GENERAL TRANSFER COUNSELING INSTRUCTIONS REG - Transfer Norms பள்ளிக்கல்வித்துறை (உயர் மேல்நிலை பள்ளிகள்) - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, May 11, 2024

GENERAL TRANSFER COUNSELING INSTRUCTIONS REG - Transfer Norms பள்ளிக்கல்வித்துறை (உயர் மேல்நிலை பள்ளிகள்)



GENERAL TRANSFER COUNSELING INSTRUCTIONS REG - Transfer Norms பள்ளிக்கல்வித்துறை (உயர் மேல்நிலை பள்ளிகள்)

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் சென்னை-6 ந.க.எண். 26366 / சி3 / இ1/2024 நாள்.10.05.2024

பொருள்:-

பார்வை:-

பள்ளிக் கல்வி - 2024-25ம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு - மே 2024 மாதம் நடத்துதல்- விருப்ப மாறுதல் கோரும் விண்ணப்பங்களை கல்வி தகவல் மேலாண்மை முகமையில் (EMIS) இணையத்தில் பதிவேற்றம் செய்தல்- அறிவுரைகள் வழங்குதல் - சார்பு.

1)அரசாணை (நிலை)எண்.176 பள்ளிக் கல்வி (பக5(1) துறை நாள்.17.12.2021

2)சென்னை-6 பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் நாள்.30.12.2021 ந.க.எண்.25154/அ1/இ2/2021

3)அரசாணை(நிலை)எண்.12 பள்ளிக் கல்வி (பக5(1) துறை நாள்.03.02.2022

4) அரசாணை (நிலை)எண்.15 பள்ளிக் கல்வி (பக5(1) துறை நாள்.10.02.2022

5)அரசாணை (நிலை)எண்.94, பள்ளிக் கல்வி (பக5(1) துறை நாள். 24.6.2023

6) அரசாணை (நிலை)எண்.26, பள்ளிக் கல்வி (பக5(1) துறை நாள்.24.1.2024

7) அரசுக் கடித எண்.3835/பக5(1)/24-1 நாள்.29.4.24 8)தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின்செயல்முறைகள் ந.க.எண்.17929/அ1/இ4/2023 நாள்.06.05.2024

பார்வையிற் -0- காணும் அரசாணைகள் மற்றும் செயல்முறைகளின் அடிப்படையில் கடந்த 2023-24ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் மற்றும் பதவி உயர்வுகள் சார்பாக வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டது. அதனை பின்பற்றி கடந்த ஆண்டு (2023-24) ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.

2) அதேபோல 2024-25ஆம் கல்வியாண்டிற்கும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வினை நடத்த பார்வை- 7ல் காணும் அரசுக் கடிதத்தின் மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இக்கலந்தாய்வு கல்வி தகவல் மேலாண்மை முகமை (EMIS) இணையதள வாயிலாக நடைபெறும் எனவும், அதற்கான ஆயத்தப்பணிகளை மேற்கொள்ளவும் தெரிவித்து இக்கலந்தாய்விற்கான காலஅட்டவணையினை பார்வை-8ல் காணும் செயல்முறைகளின் வாயிலாக உத்தேச அனைத்து முதன்மைக் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

கல்வி அலுவலர்களுக்கும் 12/ 3) மேற்படி மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவிக்கும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது குறித்து கீழ்க்கண்ட அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

4) இந்த கல்வியாண்டில் (2024-25) ஆசிரியர்களுக்கான கோரி விண்ணப்பிக்க தற்போது பணிபுரியும் பள்ளியில் 01.06.2024 அன்றைய நாளில் ஓராண்டு பணி முடித்திருக்க வேண்டும்.

பொதுமாறுதல் கோரி 5) ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யும் முறை > ஒவ்வொரு ஆசிரியரும் மாறுதலுக்கான விண்ணப்பத்தினை விண்ணப்பிக்கும்போது EMIS இணையத்தில் தங்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட Individual Login IDஐ பயன்படுத்தி EMIS வெளியிடப்பட்டுள்ள மாறுதல் கோரும் படிவத்தில் உரிய விவரங்களை பதிவேற்றம் செய்திடல் வேண்டும். அவ்வாறு பதிவேற்றம் செய்யப்படும்போது ஏதேனும் தங்கள் சார்பான விவரங்கள் தவறுதலாக இருப்பின் (பிறந்ததேதி, பணியில் சேர்ந்த நாள், தங்கள் பெயர், பள்ளியின் பெயர் மற்றும் இதரவைகள்) அதிலிருந்து வெளியேறி தங்கள் பள்ளிக்கென உள்ள Login IDயில் Teacher Profile சென்று தவறாக உள்ள விவரங்களை சரிசெய்யப்பட்ட பின்னர் மீளவும் தங்களுடைய Individual Login IDஐக்கு சென்று அனைத்து விவரங்களையும் சரியாக பூர்த்தி செய்யப்பட்டவுடன் Submit செய்திடல் வேண்டும்.

ஆசிரியரின் மாறுதல் விண்ணப்பத்தினை பெற்ற பள்ளியின் தலைமை ஆசிரியர் பள்ளி Login IDஐ பயன்படுத்தி மேற்படி மாறுதலுக்கு விண்ணப்பித்த ஆசிரியரின் பூர்த்தி செய்யப்பட்ட விவரங்களை View செய்து அனைத்தும் சரியாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என உறுதி (பணிப்பதிவேட்டுடன் ஒப்பிடுதல்) செய்த பின்னர் முதல் கட்டமாக பள்ளித் தலைமை ஆசிரியர் Approval செய்யப்படவேண்டும்.

> மேற்படி பள்ளித் தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு விண்ணப்பித்த சம்மந்தப்பட்ட ஆசிரியர்களின் விண்ணப்பத்தினை Approval செய்யப்பட்ட பின்னர் அதனை மூன்று நகல்கள் எடுத்து ஒன்றினை சார்ந்த ஆசிரியருக்கு சார்பு செய்துவிட்டு மற்றொரு பிரதியினை சம்மந்தப்பட்ட ( CEO) முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைத்திடல் வேண்டும். அரசு உயர்/மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் மாறுதல் விண்ணப்பத்தினை தலைமை ஆசிரியரால் ஒப்புதல் செய்யப்பட்ட பின்னர் இரண்டாம் கட்டமாக முதன்மைக் கல்வி அலுவலர் தங்களுக்கென ஒதுக்கீடு செய்ப்பட்ட Login IDஐ பயன்படுத்தி மேற்படி மாறுதலுக்கு விண்ணப்பித்த ஆசிரியரின் பூர்த்தி செய்யப்பட்ட விவரங்களை View செய்து அனைத்தும் சரியாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என உறுதி செய்த பின்னர் இரண்டாம் கட்டமாக முதன்மைக் கல்வி அலுவலர் 2nd Approval செய்யப்படவேண்டும்.

மாறுதல் கோரும் விண்ணப்பத்தில் முன்னுரிமை (Priority) கோரி விண்ணப்பிக்கும்போது அதற்கான உரிய அலுவலரால் அளிக்கப்பட்ட ஆதாரத்தை (ஆவண நகல்) இணையத்தில் பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.

> தற்போது பணிபுரியும் பள்ளியில் மாறுதல் பெற்ற வகை (ஏற்கனவே பெற்ற மாறுதல் ஆணை இணைக்கப்படல் வேண்டும்) i)விருப்ப மாறுதல் ii)மனமொத்த மாறுதல் iii)நேரடி நியமனம் iv)பதவி உயர்வு v)நிருவாக மாறுதல் vi)அலகு மாறுதல் vii) பணிநிரவல் இவற்றில் எந்த வகை என்பதை உரிய ஆதாரத்துடன் பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.

6)அரசு உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான மாறுதல் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யும் முறை

> ஒவ்வொரு தலைமை ஆசிரியரும் தங்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட Individual Login IDஐ பயன்படுத்தி EMISல் வெளியிடப்பட்டுள்ள மாறுதல் கோரும் படிவத்தில் உரிய விவரங்களை பதிவேற்றம் செய்திடல் வேண்டும். அனைத்து விவரங்களையும் சரியாக பூர்த்தி செய்யப்பட்டவுடன் Submit செய்திடல் வேண்டும்.

மாறுதலுக்கு விண்ணப்பித்த அரசு உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் விண்ணப்பங்களை சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர் / முதன்மைக் கல்வி அலுவலர்கள் (பணிப்பதிவேட்டுடன் ஒப்பிட்டு) தங்களுக்குரிய Login IDஐ பயன்படுத்தி சரிபார்த்து ஒப்புதல் (Approval) அளிக்கப்படவேண்டும். ஒப்புதல் அளிக்கப்பட்ட விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து தலைமை ஆசிரியர் கையொப்பமிட்டு அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் எனில் மாவட்டக் கல்வி அலுவலரிடமும் / அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் எனில் முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைத்திடல் வேண்டும். 7) பொதுமாறுதல் சார்பாக அறிவுரைகள் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான மேற்படி மாறுதலுக்கு விண்ணப்பித்த அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை தலைமை ஆசிரியர் ஒப்புதல் (Approval) அளித்த பிறகு ஒரு பிரதியினை முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும் அதனை முதன்மைக் கல்வி அலுவலர்கள் சரிபார்க்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்கள் / தலைமை ஆசிரியர்களின் விண்ணப்பங்களை / மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஒப்புதல் (Approval) அளிக்க தங்களுக்கென EMIS மூலமாக ஒதுக்கீடு செய்யப்பட் User Name and Pasword ஐ பயன்படுத்தி ஆசிரியர்களின் மாறுதல் சார்பான விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதை சரிபார்த்து உறுதி செய்து ஒப்புதல் அளிக்கப்படவேண்டும்.

மேற்படி மாறுதல் கோரும் விண்ணப்பங்களை 13.05.2024 முதல் 17.05.2024 அன்று 06.00 பிப வரை EMISல் இணையத்தில் பதிவேற்றம் மேற்கொள்ளலாம்.

மாறுதல் விண்ணப்ப படிவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள முன்னுரிமை (Priority) அடிப்படையில் விண்ணப்பத்தில் காரணம் குறிப்பிடும்போது அதற்குரிய சான்றிதழ்கள் முதன்மைக் கல்வி சரிபார்த்திடல் வேண்டும்.

01.06.2024 அன்றைய நிலவரப்படி அலுவலரால் அனைத்துவகையான ஆசிரியர்களின் நிரப்பத்தகுந்த காலிப்பணியிட விவரங்களை (Eligible Vacancy Only) CEO Login IDஐ பயன்படுத்தி EMIS இணையதளத்தில் அதற்கென உள்ள உரிய படிவத்தில் பதிவேற்றம் செய்திடல் வேண்டும். ஆசிரியரின்றி உபரிக் காலிப் பணியிடத்தினை (Surplus Post Without Person) எக்காரணம் கொண்டும் காலிப்பணியிடமாக (பதிவேற்றம் செய்திடக்கூடாது) கருதகூடாது.

மேலும் காலிப்பணியிட விவரங்கள் EMIS இணையத்தில் பதிவேற்றம் செய்து முடிக்கப்பட்டவுடன் பின்னர் சேர்க்கை / நீக்கம் / திருத்தங்கள் செயல்படுமாறு போன்றவைகளுக்கு இடமளிக்காமல் அறிவுறுத்தப்படுகிறது. > பணிநிரவல் (Deployment) கலந்தாய்வுக்கு மட்டும் காண்பிக்கப்படும் கூடுதல் தேவையுள்ள (Need Post) காலிப்பணியிடங்களையும் மேற்படி இணையத்திலேயே அதற்கென உள்ள உரிய படிவத்தில் பதிவேற்றம் செய்திடல்வேண்டும்.

8) பொதுவான அறிவுரைகள் > மேல்நிலைப் பிரிவில் உயிரியியல் பாடப்பிரிவில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள் பொதுமாறுதல் விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யும்போது தாம் பயின்ற Main Subject (Major) குறிப்பிடப்படவேண்டும் மற்றும் எந்த பணியிடத்தில் (Post Details Zoology, Botony, Biology) பணிபுரிகிறார் என்ற விவரத்தினையும் குறிப்பிடப்படவேண்டும்.

> கணவன்-மனைவி (Spouse Priority) முன்னுரிமையில் மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் அவரவர்கள் பணிபுரியும் அலுவலகம் / பள்ளி அரசு மற்றும் அரசுத் துறையின் நிருவாகத்தின் கீழ் உள்ளதா என்ற விவரத்தினையும், அதற்கான உரிய அலுவலரிடம் (Competent authority) பெறப்பட்ட சான்றினையும் பதிவேற்றம் செய்யப்படவேண்டும். கணவன்-மனைவி பணிபுரியும் இடத்திற்கான தொலைவு 30கி.மீ மேல் உள்ளதை சரிபார்த்து உறுதி செய்யப்படவேண்டும்.

மனமொத்த மாறுதல்கள் (Mutual Transfer) மற்றும் அலகுவிட்டு அலகு மாறுதல் & துறை மாறுதல்கள் (Unit Transfer) சார்பான விண்ணப்பங்கள், பொதுமாறுதல் கலந்தாய்வு முடிந்த பின்னர் பரிசீலிக்கப்படவேண்டும்.

உள்மாவட்டத்திற்கு மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்கள் தங்களுக்குரிய சுழற்சி (turn) வரும்போது அம்மாவட்டத்தில் தங்களுக்கு மாறுதல் பெற்றுக்கொள்ள விருப்பமுள்ள காலிப்பணியிடம் ஏதும் இல்லையெனில் Not Willing என தெரிவு செய்து கொள்ளலாம். பின்னர் உள்மாவட்டத்திற்கான கலந்தாய்வு முழுமையாக முடிவு பெற்ற பிறகு இறுதியாக மீதம் உள்ள (Resultant Vacancy) காலிப்பணியிடங்களில், அவ்வாறு Not Willing தெரிவு செய்தவர்களுக்கு மீண்டும் ஒரு முறை உள்மாவட்டத்திற்குள் மாறுதல் பெற வாய்ப்பு அளிக்கும் வகையில் அவரவர்களின் முன்னுரிமைப்படி மீண்டும் ஒரு முறை (One more choice) காலிப்பணியிடங்களை விருப்பத் தேர்வு செய்ய அனுமதிக்கப்படுவர். மாவட்டம் விட்டு மாவட்டம் (Inter district transfer) கோரி விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் கலந்தாய்வின் போது தற்போது பணிபுரியும் மாவட்டத்தினை தவிர்த்து பிற மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடத்தினையே தெரிவு செய்யப்படவேண்டும். (தனியரின் தற்போது பணிபுரியும் மாவட்டம் EMIS இணையத்தில் காண்பிக்கப்படமாட்டாது) மேலும் மாறுதலுக்கும் விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் உள்மாவட்டம் / மாவட்டம் விட்டு மாவட்டம் ஆகிய இரு கலந்தாய்விற்கும் விண்ணப்பிக்கும் பட்சத்தில் அவர்கள் உள்மாவட்டத்திற்குள் நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொண்டு மாறுதல் ஆணை பெற்றவர்கள் மாவட்டம் விட்டு மாவட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ள இயலாது.

மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து கலந்தாய்வு நடைபெறும் அன்றைய நாளில் வருகைபுரியாமலோ (Absent & Late) தாமதமாக வருகைபுரிந்தாலோ கலந்தாய்வில் கலந்து கொள்ள இயலாது.

மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்களின் விண்ணப்பங்களில் தவறுகள் ஏதும் பின்னர் கண்டறியப்படின் தக்க ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும் இணைப்பில் காணும் கோரி காலஅட்டவணையில் விண்ணப்பிக்கப்பட்ட தெரிவித்துள்ளவாறு மாறுதல் ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியல் உரிய தேதியில் வெளியிடப்படும். அப்பட்டியலில் திருத்தம் மற்றும் முறையீடுகள் ஏதும் இருப்பின் அதனை EMIS Online வழியே உரிய விவரங்களை தெரிவித்திடவும், இதனை முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் அலுவலகத்திற்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட EMIS Logind IDஐ பயன்படுத்தி மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்களின் அனைத்து விவரங்களும் சரியாக உள்ளனவா என்பதை உறுதிப்படுத்திடவும் உரிய முறையீடுகள், திருத்தங்கள் இருப்பின் அதனை சரிசெய்திடவும் அறிவுறுத்தப்படுகிறது. மேற்படி திருத்தங்கள் / முறையீடுகள் ஆகியவை மேற்கொள்ளப்பட்டு இறுதி முன்னுரிமைப் பட்டியல் (Final Seniority List & Vacancy List) வெளியிடப்பட்ட பிறகு திருத்தங்கள் / முறையீடுகள் ஏதும் இருப்பின் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

> உபரி எனக் கண்டறியப்பட்ட ஆசிரியர்களில் 40% மாற்றுத்திறனாளி, 40% கண்பார்வையற்றவர் மற்றும் NCC பொறுப்பில் உள்ளவர்களுக்கு மட்டும் பணிநிரவல் கலந்தாய்வில் விலக்களிக்கப்படுகிறது. அதற்கு பதிலாக அடுத்த இளையவரை (Thereby the immediate next junior teacher in the same cadre (same subject) will be deployed) Á‰Ãú பாடத்தில் பணிநிரவலுக்கு உட்படுத்தப்படவேண்டும்.

கலந்தாய்வு அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள்/தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு முதன்மைக் கல்வி அலுவலர்களின் EMIS LOGIN மூலமாகவும் நடத்தப்படும்.

இருக்கை வசதி > இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு பதவி வாரியாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட காலஅட்டவணையின் அடிப்படையில் மாறுதல் கலந்தாய்வுகள் நடைபெறும். கலந்தாய்விற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் (கணினி, மின்இணைப்பு, இணையதளம், போன்ற இதர வசதிகளை) மேற்கொள்ளப்படவேண்டும். கலந்தாய்வுகள் நடைபெறும் அன்றைய நாளில் எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காமல் கலந்தாய்வினை சிறப்பாக நல்லமுறையில் நடத்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மேற்காண் விவரங்களை தங்கள் ஆளுகைக்குட்பட்ட பள்ளிகளுக்கு சுற்றறிக்கையின் வாயிலாக தெரிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் அனைத்து மாவட்ட முதன்மைக் அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது.

CLICK HERE TO DOWNLOAD GENERAL TRANSFER COUNSELING INSTRUCTIONS REG PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.