பணிநிரவல் கலந்தாய்வு பணிகளை மேற்கொள்ளும் CEO அலுவலகப் பணியாளர்களுக்கு Google Meeting - DSE செயல்முறைகள்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, May 30, 2024

பணிநிரவல் கலந்தாய்வு பணிகளை மேற்கொள்ளும் CEO அலுவலகப் பணியாளர்களுக்கு Google Meeting - DSE செயல்முறைகள்!



Google Meeting - DSE Processes for CEO's Office Staff Conducting Staffing Consultations! பணிநிரவல் கலந்தாய்வு பணிகளை மேற்கொள்ளும் CEO அலுவலகப் பணியாளர்களுக்கு Google Meeting - DSE செயல்முறைகள்!

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் பணியாளர் தொகுதி) செயல்முறைகள்

சென்னை-6

ந.க.எண். 48800 / சி3 / இ1/2023 நாள். 30.05.2024

பொருள்: தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப் பணி அரசு மற்றும் நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2023 எண்ணிக்கையின் நிலவரப்படி மாணவர்களின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் உபரி பட்டதாரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்தல் - சார்பு. பார்வை: 1 தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

ந.க.எண்.17929/அ1/இ4/2023 நாள்.6.5.2024

2 தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

ந.க.எண்.48800/சி3/இ1/2023

11.8.2023 மற்றும் 30.5.2024

நாள்.04.08.2023,

பார்வை-1ல் காணும் செயல்முறைகளின் மூலம் 2024-25ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பணிநிரவல் சார்பான வழிகாட்டு பொதுமாறுதல்கள் மற்றும் நெறிமுறைகள் உத்தேச காலஅட்டவணைகள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டது. மேற்காண் பொதுமாறுதல் கலந்தாய்விற்கு முன்னர் உபரி எனக் கண்டறியப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு (1.8.2023 அன்றைய நிலவரப்படி) பணிநிரவல் கலந்தாய்வு வருகின்ற 11.06.2024 அன்று நடைபெறவுள்ளதாக பார்வை-2ல் காணும் 30.5.2024 நாளிட்ட செயல்முறைகளின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி அரசு/நகராட்சி உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உபரிப் பட்டதாரி ஆசிரியர்களை பணிநிரவல் கலந்தாய்வின் போது EMIS இணையத்தில் பதிவேற்றம் செய்தல் மற்றும் இணை இயக்குநரால் (பணியாளர் தொகுதி) உரிய அறிவுரைகள் வழங்குவது சார்பான Google meet 31.05.2024 பிற்பகல் 02.30 மணியளவில் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் மாவட்ட அளவில் (CEO Office) பட்டதாரி ஆசிரியர் பணிநிரவல் கலந்தாய்வு பணிகளை மேற்கொள்ளும் சார்ந்த பிரிவு எழுத்தர்கள், பிரிவு கண்காணிப்பாளர்கள் மற்றும் நேர்முக உதவியாளர் கலந்து கொள்ள உரிய அறிவுரைகள் வழங்குமாறு ஆகியோர் தவறாது அனைத்து மாவட்ட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பெறுநர்

முதன்மைக் கல்வி அலுவலர்கள்

இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி)

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுலர்கள் (மின்னஞ்சல் மூலமாக) CLICK HERE TO DOWNLOAD DSE - Deployment - Google Meeting Proceedings PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.