றும் வழிகாட்டு பள்ளிக் கல்வித் துறையின் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான நாட்காட்டி வேலைவாய்ப்பு வழிகாட்டி நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி கையேடு வழங்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து. பார்வையில் காணும் பள்ளிக் கல்வித் துறையின் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான நாட்காட்டியில் குறிப்பிட்டுள்ளபடி, அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் கையேட்டில் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் கொடுக்கப்பட்டுள்ள பாடப்பொருள் சார்ந்த வகுப்புகள் வருகின்ற ஜூன் முதல் வாரம் முதல் -1 இணைப்பு செய்யப்பட்டு இல் நடத்துவதற்கான பாடவேளைகள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. எனவே. தற்போது 2024 2025 ஆம் கல்வியாண்டில் ஜூன் 2024 முதல் மார்ச் 2025 வரை உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி கையேட்டில் கற்பிக்கப்பட வேண்டிய பாடங்கள் சார்ந்த பாடத்திட்டம் வாரம் வாரியாக இணைப்பு - 2 இல் வழங்கப்பட்டுள்ளது.

பொறுப்புகளும் கடமைகளும் அ.தலைமையாசிரியர்கள்:

அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களும் மாணவர்களுக்கு மேற்குறிப்பிட்ட மாதவாரியாக கற்பிக்கப்பட வேண்டிய உயர்கல்வி வழிகாட்டி பாடத் திட்டங்களை தங்கள் பள்ளிகளில் உயர்கல்வி வழிகாட்டி பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு (CG Teacher Counsellor) உடனடியாக வழங்குதல் வேண்டும்.

உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி வகுப்புகள் பள்ளியின் உயர் தொழில் நுட்ப கணினி ஆய்வகத்தில்(Hi Tech Lab) நடத்தப்பட வேண்டும்.

உயர்கல்வி வழிகாட்டுதல்கள் வழங்க பள்ளிக்கு அழைத்து வரப்படும் துறைசார் வல்லுநர்கள் ஒதுக்கப்பட்டுள்ள பாட வேளைகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி கையேட்டில் பயிற்சி பெற்ற ஆசிரியர் பயிற்றுநர்கள் உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி கையேட்டில் உள்ள விவரங்கள் மாணவர்களுக்கு உரிய முறையில் கற்பிக்கப்படுகின்றனவா என்பதனையும், அதன் மூலம் மாணவர்கள் பயனடைந்துள்ளனரா என்பதனையும் தலைமையாசிரியர் பார்வையிடுதல் வேண்டும்.

அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் மதிப்பீடுக்காக (Assessment) ஒதுக்கப்பட்டுள்ள நாட்களில் தவறாது மதிப்பீடு நடத்துதல் வேண்டும். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்:

வழங்கப்பட்டுள்ள உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி விவரங்களை கையில் வைத்திருத்தல் வேண்டும்.

பாட அட்டவணை

மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மேற்கூறியவாறு அனைத்து மாணவர்களுக்கும் வாரவாரியாக பாடங்கள் கற்பிக்கப்படுகின்றனவா என்பதனை உறுதி செய்தல் வேண்டும்.

7 தேசிய பல்கலைக் கழகங்கள் / உயர்கல்வி நுழைவுத் தேர்வுகள் குறித்த விவரங்கள் சுற்றறிக்கைகளாக இயக்குநரகத்தில் இருந்து அனுப்பப்பட்டு வருகின்றன.

சார்ந்த மாவட்டத்தில் உள்ள ஆசிரியர் பயிற்றுநர்களுடன் இணைந்து விருப்பம் தெரிவித்த மாணவர்களை குறித்த நாட்களுக்குள் விண்ணப்பம் செய்திட உதவ வேண்டும்.

உயர்கல்வி வழிகாட்டி பயிற்சி பெற்ற ஆசிரியர்கள்:

உயர்கல்வி பாடங்களை ஒவ்வொரு மேல்நிலைப் பள்ளியிலும் உள்ள உயர்கல்வி வழிகாட்டி பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தலைமையாசிரியரின் வழிக்காட்டுதலுக்கிணங்க. வேலைவாய்ப்பு வழிகாட்டி. கையேட்டில் வழங்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு கற்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள். அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் உள்ள உயர்கல்வி வழிகாட்டி பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இணைத்து இருக்கின்ற Telegram/\Vhatsapp குழுவில் தொடர்ச்சியான விளக்கங்கள் மற்றும் உரையாடல்கள் பதிவிடல் வேண்டும். தேசிய பல்கலைக் கழகங்கள் / உயர்கல்வி நுழைவுத் தேர்வுகள் குறித்த விவரங்கள் சுற்றறிக்கைகளாக இயக்குநரகத்தில் இருந்து அனுப்பப்பட்டு வருகின்றன.

சார்ந்த மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுடன் இணைந்து விருப்பம் தெரிவித்த மாணவர்களை குறித்த நாட்களுக்குள் விண்ணப்பம் செய்திட வேண்டும்.

எனவே அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் இச்செயல்முறைகளை அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கும் வழங்கி மேற்கூறப்பட்டுள்ளவாறு உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி ஆசிரியர்கள் வாயிலாக அனைத்து மாணவர்களுக்கு கற்பிக்கவும் அதன் மூலம் மாணவர்கள் பயனடைவதை உறுதி செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு:

1. வகுப்பு நடைபெறும் நாட்களின் விவரங்கள்

2. 9.10.11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் மற்றும் பாடங்கள் சார்ந்த விவரங்கள் (வாரம் வாரியாக) CLICK HERE TO DOWNLOAD Class - 9,10,11 &12 Time table & Lesson Plan PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.