01.08.2023 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் - உபரி பட்டதாரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்தல் - DSE செயல்முறைகள்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, May 31, 2024

01.08.2023 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் - உபரி பட்டதாரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்தல் - DSE செயல்முறைகள்!As on 01.08.2023 Post Graduate Teacher Vacancies - Recruitment of Surplus Graduate Teachers - DSE Processes! 01.08.2023 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் - உபரி பட்டதாரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்தல் - DSE செயல்முறைகள்!

01.08.2023 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் - உபரி பட்டதாரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்தல் - DSE செயல்முறைகள்!

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் சென்னை 6 ந.க.எண்.48800 / சி3 / இ1 / 2023 நாள்.30.05.2024

பொருள்: தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப் பணி அரசு மற்றும் பார்வை: 1

நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2023 எண்ணிக்கையின் நிலவரப்படி மாணவர்களின்

அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல்-உபரி பட்டதாரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்தல் அறிவுரைகள் வழங்குதல் - சார்பு.

அ.ஆ. எண். 525 பள்ளிக் கல்வித் துறை நாள்.29.12.97 அ.ஆ.எண்.46 பள்ளிக் கல்வித் துறை நாள்.14.5.2004 3 அ.ஆ.எண்.231 பள்ளிக் கல்வித் துறை நாள்.11.08.2010 4 அ.ஆ.எண்.180 பள்ளிக் கல்வித் துறை நாள்.17.7.2012 5 அ.ஆ.எண்.217 பள்ளிக் கல்வித் துறை நாள்.20.6.2019 6 அ.ஆ.எண்.176 பள்ளிக் கல்வித் துறை நாள்.17.12.2021 7 அ.ஆ.எண்.12 பள்ளிக் கல்வித் துறை நாள்.3.2.2022 இவ்வியக்கக இதே எண்ணிட்ட செயல்முறைகள் நாள்.4.8.2023,11.8.2023 9 அனைத்து மாவட்ட முதன்மைக் அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட விவரங்கள் கல்வி 10 தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.17929/அ1/இ4/2023 நாள்.06.05.2024

பார்வை 1 முதல் 7 வரையில் உள்ள அரசாணைகளை பின்பற்றி 01.08.2023 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் (BT Staff Fixation) செய்யப்பட்டு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடமிருந்து விவரங்கள் பெறப்பட்டுள்ளது.

2)இதனைத் தொடர்ந்து பார்வை-10ல் காணும் இயக்குநரின் செயல்முறைகளின்படி 2024-25ஆம் கல்வியாண்டிற்கான பொதுமாறுதல்கள் மற்றும் பணிநிரவல் கலந்தாய்விற்கான உத்தேச காலஅட்டவணை வெளியிடப்பட்டு அதற்கான ஆயத்தப்பணிகளை மேற்கொள்ள தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளும்படி அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

3) மேற்காண் பொதுமாறுதல் கலந்தாய்விற்கு முன்னர் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிநிரவல் கலந்தாய்வு (Deployment Counselling) EMIS Online வழியாக வருகின்ற 11.06.2024 அன்று நடைபெறவுள்ளது. இப்பணிநிரவல் கலந்தாய்வில் கடந்த 01.08.2023 மாவட்டங்களிலிருந்து பெறப்பட்ட விவரங்களின் அடிப்படையில் ஆசிரியருடன் நிலவரப்படி உபரி எனக் கண்டறியப்பட்ட (Surplus Post With Person) பட்டதாரி ஆசிரியர்களை அந்தந்த மாவட்டத்திற்குள் உள்ள காலிப்பணியிடம் / கூடுதல் தேவையுள்ள பள்ளிகளுக்கு பணிநிரவல் (BT Deployment Counselling) மாறுதல் கலந்தாய்வினை அறிவுரைகளை பின்பற்றி நடத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது. 4)உபரி ஆசிரியர்களை கண்டறிதல் நிரப்பத்தகுந்த கீழ்க்காணும் மேற்படி பணியாளர் நிர்ணய அறிக்கையின் அடிப்படையில் ஆசிரியருடன் உபரி எனக் கண்டறியப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்களை (Surplus Post With person) முதலில் பள்ளி வாரியாக, குறிப்பிட்ட பாடத்தில் அப்பள்ளியில் இறுதியாக பணியில் சேர்ந்த நாளின் அடிப்படையில் Station Junior யார் என்பதை கண்டறியப்படவேண்டும். அதன் பின்னர் மாவட்ட அளவில் / பாடவாரியாக உபரி ஆசிரியர்களை தனித்தனியே பட்டியலிட்டு, அப்பட்டியலில் (பட்டதாரி ஆசிரியராக முதலில் பள்ளிக் கல்வித் துறையில் பணியில் சேர்ந்து பணிவரன்முறை செய்யப்பட்ட நாள் / அலகு மாறுதல் எனில் பள்ளிக் கல்வித் துறையில் பணியில் சேர்ந்த நாள்) அடிப்படையில் பள்ளிக் கல்வித்துறையில் பணியில் சேர்ந்த நாளினை கணக்கிற்கொண்டு பணிநிரவல் மாறுதலுக்கான முன்னுரிமைப் பட்டியல் (Subject wise deployment teachers seniority list) தயாரிக்கப்படவேண்டும்.

(பார்வை-5ல் காணும் அரசாணை பத்தி II) i) மற்றும் ii)ல் தெரிவித்துள்ளவாறு பின்பற்றப்படவேண்டும்.

5) உபரி ஆசிரியர்களுக்கு பணிநிரவல் கலந்தாய்வில் முன்னுரிமை (Priority) மனவளர்ச்சி குன்றிய மற்றும் மாற்றுத் திறனாளி குழந்தைகளின் பெற்றோர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள், டையாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்பவர்கள், இருதய, மூளைகட்டி அறுவை சிகிச்சை செய்தவர்கள், புற்றுநோயாளிகள் இராணுவத்தில் பணிபுரிபவர்களின் மனைவியர் விதவைகள் / மனைவியைஇழந்தவர்கள்& 40 வயதை கடந்த திருமணம் செய்து கொள்ளாத பெண் பணியாளர்கள் &சட்டப்படி விவாகரத்து பெற்ற பெண் ஆசிரியை 6) பணிநிரவல் விதிவிலக்கு 40% i) பார்வை-6, 7ல் காணும் அரசாணையில் தெரிவித்துள்ளவாறு கண்பார்வையற்றவர்கள், 40% 40% மாற்றுத்திறனாளிகள் மற்றும் NCC பொறுப்பில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் எவரேனும் உபரியாக கண்டறியப்பட்டு இருப்பின், அவர்களுக்கு விலக்கு அளித்து அவருக்கு பதிலாக அதே பள்ளியில் அதே பாடத்தில் உள்ள அடுத்த பணியில் உள்ள இளையவரை (Next station junior) உபரியாக தெரிவு செய்து பணிநிரவலுக்கு உட்படுத்தப்படவேண்டும்.

ii) மேலும் ஆசிரியருடன் உபரி (Surplus post with person) எனக் கண்டறியப்பட்ட பள்ளியில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம் இருப்பின் அவ்வுபரி பட்டதாரி ஆசிரியரை பணிநிரவலுக்கு உட்படுத்தாமல் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடத்தினை இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு சரண் செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும். 7) காலிப்பணியிடம் / கூடுதல் தேவையுள்ள பணியிடங்கள் நாளது தேதி வரையுள்ள அனைத்து வகை பாடவாரியான பட்டதாரி ஆசிரியர்கள் நிரப்பத் தகுந்த காலிப்பணியிடங்கள் (Eligible Vacancy Post as per fixation) விவரங்களை தயார் செய்திட வேண்டும். மேலும் பணியாளர் நிர்ணய அறிக்கையின்படி கூடுதல் தேவை (Need) என கண்டறியப்பட்ட பள்ளிகளைப் பொறுத்தவரை அதிக எண்ணிக்கையில் பட்டதாரி ஆசிரியர்கள் தேவைப்படும் பள்ளிகளை மட்டும் (ஒரு குறிப்பிட்ட பாடத்திற்கு 2 பணியிடங்களுக்கு மேல் உள்ள கூடுதல் தேவையுள்ள பள்ளிகள்) முன்னுரிமையின் அடிப்படையில் கலந்தாய்வில் காண்பிக்கப்படவேண்டும். மாவட்டத்தில் குறைவான கூடுதல் தேவை (Need) என கண்டறியப்பட்ட பள்ளிகள் இருப்பின் 1 பணியிடம் கூடுதல் தேவையுள்ள பள்ளிகளையும் கலந்தாய்வில் காண்பிக்கப்படவேண்டும்.

8) மேலும் ஒரு சில மாவட்டங்களில் ஒரு குறிப்பிட்ட பாடத்தில் உபரி எனக் கண்டறியப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்வதற்கு போதுமான அளவிற்கு நிரப்பத் தகுந்த காலிப்பணியிடம் / கூடுதல் தேவை பள்ளிகள் இல்லாத சூழல் உள்ளதாக அறிய வருகிறது. அவ்வாறான நிலையில் இக்குறிப்பிட்ட பாடத்தில் உள்ள காலிப்பணியிடம் / கூடுதல் தேவை பணியிடங்களுக்கு ஏற்றவாறு உபரிப் பட்டதாரி ஆசிரியர்களை (அக்குறிப்பிட்ட பாடத்தில் மாவட்ட அளவில் உள்ள ஒட்டு மொத்த மூத்தோர் பட்டியலில் பணியில் இளையவர்களை) மட்டுமே பணிநிரவல் உட்படுத்தப்படவேண்டும். கலந்தாய்விற்கு உதாரணம்:

i) ஒரு குறிப்பிட்ட பாடத்தில் உபரி எனக் கண்டறியப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள்

ii) அக்குறிப்பிட்ட பாடத்தில் நிரப்பத் தகுந்த காலிப் பணியிடம் உள்ளவை

iii) அக்குறிப்பிட்ட பாடத்தில் கூடுதல் பணியிடங்கள் தேவை உள்ளவை

iv)ஆக மொத்தம் (Vacant + Need) 20 08 8 8 = 03 list)

9) மேற்காண் 20 உபரி பட்டதாரி ஆசிரியர்களின் பணிவரன்முறை நாளின் அடிப்படையாகக் கொண்டு தயார் செய்யப்பட்டுள்ள ஒட்டு மொத்த மாவட்ட அளவிலான முன்னுரிமைப் பட்டியலின் (Seniority அடிப்படையில் வ.எண்.1 முதல் 9 வரையுள்ள மூத்த பட்டதாரி ஆசிரியர்களை பணிநிரவலுக்கு உட்படுத்தாமல் வ.எண்.10 முதல் 20 வரையுள்ள உபரிப் பட்டதாரி ஆசிரியர்களை பணிநிரவலுக்கு உட்படுத்தப்படவேண்டும்.

10) உபரி ஆசிரியர்களை EMIS இணையத்தில் பதிவேற்றம் மேற்காண் ஆசிரியருடன் உபரி எனக் கண்டறியப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களை தங்கள் மாவட்டத்தில் நாளது தேதியில் உள்ள நிரப்பத்தகுந்த காலிப்பணியிடம் / கூடுதல் தேவையுள்ள பணியிடங்களின் எண்ணிக்கைக்கேற்றவாறு EMIS website ல் மாவட்ட வாரியாக ஒதுக்கப்பட்ட CEO Login IDயில் Deployment Formatல் பணிநிரவலுக்கு உட்படுத்தப்படவேண்டிய உபரி பட்டதாரி ஆசிரியர்களை பாடவாரியாக Seniority order wise & Priority wise பத்தி-4, 5ல் தெரிவித்துள்ளவாறு வரிசைகிரமமாக பதிவேற்றம் செய்யப்படவேண்டும்.

Deployment Seniority நிர்ணயம் செய்யும் முறை

Priority (as per Par 5) i) ii) Present Post (BTAsst.)Date of Regularsation iii) Unit Transfer 6760flo Unit Transfer join Date in iv) V) School Education Dept. (date of joining) Present Post Regularsation Same date rooflo Date of Birth Date of Birth Same date orooloo Alaphat Name

11) மேலும் பணிநிரவலுக்கு உட்படுத்தாமல் உள்ள மூத்த உபரி பட்டதாரி ஆசிரியர்களை அதேப் பள்ளியில் (உபரி பணியிடத்தில் பணிபுரியும் பள்ளி) தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்காமல் i) தற்காலிக பணிநீக்கத்தில் உள்ளவர்களின் பணியிடங்கள், ii) மகப்பேறு விடுப்பு, iii) நீண்டகால விடுப்பில் உள்ள பணியிடங்கள், மற்றும் iv) தேவையின் அடிப்படையில் உள்ள பள்ளிகளுக்கு இவ்வாசிரியர்களை மாற்றுப்பணி மூலம் பணிபுரிய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்.

12) பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வில் தவறாது கலந்து கொள்ள ஏதுவாக உபரி எனக் கண்டறியப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு முன்கூட்டியே கலந்தாய்வு நடைபெறும் நாள், இடம், நேரம் ஆகியவற்றினை தெரிவித்திட மேற்கொள்ளப்படவேண்டும். உரிய நடவடிக்கை 13) பணிநிரவல் கலந்தாய்வு முடிவுற்ற பிறகு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் அன்று மாலைக்குள் உரிய விவரங்களை c3supdtdse@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் முதன்மைக் கல்வி அலுவலரின் கையொப்பமிட்ட நகலினை விரைவு அஞ்சலிலும் அனுப்பிவைக்குமாறும், மேலும் கூடுதல் தேவைப் பள்ளிகளுக்கு பணிநிரவலில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு அப்பணியிடத்தினை IFHRMSல் உள்ளீடு செய்வதற்கு ஏதுவாக அவர்கள் சார்பான விவரங்களையும் இத்துடன் இணைத்துள்ள படிவத்தில் உடனடியாக அனுப்பிவைத்திட வேண்டும்.

14) மேலும் மேற்காண் அறிவுரைகளை பின்பற்றி பணிநிரவல் கலந்தாய்விற்கு தேவையான கணினி வசதிகள், மின்சார வசதி, இதர முன்னேற்பாடுகளை செய்திடுமாறும், இதில் எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் கலந்தாய்வினை நடத்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

இணைப்பு: பணிநிரவல் மாதிரி ஆணை

பள்ளிக் கல்வி இயக்குநர்

பெறுநர்

படிவங்கள்-1,2

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்

(மின்னஞ்சல் மூலமாக) CLICK HERE TO DOWNLOAD DSE - Deployment Counselling Instructions - PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.